என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • சாலை விரிவாக்கத்துக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மருதாடு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் சந்திரசேகர் (வயது 32), ஏ.சி. மெக்கானிக்.

    இவர், மோட்டார் சைக்கிளில் வந்தவாசி- மேல்ம ருவத்தூர் சாலையில் கல்லாங்குத்து கிராமத்தில் உள்ள ஓம்சக்தி கோவில் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது நிலைதடு மாறி சாலை விரிவாக்கத்துக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானார்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவ மனையிலும் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந் தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆரணி அருகே கலைஞர் தீவு திடலில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    ஆரணி அருகே வெள்ளிரி கிராமத்தில் உள்ள கலைஞர் தீவு திடலில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழா பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம், நகரச் செயலாளர் ஏ.சி.மணிஆகியோர் முன்னிலை வகித்தனர்

    ஒன்றிய செயலாளர் அன்பழகன் வரவேற்றார் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தரணி வேந்தன் தலைமை வகித்தார். தலைமை கழக பேச்சாளர்கள் பொன்னேரி சிவா, ஆவடி பாஸ்கர் பங்கேற்றனர்.

    ஒன்றிய செயலாளர்கள் மோகன், துரை.மாமது, கண்ணமங்கலம் பேரூராட்சி செயலாளர் கோவர்தன், மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயராணி ரவி, மாவட்ட கவுன்சிலர் அருணா குமரேசன், ஒன்றிய கவுன்சிலர் விமலா காசிநாதன், சேவல் ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா தரணி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி பாலமுருகன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இறுதியில் கிளைச் செயலாளர் பிரபு நன்றி கூறினார்.

    • கண்ணமங்கலம் பஸ்நிலையத்தில் நடந்தது
    • பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பஸ் நிலையத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்பு ணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

    பேருராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமை தாங்கினார். துணை தலைவர் குமார் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் மணி, அமிர்தராஜ், சரிதா, மரகதவல்லி, சையத், முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழக அரசின் பேரூராட்சிகள் துறை சார்பில் நடந்த இந்த கலைநிகழ்ச்சியில் விருத்தாசலம் சிவசக்தி கிராமிய கலைக்குழு முனைவர் வி.என.ராணி மற்றும் குழுவினர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு, மக்கும் குப்பை மக்கா குப்பைகள் உள்பட பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தினர். பொதுமக்களும் இந்த நிகழ்ச்சியை ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

    முடிவில் சுகாதார மேற்பார்வையாளர் வெற்றி நன்றி கூறினார்.

    • ஸ்ரீ சர்வ மங்கள காளி அம்மனுக்கு மகா தீபாராதனை
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை அமாவாசை முன்னிட்டு திரளான பெண்கள் 108அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு பழ வகைகள் கொண்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் செய்யப்பட்டது.

    பின்னர் உலக நன்மை வேண்டி கோவில் வளாகத்தில் ஸ்ரீ ஸர்வ மங்கள மகா வேள்வி பூஜை நடைபெற்றது.

    பெண்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்க வேண்டும் என்று தலையில் 108 அக்னி சட்டி ஏந்தி கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதைத்தொடர்ந்து மங்கல மேள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ சர்வ மங்கள காளி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது

    வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    • நரிக்குறவர்கள் தாசில்தாரிடம் மனு
    • 3 ஆண்டுகளாக அளந்து கொடுக்கவில்லை

    போளூர்:

    போளூரில் 100-க்கு மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வாழ்கின்றன. போளூர் அல்லி நகர் நடேசன் தெருவில் சில குடும்பங்களுக்கும் வசூரில் எம்.ஆர் மில் அருகே சில குடும்பங்களுக்கும் பட்டா வழங்கியுள்ளனர்.

    கடந்த 2020-ம் ஆண்டு திருவண்ணாமலை கலெக்டராக இருந்த கந்தசாமி தலைமையில் 29 நரிக்குறவர் குடும்பங்களுக்கு வெண்மணி அருகே இடம் ஒதுக்கப்பட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் 3 வருடங்கள் ஆகியும் இதுவரைக்கும் அந்த இடத்தை அளந்து கொடுக்கவில்லை என்று 29 குடும்பத்தைச் சேர்ந்த நரிக்குறவர்கள் நேற்று தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் முறையிட்டு மனு அளித்தனர்.

    ஏற்கனவே இந்த 29 குடும்பங்களும் தமிழக முதலமைச்சரிடமும் மாவட்ட கலெக்டர் மனு அளித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மே 4-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.
    • மே 4-ந்தேதி இரவு மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழா, வருகிற 24-ந் தேதி பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்குகிறது.

    அதையொட்டி, அன்று மாலை 4 மணி முதல் மாலை 5.25 மணிக்குள் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தக்கால் மூகூர்த்தம் நடைபெறும். அதைத்தொடர்ந்து, 25-ந் தேதி முதல் மே 4-ந் தேதி வரை தினமும் அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறும். இரவு சுவாமிக்கு மண்டகபடி, வீதிஉலா நடை பெறும்.

    விழாவின் நிறைவாக, மே 4-ந்தேதி காலை 10 மணிக்கு அய்யங்குளத்தில் தீர்த்தவாரியும், அன்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகபடியும் நடக்கிறது.

    மேலும் அன்று நள்ளிரவு 12 மணி அளவில் கோவில் 3-ம் பிரகாரத்தில் தங்க கொடி மரம் முன்பு மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • போலீஸ் அதிகாரிகள் தகவல்
    • கடந்த மாத்தில் 76 சாலை விபத்து வழக்குகள் பதிவு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 76 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளது. விபத்துகளில் 23 பேர் இறந்துள்ளனர். 69 பேர் காயமடைந்துள்ளனர்.

    விபத் துகளை குறைப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு கிரண் ஸ்ருதி உத்தர வின் பேரில், மாவட்டம் முழுவதும் விபத்து ஏற்படும். இடங்களில் தடுப்புகள் மற் றும் ஆபத்துகள் பற்றிய எச்ச ரிக்கையை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் போக் குவரத்து கூம்புகள் வைக்கப் பட்டது.

    மேலும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர் கள் மூலமாக பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிக ளுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும், ஹெல்மெட் அணி வதன் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்து மாறு உத்தரவிட்டிருந்தது.

    இந்த நடவடிக்கைகள் மூல மாக மார்ச் மாதத்தில் சாலை விபத்து வழக்குகள் 40 ஆக குறைந்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆகவும், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆகவும் குறைந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    தனியார் துறை நிறுவனங்களும் - தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் இம்மாதம் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை)காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் 15 - க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500- க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    8-ம் வகுப்பு. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, பொறியியல், ஐ.டி.ஐ. பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    முகாமிற்கு வருபவர்கள் தங்களுடைய 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ரேஷன் அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்துகொள்ள வேண்டும்.

    முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம்.

    மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

    எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    • மே 5-ந் தேதி முதல் 20-ந் ேததி வரை திறந்து விடப்படும்
    • பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு பெருமாள்பேட்டை கிராமத்தில் செண்பகத்தோப்பு அணை கட்டப்பட்டுள்ளது.

    இந்த அணையில் தேங்கியுள்ள நீரை விவசாய பயன்பாட்டுக்கு கால்வாய் மூலம் திறந்து விடுவது சம்பந்தமாக பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் செல்வராஜ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் படவேடு, களம்பூர், வெள்ளூர் உள்பட செண்பகத்தோப்பு அணை நீரை பயன்படுத்தும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    வருகிற மே 5-ந்ேததி முதல் 20-ந் தேதி வரை செண்பகத்தோப்பு அணை நீரை கால்வாய் மூலம் விவசாய பயன்பாட்டுக்கு திறந்து விட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது சம்பந்தமாக பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் செல்வராஜ் கூறுகையில்:-

    செண்பகத்தோப்பு அணையில் தற்போது 57 அடி தண்ணீர் உள்ளது, தற்போது விவசாயிகள் கோரிக்கை ஏற்று வருகிற மே 5-ந் தேதி முதல் 20-ந் ேததி வரை கால்வாய் மூலம் விவசாய பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும்.விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொண்டு பயிர்களுக்கு தேவையான தண்ணீர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

    • 25 மனுக்கள் பெறப்பட்டன
    • விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி

    போளூர்:

    போளூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஆரணி, போளூர், கலசப்பாக்கம், ஜமுனாமுத்தூர் ஆகிய 4 தாலுகாவிற்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு போளூர் தாசில்தார் சஜேஷ்பாபு தலைமை தாங்கினார். கலசப்பாக்கம் தாசில்தார் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். போளூர் சமூக நலத்துறை தாசில்தார் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் ஆரணி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் குமரவேல் கலந்து கொண்டு அனைத்து மாற்றுத்திறனாளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்தக் கூட்டத்தில் 25 மனுக்கள் பெறப்பட்டன. அனைத்து மனுக்கள் மீதும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    இதில் போளூர் பேரூராட்சியின் செயல் அலுவலர் முகமது ரிஜிவான், துணைதாசில்தார் தட்சிணாமூர்த்தி, தெய்வநாயகி, வருவாய் ஆய்வாளர் பிரேம் நாத் கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட வழங்க அலுவலர் தேவி நன்றி கூறினார்.

    • புதிதாக கட்டப்படும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பார்வையிட்டார்
    • அதிகாரிகள் உடன் இருந்தனர்

    போளூர்:

    திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் போளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் நடைபெற்று வந்த வளர்ச்சி திட்ட பணிகளை நேற்று பார்வையிட்டார்.

    போளூர் அருகே உள்ள ஏந்துவாம்பாடி கிராமத்தில் புதிதாக கட்டப்படும் அரசு பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டார்.

    அதனையடுத்து முக்குறும்பை அரசு பள்ளி பழைய கட்டிடத்தை பார்வையிட்டார். கஸ்தம்பாடியில் சிமெண்ட் சாலையை பார்வையிட்டு பால்வார்த்து வென்றான் அங்கன்வாடி மையத்தையும் ஆய்வு செய்தார்.

    போளூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திடக்கழிவு மேலாண்மை இடத்தையும், மின்சார தகனம் மேடையும், புதிதாக கட்டப்படும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தையும் பார்வையிட்டார்.

    இதில ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி போளூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தி பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் பி.ஏ வேலு, மேலாளர் அருள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் தேவனாம்பட்டு காமராஜர் தெருவை சேர்ந்தவர் பெருமாள் கூலி தொழிலாளி இவரது 2-வது மகள் புவனேஸ்வரி (வயது 17).

    திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த மாணவி அதே பகுதியை வாலிபரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.

    இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி புவனேஸ்வரி வாலிபரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

    இதற்கு வாலிபர் மறுத்துள்ளார். நான் டைம் பாஸ்க்குதான் காதலித்து வந்ததாகவும் மேலும் நீ வேண்டுமானால் செத்துப் போ என மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த புவனேஸ்வரி வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை சாப்பிட்டார்.

    தகவல் அறிந்த பெற்றோர் உடனடியாக திருவண்ணா மலை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனு மதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புவனேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இது சம்பந்தமாக கலசபாக்கம் போலீசில் இறந்த புவனேஸ்வரின் தந்தை பெருமாள் தன் மகள் சாவுக்கு காரணமான வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×