search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தூர் பேரூராட்சி பகுதியில் ரூ.46¾ லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்
    X

    புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டிய போது எடுத்த படம்.

    முத்தூர் பேரூராட்சி பகுதியில் ரூ.46¾ லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்

    • விழாவிற்கு தாராபுரம் ஆர்.டி.ஓ. செந்தில்அரசன் தலைமை தாங்கினார்
    • உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட செங்கோடம்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி, நகப்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி ஆகியவற்றில் ஊராட்சி ஒன்றிய சேமிப்பு நிதி திட்டத்தின் கீழ் தலா ரூ.7 லட்சத்து 43 ஆயிரம் என மொத்தம் ரூ.14 லட்சத்து 86 ஆயிரத்தில் இருப்பு அறையுடன் கூடிய புதிய சமையலறை கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது.

    மேலும் மோளக்கவுண்டன்புதூரில் அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு வளர்ச்சி திட்ட நிதியின் கீழ் ரூ.20 லட்சத்திலும், ஊடையத்தில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்திலும், தலா 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு குடிநீர் குழாய்கள் விஸ்தரிப்பு செய்யப்பட உள்ளது.

    இதன்படி இப்பகுதிகளில் மொத்தம் ரூ.46 லட்சத்து 86 ஆயிரத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா மற்றும் தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவிற்கு தாராபுரம் ஆர்.டி.ஓ. செந்தில்அரசன் தலைமை தாங்கினார். முத்தூர் பேரூராட்சி தலைவர் எஸ்.சுந்தராம்பாள், துணைத் தலைவர் மு.க.அப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதிய சமையலறை கட்டிடங்களை திறந்து வைத்தும், புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டுவதற்கான பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டியும் தொடங்கி வைத்தார்.

    விழாவில் வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் கே.சந்திரசேகரன், முத்தூர் பேரூர் செயலாளர் செண்பகம்பாலு, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மணிகண்டன், செயல் அலுவலர் ஆல்பர்ட் தியாகராஜ், வெள்ளகோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்வரன், ராகவேந்திரன், உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×