search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போளூர் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம்
    X

    மாற்று திறனாளிக்கான குறை தீர்வு கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

    போளூர் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம்

    • 25 மனுக்கள் பெறப்பட்டன
    • விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி

    போளூர்:

    போளூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஆரணி, போளூர், கலசப்பாக்கம், ஜமுனாமுத்தூர் ஆகிய 4 தாலுகாவிற்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு போளூர் தாசில்தார் சஜேஷ்பாபு தலைமை தாங்கினார். கலசப்பாக்கம் தாசில்தார் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். போளூர் சமூக நலத்துறை தாசில்தார் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் ஆரணி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் குமரவேல் கலந்து கொண்டு அனைத்து மாற்றுத்திறனாளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்தக் கூட்டத்தில் 25 மனுக்கள் பெறப்பட்டன. அனைத்து மனுக்கள் மீதும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    இதில் போளூர் பேரூராட்சியின் செயல் அலுவலர் முகமது ரிஜிவான், துணைதாசில்தார் தட்சிணாமூர்த்தி, தெய்வநாயகி, வருவாய் ஆய்வாளர் பிரேம் நாத் கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட வழங்க அலுவலர் தேவி நன்றி கூறினார்.

    Next Story
    ×