என் மலர்
உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற 3 பேர் கும்பல்
- சிறுவனை போலீசார் மடக்கி பிடித்தனர்
- 2 பேரை தேடி வருகின்றனர்
செங்கம்:
செங்கம் அருகே உள்ள பெருமுட்டம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
நேற்று இரவு ஊழியர்கள் டாஸ்மாக் கடையை வழக்கம் போல பூட்டி விட்டு சென்றனர்.
இதை நோட்டமிட்டு மேல்புழுதியூர் பகுதியை சேர்ந்த 3 பேர் கடப்பாறை உள்பட பொருட்களைக் கொண்டு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் டாஸ்மாக் கடை அருகே ரோந்து சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அருகில் சென்று பார்த்தனர். அப்போது திடீரென கடையின் உள்ளே இருந்து 2 பேர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.
இதில் 17 வயது சிறுவனை போலீசார் மடக்கி பிடித்து அவனிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய 2 பேரை செங்கம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story






