என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து தொழிலாளி பலி
    X

    நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து தொழிலாளி பலி

    • தொழிலாளி பலியான சம்பவம் அப்பதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், வெள்ளியூர் கிராமம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் தண்டபாணி (36) கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வர தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் உள்ள பஜார் வீதிக்கு சென்றார். தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் சத்திரம் என்ற இடத்திற்கு சென்ற போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் திடீரென பிரேக் போட்டார்.இதனால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.

    இதுகுறித்து வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×