என் மலர்
திருப்பூர்
- ருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விசைத்தறி கூடங்கள், கறிக்கோழி உற்பத்தி, விவசாயம், கல்குவாரி, கிரஷர் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடந்து வருகிறது.
- 2012 ம் ஆண்டு முதல் 2023 நடப்பு ஆண்டு வரை இதுவரை மொத்தம் ஆயிரத்து 117 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விசைத்தறி கூடங்கள், கறிக்கோழி உற்பத்தி, விவசாயம், கல்குவாரி, கிரஷர் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடந்து வருகிறது. திருப்பூர், மதுரை, பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களின் இணைப்பு சாலைகள், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகின்றன. வெளி மாநில வாகனங்கள், கன்டெய்னர்கள், டிப்பர், மணல் லாரிகள், சரக்கு வேன்கள், ஆம்புலன்சுகள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள், பல்லடம் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து செல்கின்றன.
கோவை வழியாக கேரள மாநிலத்தை இணைப்பதால், சரக்கு போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக பல்லடம் உள்ளது. வாகன போக்குவரத்துக்கு இணையாக விபத்துகள், உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டி ரிங் ரோடு, கரூர்- கோவை பசுமை வழிச்சாலை திட்டங்கள் அறிவிக்கப்பட்டு கிடப்பில் உள்ளன. சமீபத்தில் பல்லடம் - காரணம்பேட்டை வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் இது பெரிய அளவில் பயனளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பல்லடம் வட்டாரத்தில் நடந்த வாகன விபத்துகள், மற்றும் உயிரிழப்புகள் புள்ளி விவரங்களை கேட்டால் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.
இதில் 2012 ம் ஆண்டு முதல் 2023 நடப்பு ஆண்டு வரை இதுவரை மொத்தம் ஆயிரத்து 117 பேர் உயிரிழந்துள்ளனர். சராசரியாக ஆண்டுக்கு 110 பேர் வரை வாகன விபத்துகளில் மட்டும் உயிரிழக்கின்றனர். இதனால் எண்ணற்ற குடும்பங்கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பல்லடத்தை காட்டிலும் குறைந்த அளவு போக்குவரத்து கொண்ட தாராபுரத்தில் கூட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பல்லடம் தொகுதி மக்களின் பல ஆண்டு கால கோரிக்கையான மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது கானல் நீராகவே உள்ளது. எனவே சந்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், வாகன விபத்துக்களை தவிர்க்கவும் விரைவில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பல்லடம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொங்கல் நகரத்தில் குடிமங்கலம் வட்டார வேளாண் துறை சார்பில், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- வேளாண் உதவி அலுவலர் செந்தில்குமார் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொங்கல் நகரத்தில் குடிமங்கலம் வட்டார வேளாண் துறை சார்பில், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் வேளாண் உதவி இயக்குநர் வசந்தா, வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்கள், மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார். மேலும் மாவட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:-
அன்றாட உணவில் அரிசி, கோதுமையை அதிக அளவு சேர்த்து கொள்கிறோம். இதிலிருந்து கார்போஹைட்ரேட் சத்து மட்டுமே அதிகமாக கிடைக்கிறது. ஆனால் மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களான சோளம், கம்பு, ராகி, சாமை, திணை, வரகு மற்றும் குதிரைவாலி ஆகியவற்றில் காணப்படுகிறது. எனவே ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களை நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவற்றில் புதிய ரகங்களாக சோளம் கோ-32, கம்பு ரகங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதிக சத்துக்கள் , மகசூல், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
சிறுதானிய பயிர்கள் சாகுபடிக்கு கோடை உழவு, விதைநேர்த்தி, ஊட்டமேற்றிய தொழு உரம், உயிர் உரம், நுண்ணுாட்டச்சத்து மற்றும் உயிரியல் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் பேசினார். மேலும் உழவர் கடன் அட்டை குறித்து வேளாண் அலுவலர் சுனில்கவுசிக் பேசினார். முகாமில் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் சாகுபடி குறித்த விரிவான கையேடு, பேட்டரி தெளிப்பான், இடுபொருட்கள் போன்றவை வழங்கப்பட்டன. இதில் வேளாண் உதவி அலுவலர் செந்தில்குமார் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
- தென்னந்தோப்புகளிலும், வட்டப்பாத்திகளிலும், பசுந்தாள் உரங்களை சாகுபடி செய்வது வழக்கமாக உள்ளது. குறிப்பாக சணப்பு பரவலாக பயிரிடப்படுகிறது.
- நன்கு வளர்ந்த சணப்பு பயிர் பூக்கும் முன் மண்ணுடன் சேர்த்து உழுவதால் 5 முதல் 6 வாரத்துக்குள் நன்றாக மக்கி பயிருக்கு நல்ல உரமாக மாறி விடும்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஆகிய வட்டாரங்களில் உள்ள சுற்றுப்பகுதிகளில் கிணற்றுப்பாசனத்துக்கு பல ஆயிரம் ஏக்கரில் ஆண்டு முழுவதும் பல்வேறு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய விளைநிலங்களில், ஒரே மாதிரியான சாகுபடிகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதால் மண் வளம் குறைந்து விளைச்சலும் பாதிக்கிறது. இதைத்தவிர்க்க சில விவசாயிகள் சாகுபடிக்கு முன்பாக மண் வளத்தை மேம்படுத்த பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி செய்கின்றனர்.
தென்னந்தோப்புகளிலும், வட்டப்பாத்திகளிலும், பசுந்தாள் உரங்களை சாகுபடி செய்வது வழக்கமாக உள்ளது. குறிப்பாக சணப்பு பரவலாக பயிரிடப்படுகிறது. காற்றில் உள்ள தழைச்சத்தை தனது வேர் முடிச்சுகளில் உள்ள நுண்ணுயிர்கள் வாயிலாக சேமிக்கும் திறன் கொண்ட சணப்பு பயிர் விதைத்த 45 நாட்களில் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு வேகமாக வளர்ந்து ஏக்கருக்கு 4 முதல் 5 டன் தழை உரத்தையும் சுமார் 15 கிலோ தழைச்சத்தையும் தரும் தன்மை கொண்டதாகும். நன்கு வளர்ந்த சணப்பு பயிர் பூக்கும் முன் மண்ணுடன் சேர்த்து உழுவதால் 5 முதல் 6 வாரத்துக்குள் நன்றாக மக்கி பயிருக்கு நல்ல உரமாக மாறி விடும்.
சணப்பு பயிர் சாகுபடி செய்யப்பட்ட தென்னந்தோப்புகளில் மண் அரிப்பு தடுக்கப்படும் என வேளாண்துறை சார்பில் தெரிவிக்கின்றனர். எனவே வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை சீசனில், சணப்பு பயிரிட்டு செடி வளர்ந்ததும், உழுது மண் வளத்தை மேம்படுத்த விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அந்த சீசன் சமயங்களில் சணப்பு விதை கிடைப்பதில்லை. எனவே வேளாண்துறை சார்பில் குறிப்பிட்ட சீசன்களில் சணப்பு விதைகளை இருப்பு வைத்து வினியோகிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில், மின் விபத்துக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
- ஈரக்கையால் அல்லது வெறும் காலுடன் மின்சாரம் சார்ந்த எதையும் தொடக்கூடாது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில், மின் விபத்துக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜாத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் தென்பட்டால், பொதுமக்கள் அருகில் செல்லக்கூடாது. மின் கம்பி தண்ணீரில் கிடந்தால் அந்த இடத்தில் இருந்து உடனடியாக வெளியேறி பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும். மேலும் இதுகுறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மின் சாதனங்கள் மழை நீரில் மூழ்கினால், உடனடியாக மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். ஈரக்கையால் அல்லது வெறும் காலுடன் மின்சாரம் சார்ந்த எதையும் தொடக்கூடாது. மின்னல் மற்றும் இடியின் போது டி.வி., கம்ப்யூட்டர், மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. இடி, மின்னலின் போது மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மரங்கள், உலோகக்கம்பி வேலிகள், திறந்த நிலையிலுள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் நிற்ககூடாது. சார்ட் சர்க்யூட் பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்.மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை இயக்கும் போது உலர்ந்த, ரப்பர் பாய்களின் மீது நிற்க வேண்டும். துணிகளை உலர வைக்க மின் இழுவை கம்பிகள் மற்றும் மின்கம்பங்களை தாங்கிகளாக பயன்படுத்த கூடாது. மேலும் மின் விபத்துக்கள் குறித்து 'மின்னகம்' 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- சோதனையில் சிக்கும் பட்டாசு ரகங்களை பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்கின்றனர்.
திருப்பூர்:
நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நிறைய பேர் கிப்ட் பாக்ஸ், பட்டாசு பண்டல்களை வழக்கமாக எடுத்துச்செல்லும் பைகளில் எடுத்து கொண்டு ரெயிலில் பயணம் செய்கிறார்கள். இது விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது. இதனால்c சோதனையில் சிக்கும் பட்டாசு ரகங்களை பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்கின்றனர். மேலும் ெரயில்வே அதிகாரிகள் கூறுகையில், இதுகுறித்து, எச்சரிக்கை அறிவிப்புகளை ஏற்கனவே அறிவித்துள்ளோம். அதையும் மீறி பட்ாசுகளை ரெயிலில் கொண்டு செல்வதால், தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த பரிசோதனை மேலும் தொடரும் என்றனர்.
- விழாவிற்கு தாராபுரம் ஆர்.டி.ஓ. செந்தில்அரசன் தலைமை தாங்கினார்
- உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முத்தூர்:
திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட செங்கோடம்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி, நகப்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி ஆகியவற்றில் ஊராட்சி ஒன்றிய சேமிப்பு நிதி திட்டத்தின் கீழ் தலா ரூ.7 லட்சத்து 43 ஆயிரம் என மொத்தம் ரூ.14 லட்சத்து 86 ஆயிரத்தில் இருப்பு அறையுடன் கூடிய புதிய சமையலறை கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது.
மேலும் மோளக்கவுண்டன்புதூரில் அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு வளர்ச்சி திட்ட நிதியின் கீழ் ரூ.20 லட்சத்திலும், ஊடையத்தில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்திலும், தலா 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு குடிநீர் குழாய்கள் விஸ்தரிப்பு செய்யப்பட உள்ளது.
இதன்படி இப்பகுதிகளில் மொத்தம் ரூ.46 லட்சத்து 86 ஆயிரத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா மற்றும் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு தாராபுரம் ஆர்.டி.ஓ. செந்தில்அரசன் தலைமை தாங்கினார். முத்தூர் பேரூராட்சி தலைவர் எஸ்.சுந்தராம்பாள், துணைத் தலைவர் மு.க.அப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதிய சமையலறை கட்டிடங்களை திறந்து வைத்தும், புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டுவதற்கான பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டியும் தொடங்கி வைத்தார்.
விழாவில் வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் கே.சந்திரசேகரன், முத்தூர் பேரூர் செயலாளர் செண்பகம்பாலு, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மணிகண்டன், செயல் அலுவலர் ஆல்பர்ட் தியாகராஜ், வெள்ளகோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்வரன், ராகவேந்திரன், உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த ஒரு ஆண்டு காலமாக விசைத்தறி காடா துணி ஏற்றுமதி தேக்கம் அடைந்ததால் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு துணிக்கு விலை கிடைக்கவில்லை.
- தமிழ்நாடு அரசு உயர்த்திய மின் கட்டணத்தை உடனடியாக குறைத்து பழைய மின் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும்.
திருப்பூர்:
தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட கழிவுபஞ்சு பஞ்சாலை(ஓ.இ.) மில்கள் இயங்கி வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 25 லட்சம் கிலோ நூல்கள் கழிவு பஞ்சில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு நேரடியாகவும், ஒரு லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
கழிவு பஞ்சு விலை ஏற்றம் மற்றும் குறைந்த நூல் விலை போன்ற காரணங்களால் ஓ.இ., மில்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை உற்பத்தி நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். அதன்படி இன்று முதல் சில ஆலைகள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் ஓ.இ. மில்கள் இயங்கி வருகின்றன. இதில் ஒரு சில மில்களில் நூல் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது. மற்ற மில்களில் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ஓ.இ. மில்கள் சங்கமான ஒஸ்மா தலைவர் அருள்மொழி கூறுகையில், மூலப்பொருள் வரலாறு காணாத விலையில் விற்பதினால் 20 வருட காலமாக இருந்த காட்டன் விலை 60 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இனிவரும் காலங்களில் பஞ்சு விலை குறைந்தால் மட்டுமே ஓ.இ., மில்களை தொடர்ந்து இயக்க முடியும். தமிழ்நாடு அரசு கடந்த வருடம் மின்சார கட்டணம் உயர்த்தியதால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டு காலமாக விசைத்தறி காடா துணி ஏற்றுமதி தேக்கம் அடைந்ததால் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு துணிக்கு விலை கிடைக்கவில்லை. இதனால் ஓ.இ., மில்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
எனவே தமிழ்நாடு அரசு உயர்த்திய மின் கட்டணத்தை உடனடியாக குறைத்து பழைய மின் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும். காட்டன் வேஸ்ட் மூலப்பொருள் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு கழிவு பஞ்சு ஏற்றுமதியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றார்.
- வியாபாரிகள் ஏறத்தாழ 40 ஆண்டாக செகண்ட்ஸ் பனியன் ஆடை ரகங்களை விற்பனை செய்து வந்தனர்.
- முன்னர் பஜார் இயங்கிய இடத்தில் பாதி இடத்தில் மட்டும் கடைகள் அமைக்க அனுமதி கிடைத்தது.
திருப்பூர்:
திருப்பூர் நஞ்சப்பா பள்ளி சாலையில் தனியார் நிலத்தில் காதர்பேட்டை பனியன் பஜார் இயங்கி வந்தது. அங்கு 50 வியாபாரிகள் ஏறத்தாழ 40 ஆண்டாக செகண்ட்ஸ் பனியன் ஆடை ரகங்களை விற்பனை செய்து வந்தனர்.
தனியாருக்கு சொந்தமான இடத்தில் நில வாடகை அடிப்படையில் இந்த கடைகள் இயங்கி வந்தன. கடந்த ஜூன் 23ந் தேதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில், கடைகள் அனைத்தும் எரிந்தன. முற்றிலும் பனியன் மற்றும் ஆடை ரகங்கள் என்ற நிலையில் தீ கட்டுப்படுத்த முடியாமல் வேகமாக பரவியது. சில இரு சக்கர வாகனங்களும் எரிந்து சாம்பலானது.
இதனால் வியாபாரிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகினர். பல்வேறு தரப்பினர் அவர்களுக்கு உதவி செய்தனர். இந்நிலையில் மீண்டும் கடைகள் அமைத்து வியாபாரம் துவங்க வியாபாரிகள் ஆயத்தம் செய்தனர்.நில உரிமையாளர்கள் தங்கள் இடத்தை அளந்து வேலி அமைத்தனர்.
நீண்ட இழுபறிக்கு பின் முன்னர் பஜார் இயங்கிய இடத்தில் பாதி இடத்தில் மட்டும் கடைகள் அமைக்க அனுமதி கிடைத்தது.இதனால் வியாபாரிகள் தங்கள் கடை அளவை பாதியாக குறைத்து அதற்கேற்ப ெஷட் அமைத்து கடைகளை அமைத்து கொண்டனர். தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் பனியன் பஜார் மீண்டும் இயங்க தொடங்கி உள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது .
- துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.
தாராபுரம்:
தாராபுரம் மின்வாரிய கோட்டத்துக்குட்பட்ட மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 7-ந்தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தாராபுரம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் வ.பாலன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் வருமாறு:-
மூலனூா் துணை மின் நிலையம்: அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, நொச்சிக்காட்டுவலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, லக்கமநாயக்கன்பட்டி, வெள்ளவாவிப்புதூா் மற்றும் கிளாங்குண்டல்.
கன்னிவாடி துணை மின் நிலையம்: மாலமேடு, அரிக்காரன்வலசு, கன்னிவாடி, நஞ்சைத்தலையூா், புஞ்சைத் தலையூா், மணலூா் மற்றும் பெருமாள்வலசு.
கொளத்துப்பாளையம் துணை மின் நிலையம்: உப்புத்துறைபாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம் துலுக்கனூா், ஆச்சியூா், ரெட்டாரவலசு, மணக்கடவு, கரையூா், சாலக்கடை, எழுகாம்வலசு, காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூா்த்தி நகா், கொளத்துப்பாளையம் மற்றும் ராமபட்டணம்.
- காலை 6 முதல் 7 மணி வரை, இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
- மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது
அவிநாசி:
அவிநாசியில் தீயணைப்புத் துறை சாா்பில் விபத்து, மாசில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரை, இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் குறைந்த ஒலி, மாசு ஏற்படுத்தும் தன்மையுடைய பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.
மேலும் மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அமைதி காக்க வேண்டிய இடங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தினா்.
இதைத்தொடா்ந்து தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவது, பட்டாசுகளை வெடிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கினா்.
- தெருவிளக்கு, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட பெற முடியாமல் தவித்து வருகின்றனா்.
- மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம் காமராஜபுரம், மஸ்தான் நகா் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தாா்.
தாராபுரம்:
தாராபுரத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீட்டுக்கு பட்டா கேட்டு பொதுமக்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம் ஆய்வு மேற்கொண்டாா்.
தாராபுரம் நகரில் காமராஜபுரம், வடதாரை, சூளைமேடு, நேரு நகா், குறிஞ்சிப்பாடி, அம்பேத்கா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனா். ஆனால் மேற்கண்ட வீடுகளுக்கு பட்டா இல்லாததால் தெருவிளக்கு, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட பெற முடியாமல் தவித்து வருகின்றனா். இதையடுத்து குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கேட்டு கலெக்டரிடம் இப்பகுதி மக்கள் தொடா்ச்சியாக விண்ணப்பித்து வருகின்றனா்.
இந்நிலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம் காமராஜபுரம், மஸ்தான் நகா் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தாா். ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியா் செந்தில் அரசன், நகரமன்ற தலைவா் பாப்புக்கண்ணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
- முகாமில் 110 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன.
- வேலை நியமன ஆணையை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர் கயல்விழி வழங்கினார்கள்.
தாராபுரம்:
தாராபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.
முகாமுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார். தனியார் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமை தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இந்த முகாமில் 110 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் 1,023 பேர் பங்கேற்றனர். அவர்களில் 470 பேர் வேலைக்கு தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களுக்கான வேலை நியமன ஆணையை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சி குறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ேபசியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்ட நாள் முதல் அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் 2.50 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டு உள்ளது. அனைவருக்கும் அரசு வேலை என்பது சாத்தியம் இல்லை. இளைஞர்கள் வேலை கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் முயற்சி செய்ய வேண்டும். மேலும் சுய தொழில் தொடங்க அரசு வழங்கும் சலுகைகளை பயன் படுத்தி கொண்டு நீங்கள் நான்கு பேருக்கு வேலை வழங்கும் அளவிற்கு முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் வரலட்சுமி, வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் ஜோதி மணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவரும், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






