என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- கவுன்சிலர்கள் கோரிக்கை
- கவுன்சிலர்கள் அனைவரும் பொன்னேரி பாதாள சாக்கடை திட்ட பணிகள் எப்போது முடிக்கப்படும்.
- பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடையாததால் ஆலாடு சாலை வழியாக செல்லும் பேருந்து 5 மாதமாக வரவில்லை.
பொன்னேரி நகராட்சி மன்ற உறுப்பினர்கள் மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையிலும் ஆணையாளர் ராஜலட்சுமி, நகர மன்ற துணைத் தலைவர் விஜயகுமார் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கவுன்சிலர்கள் அனைவரும் பொன்னேரி பாதாள சாக்கடை திட்ட பணிகள் எப்போது முடிக்கப்படும்? பொது மக்களுக்கு பதில் கூற எங்களால் முடியவில்லை. தோண்டப்பட்ட இடங்களில் பள்ளங்கள் சரியாக மூடப்படாமலும் மழைநீர் தேங்கியும் காணப்படுகிறது. தற்காலிக சாலை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடையாததால் ஆலாடு சாலை வழியாக செல்லும் பேருந்து 5 மாதமாக வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாவதாக கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த ஆணையாளர் ராஜலட்சுமி, நகர மன்ற தலைவர் பரிமளம் ஆகியோர் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.






