என் மலர்
திருவள்ளூர்
- ராமின் தாய் லட்சுமி, கிராம பஞ்சாயத்தார் மீது மணவாளநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
- நெடுஞ்சாலையில் சாலை மறியலால் இரு புறமும் சுமார் 3 கி.மீட்டர் தூரத்திற்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த மதுரா பட்டரை கிராமத்தை சேர்ந்தவர் வரத ராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகள் சங்கீதா பிரியா. இவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ராம் என்பவரை காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு திருமணம் செய்துள்ளார்.
அலைபாயுதே பட பாணியில் இருவரும் அவரவர் வீட்டில் வசித்து வந்தனர். மேலும் செல்போனில் இருவரும் பேசியதால் 3 மாதத்திற்கு பிறகு பெண்ணின் பெற்றோருக்கு திருமணம் செய்தது தெரிய வந்தது.
இதனால் இரு வீட்டாரிடம் சமாதானம் பேச பெண்ணின் பெற்றோர் கிராம பஞ்சாயத்தார் வெங்கடேசன் மற்றும் சங்கர் ஆகியோரை அணுகி உள்ளனர்.
இதனை அறிந்த ராம் மற்றும் சங்கீதா பிரியா இருவரும் வீட்டிற்கு தெரியாமல் மீண்டும் ஓட்டம் பிடித்தனர். இதனால் ராம் பெற்றோரை கிராம பஞ்சாயத்தார் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.
ஆனால் பேச்சு வார்த்தைக்கு வராமல் மீன் கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த ராமனின் தாய் லட்சுமியிடம் பஞ்சாயத்தார் சென்று கேட்டுள்ளனர்.
இதுபற்றி ராமின் தாய் லட்சுமி, கிராம பஞ்சாயத்தார் மீது மணவாளநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து பஞ்சாயத்தார் வெங்கடேசன் மற்றும் சங்கர் ஆகியோரை இன்று அதிகாலை 3 மணி அளவில் போலீசார் கைது செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் சாலை பட்டரை பஸ் நிறுத்தம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா, தாலுகா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா உறுதி அளித்ததையடுத்து சாலை மறியலை கைவிட்டனர். திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலால் இரு புறமும் சுமார் 3 கி.மீட்டர் தூரத்திற்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சத்தரை கிராமத்தை சேர்ந்தவர் சிவா, தீனா.
- நாட்டு குண்டு வீசியதாக அதே பகுதியை சேர்ந்த கோபி, அருண், அபியூத், கமலக் கண்ணன், மணிகண்டன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சத்தரை கிராமத்தை சேர்ந்தவர் சிவா (23). இவரது நண்பர் தீனா (25).
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக்கில் மது வாங்கி சாலையோரம் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கோபி, ராஜேஷ் ஆகிய இருவரும் சிவா, தீனா ஆகியோரிடம் பைக்கில் இருந்தவாறே மது வாங்கி தருமாறு கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிவா, தீனா இருவரும் தங்கள் வீடுகளுக்கு சென்றனர். இந்த நிலையில் சத்தரை மேட்டு காலனி கிராமத்தில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் மர்ம கும்பல் சிவா மற்றும் தீனா வீட்டின் மீது நாட்டு குண்டை வீசி உள்ளனர்.
இதனால் ஏற்பட்ட சத்தத்தில் சிவாவின் தந்தை மாதவனின் காது பாதிக்கப்பட்டது. அவர் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நாட்டு குண்டு வீசிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி திருவள்ளூர்- பேரம்பாக்கம் நெடுஞ்சாலை சத்தரை பேருந்து நிறுத்தம் அருகே சத்தரை மேட்டு காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
தகவல் அறிந்த மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து நாட்டு குண்டு வீசியதாக அதே பகுதியை சேர்ந்த கோபி, அருண், அபியூத், கமலக் கண்ணன், மணிகண்டன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
- தி.மு.க. தமிழ் மொழியை ஒழிக்க முயற்சி செய்வதாக குற்றம் சுமத்தி ஊத்துக்கோட்டையில் பா.ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
- அரசு தொடர்புத் துறை மாநில தலைவர் பாஸ்கர், மாவட்ட செயலாளர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
ஊத்துக்கோட்டை:
தி.மு.க. தமிழ் மொழியை ஒழிக்க முயற்சி செய்வதாக குற்றம் சுமத்தி ஊத்துக்கோட்டையில் பா.ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பூண்டி கிழக்கு ஒன்றிய தலைவர் பினாங்கு ராஜேஷ் முன்னிலை வகித்தார்.
மாநில செயலாளர் சூர்யா, அரசு தொடர்புத் துறை மாநில தலைவர் பாஸ்கர், மாவட்ட செயலாளர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
மாவட்ட பொதுச் செயலாளர் அன்பாலயா சிவகுமார், மூர்த்தி, ரவி துணைத்தலைவர்கள் சோமு ராஜசேகர், சாந்தி மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 30 பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்.
- மணவாளநகர் கபிலர் நகர் பகுதியை சேர்ந்தவர் மீன் வியாபாரி லட்சுமி.
- நேற்று லட்சுமி தனது மகளுடன் கடையில் இருந்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் கபிலர் நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. மீன் வியாபாரி. இவர் பட்டரை அரசு பள்ளி எதிரே மீன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று லட்சுமி தனது மகளுடன் கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த தேவன், பாலாஜி, வெங்கடேசன், வரதராஜன், கவுரிசங்கர் ஆகிய 5 பேரும் லட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினர். மேலும் அவரிடம் இருந்த ரூ.15 ஆயிரத்தை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து மணவாளநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பொன்னேரியை அடுத்த திருஆயர்பாடியில் உள்ள குளிர்பான கடையில் குட்கா, புகையிலை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- கடையில் போலீசார் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த திருஆயர்பாடியில் உள்ள குளிர்பான கடையில் குட்கா, புகையிலை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த கடையில் போலீசார் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து வியாபாரி ஹரிபாபுவை போலீசார் கைது செய்தனர்.
- ராஜன் நேற்று இரவு திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே சாலையை கடக்க முயன்றார்.
- திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி திடீரென ராஜன் மீது மோதியது.
திருவள்ளூர்:
திருவள்ளூர், ஜெயா நகர் பாரதி தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது65). கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி திடீரென ராஜன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவர் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
- மணவாளநகர் போலீசார் நேற்று முன்தினம் கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- போளிவாக்கம் பகுதியை சேர்ந்த 4 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
மணவாளநகர்:
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் போலீசார் நேற்று முன்தினம் கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு போளிவாக்கம் பகுதியை சேர்ந்த சேகர் (வயது 44), கோவிந்தராஜ் (44), லட்சுமிபதி (37), தணிகைவேல் (33) ஆகிய 4 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர்.
- கந்தசஷ்டி விழா நாளை தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடை பெறுகிறது.
- திருத்தணி கோவிலில் சூரசம்ஹாரத்திற்கு பதில் புஷ்பாஞ்சலி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆனால் திருத்தணி முருகன் கோவிலில் தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று காலை திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி மூலவருக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நாளை தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடை பெறுகிறது. இதையொட்டி தினந்தோறும் மூலவர் முருகப்பெருமான் புஷ்ப அலங்காரம், பட்டு அலங்காரம், தங்கக்கவசம், திருவாபரணம், சந்தன காப்பு உள்ளிட்ட அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வருகிற 30-ந்தேதி மாலையில் சண்முகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், 31-ந்தேதி காலையில் உற்சவர் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.
அறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கந்த சஷ்டி விழா நடை பெறும் நாட்களில் காலை மற்றும் மாலை இரு வேளைகளில் தேவாரபாராயணம் நடைபெறுகிறது.
- திருவள்ளூரை அடுத்த புதுமாவிலங்கை எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்.
- மாற்றுத்திறனாளி நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த புதுமாவிலங்கை எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது38). மாற்றுத்திறனாளியான இவர் கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே செல்போன் ரீசார்ஜ் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
சுரேசுக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை சுரேஷ் புதுமாவிலங்கை, கடம்பத்தூர் - பேரம்பாக்கம் நெடுஞ்சாலை வழியாக சென்றார்.
திடீரென அவர் தனது மூன்று சக்கர மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நடுரோட்டில் நின்றபடி தயாராக பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் கடம்பத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசர் விரைந்து வந்து சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடன் கொடுத்தவர்கள் மிரட்டியதால் சுரேஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடன்தொல்லை காரணமாக மாற்றுத்திறனாளி நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மனோஜ் குமார் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் பானி பூரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
- வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள அம்மம்பாக்கம் கிராமம், கண்ணையா நகரில் வசித்து வருபவர் மனோஜ் குமார். தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் பானி பூரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் காலையில் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் வெளியில் சென்றார். பின்னர் மாலையில் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 5 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
இதுகுறித்து மனோஜ்குமார் வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்குள்ள தடயங்களை பதிவு செய்தனர்.
- அரசுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு புகார்கள் வந்தது.
- பொக்லைன் எந்திரம் உதவியுடன் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை இடித்து அகற்றி நிலத்தை மீட்டனர்.
சோழவரம் அடுத்த பூதூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு புகார்கள் வந்தது. அவரது உத்தரவின் பேரில் பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து மண்டல தாசில்தார் பாரதி வருவாய் ஆய்வாளர் சந்தானலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் ரவீந்திரன் ஆகியோர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை இடித்து அகற்றி நிலத்தை மீட்டனர். பின்னர் அந்த இடத்தில் அரசுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
- ஊத்துக்கோட்டை அருகே உள்ள கொல்லபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லம்மாள்.
- போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கொல்லபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லம்மாள்(வயது 75 ). கணவரை இழந்த இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் எல்லம்மாள் வீட்டில் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்து இருந்த ஒரு கம்மல் மட்டும் கொள்ளை போய் இருந்தது.
இதுகுறித்து பென்னாலூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் விசாரணை நடத்தினர். இதில் அதே கிராமத்தை சேர்ந்த ஜீவா என்ற வாலிபர் எல்லாம்மாளை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு நகையை திருடி சென்று இருப்பது தெரிந்தது. இதையடுத்து ஜீவாவை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கூறும்போது நள்ளிரவில் எல்லாம்மாளின் வீட்டில் நுழைந்து பீரோவை திறந்து கொள்ளையில் ஈடுபட்டபோது அவர் பார்த்துவிட்டு தடுத்தார். எனவே இதை வெளியே யாரிடமாவது சொல்லி விடுவார் என்ற பயத்தில் எல்லாம்மாளை கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் அவர் அணிந்து இருந்த ஒரு கம்மலை மட்டும் கழற்றிவிட்டு தப்பி ஓடிவிட்டேன் என்று தெரிவித்து உள்ளார்.
இந்த கொலையில் வேறுயாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






