என் மலர்
உள்ளூர் செய்திகள்

செண்பகத்தோப்பு அணையில் தண்ணீர் திறப்பு
- மே 5-ந் தேதி முதல் 20-ந் ேததி வரை திறந்து விடப்படும்
- பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு பெருமாள்பேட்டை கிராமத்தில் செண்பகத்தோப்பு அணை கட்டப்பட்டுள்ளது.
இந்த அணையில் தேங்கியுள்ள நீரை விவசாய பயன்பாட்டுக்கு கால்வாய் மூலம் திறந்து விடுவது சம்பந்தமாக பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் செல்வராஜ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் படவேடு, களம்பூர், வெள்ளூர் உள்பட செண்பகத்தோப்பு அணை நீரை பயன்படுத்தும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
வருகிற மே 5-ந்ேததி முதல் 20-ந் தேதி வரை செண்பகத்தோப்பு அணை நீரை கால்வாய் மூலம் விவசாய பயன்பாட்டுக்கு திறந்து விட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது சம்பந்தமாக பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் செல்வராஜ் கூறுகையில்:-
செண்பகத்தோப்பு அணையில் தற்போது 57 அடி தண்ணீர் உள்ளது, தற்போது விவசாயிகள் கோரிக்கை ஏற்று வருகிற மே 5-ந் தேதி முதல் 20-ந் ேததி வரை கால்வாய் மூலம் விவசாய பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும்.விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொண்டு பயிர்களுக்கு தேவையான தண்ணீர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.






