என் மலர்
திருவள்ளூர்
- அதிமுக சார்பில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் வழங்கினார்.
- பொன்னேரி நகராட்சி துணைத் தலைவர் விஜயகுமார் முன்னாள் தலைவர் சங்கர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பொன்னேரி:
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கந்த சஷ்டி விழாவின் ஆறாம் நாள் இன்று ஆயிரம் பேருக்கு அன்னதானம்.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் வழங்கினார். பொன்னேரியில் உள்ள அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயத்தின் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான இன்று நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார்.
பின்னர் நகர செயலாளர் செல்வகுமார் ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னதான விழாவில் கலந்து கொண்டு சுமார் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மீஞ்சூர் ஒன்றிய கழக செயலாளர் நாலூர் முத்துக்குமார் பொன்னேரி நகராட்சி துணைத் தலைவர் விஜயகுமார் முன்னாள் தலைவர் சங்கர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- 120 பேருக்கு உடனடியாக கிட்டபார்வை கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
- கிட்டப்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக உடனடியாக கண்ணாடி வழங்கப்பட்டது.
மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு ஊராட்சியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஜே.எஸ்.டபிள்யூ. பவுண்டேஷன் ஏற்பாட்டில் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி அப்பாவு, சேர்மன் ரவி தலைமையில் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தூரப்பார்வை, கிட்டப்பார்வை பரிசோதனை செய்யப்பட்டு கிட்டப்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக உடனடியாக கண்ணாடி வழங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 200க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்த நிலையில் 120 பேருக்கு உடனடியாக கிட்டபார்வை கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
- கவுன்சிலர்கள் அனைவரும் பொன்னேரி பாதாள சாக்கடை திட்ட பணிகள் எப்போது முடிக்கப்படும்.
- பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடையாததால் ஆலாடு சாலை வழியாக செல்லும் பேருந்து 5 மாதமாக வரவில்லை.
பொன்னேரி நகராட்சி மன்ற உறுப்பினர்கள் மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையிலும் ஆணையாளர் ராஜலட்சுமி, நகர மன்ற துணைத் தலைவர் விஜயகுமார் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கவுன்சிலர்கள் அனைவரும் பொன்னேரி பாதாள சாக்கடை திட்ட பணிகள் எப்போது முடிக்கப்படும்? பொது மக்களுக்கு பதில் கூற எங்களால் முடியவில்லை. தோண்டப்பட்ட இடங்களில் பள்ளங்கள் சரியாக மூடப்படாமலும் மழைநீர் தேங்கியும் காணப்படுகிறது. தற்காலிக சாலை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடையாததால் ஆலாடு சாலை வழியாக செல்லும் பேருந்து 5 மாதமாக வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாவதாக கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த ஆணையாளர் ராஜலட்சுமி, நகர மன்ற தலைவர் பரிமளம் ஆகியோர் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
- தொழிலாளி பலியான சம்பவம் அப்பதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், வெள்ளியூர் கிராமம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் தண்டபாணி (36) கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வர தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் உள்ள பஜார் வீதிக்கு சென்றார். தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் சத்திரம் என்ற இடத்திற்கு சென்ற போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் திடீரென பிரேக் போட்டார்.இதனால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- மாணவியின் பெற்றோர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
- பிரவீனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போரூர்:
திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் பகுதியை சேர்ந்த தம்பதிகளின் 17வயது மகள் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
மாணவிக்கு திருநின்றவூர் பகுதியை சேர்ந்த ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் வாலிபர் பிரவீன் (வயது20) என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மகளின் காதல் விவகாரம் பற்றி தெரிந்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மாணவியை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் பகுதியில் உள்ள அவரது மாமா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தனது காதலி மதுரவாயலில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பது தெரிந்து நேற்று காலை அங்கு சென்ற பிரவீன் மாணவியை வலுக்கட்டாயமாக தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி அழைத்து சென்று திருவேற்காடு கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து பிரவீனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- வெங்கடேசனின் வீட்டில் சிறுமியும், அவரது தாயாரும் வாடகைக்கு வசித்து வந்தனர்.
- வெங்கடேசன் கொத்தனராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 மனைவிகள் உள்ளனர்.
ஆவடி:
சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகரை சேர்ந்தவர் 35 வயது பெண். இவருக்கு 15 வயதான மகள் இருக்கிறார். இந்த 15 வயது சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அவரது தாயார் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமிக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் இதுபற்றி சிறுமியின் தாயாரிடம் தெரிவித்தனர். இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி தாயார் சிறுமியிடம் விசாரித்தார். அப்போது சிறுமி தான் கர்ப்பமானதற்கு வீட்டின் உரிமையாளர் வெங்கடேசன் (வயது40) என்பவரே காரணம் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாய் ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வெங்கடேசனை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
வெங்கடேசனின் வீட்டில் சிறுமியும், அவரது தாயாரும் வாடகைக்கு வசித்து வந்தனர். வெங்கடேசன் கொத்தனராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 மனைவிகள் உள்ளனர். ஆனால் குடும்ப தகராறு காரணமாக 2 மனைவிகளையும் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருடன் தாய் விஜயா (67), சகோதரி லலிதா (42) ஆகியோர் தங்கி உள்ளனர்.
வீட்டு உரிமையாளர் என்பதால் சிறுமி, வெங்கடேசன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார். இதில் சிறுமி மீது வெங்கடேசனுக்கு மோகம் ஏற்பட்டது. ஒருநாள் வெங்கடேசன், சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது போல் வெங்கடேசனின் உறவினர் வேங்கையன் (36) என்பவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதே போல் வெங்கடேசனின் மேலும் 2 நண்பர்களும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அவளது வாழ்க்கையை கொடூரமாக சீரழித்துள்ளனர்.
வெங்கடேசன் இதே போல் பலமுறை மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இதற்கு வெங்கடேசனின் தாயார் விஜயா, சகோதரி லலிதா ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ள அதிர்ச்சி தகவலும் வெளியானது. இதில் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதையடுத்து ஆவடி மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வெங்கடேசன், வேங்கையன், உடந்தையாக இருந்த விஜயா, லலிதா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவர்கள் 4 பேரும் திருவள்ளூர் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம்.
- மத்திய அரசு திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய மந்திரி ஹர்தீப் சிங்பூரி கலந்து கொண்டு மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அனைத்து அரசு துறை அலுவலர்களுக்கும் எடுத்துரைத்தார்.
அதைத்தொடர்ந்து இக்கூட்டத்தில் பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளிகள் மற்றும் பிரதம மந்திரியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனடைந்த பயளாளிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
மத்திய அரசு திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
- மோவூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
- தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கலந்துகொண்டு கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உள்ள மோவூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன், திருத்தணி எம்.எல்.ஏ. எஸ். சந்திரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிறிஸ்டி, பூண்டி ஒன்றிய குழு துணை தலைவர் மகாலட்சுமி மோதிலால் முன்னிலை வகித்தனர்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கலந்துகொண்டு கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் டாக்டர் மு.ராஜேந்திரன், பூண்டி வட்டார கால்நடை மருத்துவர்கள் சரவண குமார், ஹரிஹரன் சிவசங்கர் பலர் கலந்து கொண்டனர்.
- ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டிலில் குளிர்பானங்களை அடைத்து விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்.
- விளையாட்டு வீரர்கள் மற்றும் நடிகர்கள் வணிக நோக்காக பார்க்காமல் சுய பரிசோதனை செய்து பின்னர் விளம்பரத்தில் நடிக்க வேண்டும்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த தடப்பெரும் பாக்கம் வெள்ளகுளம்சாலையில் ஸ்ரீ செந்தூர் முருகன் டைல்ஸ் அண்ட் டோர்ஸ் ஷோரூம் திறப்பு விழா நடந்தது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பங்கேற்று ஷோரூமை திறந்து வைத்தார்.
குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை விற்க கூடாது என்பதில் வணிகர் சங்க பேர மைப்பினர் உறுதியாக உள்ளனர். அதனையும் மீறி விற்பனை செய்பவர்களுக்கு வணிகர் சங்க பேரமைப்பு ஆதரவு அளிப்பதில்லை. மின் கட்டணமும், கட்டிட வரியும் அதிகளவில் உயர்ந்துள்ளது. மின் கட்டணத்தையும், கட்டிட வரியையும் தமிழக அரசு குறைக்க வேண்டும். சிறுகுறு தொழில் பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்க வேண்டும்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டிலில் குளிர்பானங்களை அடைத்து விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும். நாடு முழுவதும் பொருட்களை பேக்கிங் செய்வது மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஒரே சட்டம் அமல்படுத்தி வணிகர்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பத்தை போக்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
விளையாட்டு வீரர்கள் மற்றும் நடிகர்கள் வணிக நோக்காக பார்க்காமல் சுய பரிசோதனை செய்து பின்னர் விளம்பரத்தில் நடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஷோரூம் திறப்பு விழாவில் விஜய ராஜேந்திரன் நாடார், கனகராஜ் சோமசுந்தரம், குணசேகர் முத்துக்குமார், சென்னை மாவட்ட தலைவர் எட்வர்ட், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் நடராஜன், நந்தன், முத்துப்பாண்டியன், முருகன், பால் பாண்டி, வேலு ஆசாரி, ஏகாம்பரநாதன், பாலகி ருஷ்ணன் கர்ணா யுவராஜ் அப்துல்காதர் வெல்டன் வாசகர் சந்தனகுமார், சுரேஷ்குமார், ஜிவிஎன் குமார், மீஞ்சூர்ரியாஸ், முகமது அலி, செல்லத்துரை, துரையரசன், பகிர்முகமது, மாதர்பாக்கம் பாலமுருகன், அஜிஸ் அகமது உள்பட பேரமைப்பு நிர்வாகிகள் ஏராளனோர் கலந்து கொண்டனர்.
- முரளியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று அலமாதியில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
- பலத்த காயமடைந்த முரளி சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்குட்பட்ட எடப்பாளையம் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் ராஜகோபாலன். இவரது மகன் முரளி (வயது 26). பால் வியாபாரி.
இவருக்கும் அலமாதி சாந்தி நகர் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்த திலீபன் (25) என்பவருக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வாய்த்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் நேற்று திலீபன் அவரது ஆதரவாளர்கள் 5 பேருடன் எடப்பாளையத்திற்கு சென்று மாடு மேய்த்துக் கொண்டிருந்த முரளியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று அலமாதியில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த முரளி சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து திலீபன் (25), நவீன் (24), தீபன் (41), ஆறுமுகம் (60) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாட்டில் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்க வேண்டும்.
- மின் கட்டணம், கட்டிட வரி உள்ளிட்டவற்றை தமிழக அரசு குறைக்கவேண்டும் என்றார் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் வெள்ளகுளம்சாலையில் ஸ்ரீ செந்தூர் முருகன் டைல்ஸ் & டோர்ஸ் ஷோரூம் திறப்பு நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியதாவது:
இரண்டு ஆண்டுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது வணிகர்கள் மெல்ல மீண்டு வருகின்றனர். அதிகாரிகள் குழுவினர் கடைகளில் பொருட்களை வாங்கி ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்ற சோதனை முறையை கைவிட வேண்டும்.
அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடங்களில் வீட்டின் உரிமையாளர்கள் வரி செலுத்தவில்லை என்பதால் அவர்களிடம் வாடகை செலுத்தி வரும் கடைக்கும் சேர்த்தே சீல் வைக்கும் நடவடிக்கையை தவிர்த்து கடை உரிமையாளரிடம் நேரடியாக வாடகையை வசூலித்துக் கொண்டு சீல் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
14 வகையான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பதில் வணிகர்கள் உறுதியாக உள்ளனர்.
திடீரென கடை சீல் வைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.
குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கக்கூடாது என்பதில் வணிகர் சங்க பேரமைப்பினர் உறுதியாக உள்ளனர். அதனையும் மீறி விற்பனை செய்பவர்களுக்கு வணிகர் சங்க பேரமைப்பு ஆதரவு அளிப்பதில்லை.
மின் கட்டணமும், கட்டிட வரியும் அதிகளவில் உயர்ந்துள்ளதால் மின் கட்டணத்தையும், கட்டிட வரியையும் தமிழக அரசு குறைக்க வேண்டும்.
சிறுகுறு தொழில் பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்க வேண்டும்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டிலில் குளிர்பானங்களை அடைத்து விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்.
நாடு முழுவதும் பொருட்களை பேக்கிங் செய்வது மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஒரே சட்டம் அமல்படுத்தி வணிகர்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பத்தை போக்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
தற்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதிலும் பல நடிகர்கள் நடித்ததாகவும், அதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்கள் மற்றும் நடிகர்கள் என விளம்பரங்களில் நடிப்பவர்கள் வணிக நோக்காக பார்க்காமல் சுய பரிசோதனை செய்து பின்னர் விளம்பரத்தில் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதில் விஜய ராஜேந்திரன் நாடார், கனகராஜ் சோமசுந்தரம், குணசேகர் முத்துக்குமார், சென்னை மாவட்ட தலைவர் எட்வர்ட் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், நடராஜன், நந்தன், முத்துப்பாண்டியன், முருகன், பால் பாண்டி, வேலு ஆசாரி, ஏகாம்பரநாதன், பாலகிருஷ்ணன், கர்ணா, யுவராஜ், அப்துல்காதர், வெல்டன் வாசகர் சந்தனகுமார், சுரேஷ்குமார், ஜிவிஎம் குமார், மீஞ்சூர் ரியாஸ், முகமது அலி, செல்லத்துரை, துரையரசன், பகிர்முகமது, மாதர்பாக்கம் பாலமுருகன், அஜிஸ் அகமது உள்பட பேரமைப்பு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
முன்னதாக நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து இடங்களில் உள்ள கடைகளுக்கு வாடகையை வரன்முறைப்படுத்தும் சீரமைப்பு குழுவில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பிற்கு பிரதிநித்துவம் அளித்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு விக்கிரமராஜா நன்றி தெரிவித்து கொண்டார்.
பொன்னேரி:
ஆந்திர மாநிலம் சட்டக் கல்லூரியில் பயிலும் தமிழக மாணவர்கள் திருப்பதி அருகே வடமலைப்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்களால் தாக்கப்பட்டதை கண்டித்தும் அவர்களை கைது செய்ய கோரியும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பொன்னேரி சார்பு நீதிமன்றம் அருகில் வழக்கறிஞர் லெனின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.






