என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே கடன் தொல்லையால் மாற்றுத்திறனாளி நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை
    X

    திருவள்ளூர் அருகே கடன் தொல்லையால் மாற்றுத்திறனாளி நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை

    • திருவள்ளூரை அடுத்த புதுமாவிலங்கை எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்.
    • மாற்றுத்திறனாளி நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த புதுமாவிலங்கை எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது38). மாற்றுத்திறனாளியான இவர் கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே செல்போன் ரீசார்ஜ் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    சுரேசுக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை சுரேஷ் புதுமாவிலங்கை, கடம்பத்தூர் - பேரம்பாக்கம் நெடுஞ்சாலை வழியாக சென்றார்.

    திடீரென அவர் தனது மூன்று சக்கர மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நடுரோட்டில் நின்றபடி தயாராக பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் கடம்பத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசர் விரைந்து வந்து சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடன் கொடுத்தவர்கள் மிரட்டியதால் சுரேஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடன்தொல்லை காரணமாக மாற்றுத்திறனாளி நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×