என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • எருது விடும் விழா நடந்தது
    • குறைந்த நேரத்தில் சீறிப்பாய்ந்து இலக்கையடைந்த காளைகளுக்கு பரிசு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி வெள்ளைய கவுண்டனூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க.தேவராஜி கலந்து கொண்டு எருது விடும் திருவிழாவை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    விழாவில் திருப்பத்தூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, ஜோலார்பேட்டை, ஆலங்காயம், மிட்டூர், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகள் பங்கேற்றன. குறைந்த நேரத்தில் சீறிப்பாய்ந்து இலக்கையடைந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டு விழாவை கண்டு ரசித்தனர். மந்தையில் ஓடி சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற 8 பேரை காளைகள் முட்டி படுகாயமடைந்தனர். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு அங்கு இருந்த மருத்துவ குழுவினர் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    விழாவில் பாதுகாப்பு கருதி காவல்துறையினர், வருவாய்த்துறையினர், தீயணைப்பு துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்
    • தாமலேரிமுத்தூர் கிராமத்தில் ரேசன் கடை அமைக்க வேண்டும் என கோரிக்கை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேசன் பொருட்களை வாங்குவதற்கு கட்டேரி அருகே உள்ள தாமலேரிமுத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு செல்கின்றனர்.

    இதனால் நீண்டதூரம் சென்று ரேசன் பொருட்களை வாங்கி வருவதால் தாமலேரி முத்தூர் கிராமத்தில் ரேசன் கடை அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் திருமலை உள்ளிட்ட அதிகாரிகள் ரேசன் கடை அமைக்க இடம் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் அதிகாரிகள் அலுவலகத்திற்கு திரும்பி சென்றனர்.

    அப்போது தாமலேரிமுத்தூர் அருகே உள்ள பாட்டாளி நகர் என்ற இடத்தில் இருந்த வைக்கோல் போரை சந்தேகத்தின் பேரில் வட்ட வழங்கல் அலுவலர் திருமலை உள்ளிட்டோர் சோதனை மேற்கொண்டனர்.

    அதில் வெளி மாநிலத்திற்கு கடத்த 27 மூட்டைகளில் 1010 கிலோ ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனை பதுக்கி வைத்த மர்ம கும்பல் குறித்து விவரம் தெரியவில்லை. இதனால் துறை அதிகாரிகள் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து திருப்பத்தூர் அடுத்த குனிச்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.

    • போலீஸ் நிலையம் முற்றுகை- பரபரப்பு
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி காலனியை சேர்ந்தவர் தமிழ் ராஜ் (வயது 26). மின் வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று சோமநாதபுரம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் பழுதானதால் அதனை சரி செய்ய சென்றார்.

    டிரான்ஸ்பார்மரில் ஏறி சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் தமிழ் ராஜை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்து வந்த உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் திருப்பத்தூர் தாலுக்கா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். தமிழ் ராஜ் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் எழுதிக் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்து 600 எக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    அதில் பல ஊர்களில் நோய் தாக்குதல் தென்படுகிறது. திருப்பத்தூர் வட்டாரத்துக்குட்பட்ட பெருமாபட்டு, இருனாப்பட்டுகிரா மங்களிலும், கந்திலி வட்டாரத்துக்குட்பட்ட மட்றப்பள்ளியிலும் சிவப்பு கூண் வண்டு தாக்கப்பட்ட தென்னைகளை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    அதைத்தொடர்ந்து அவற்றை கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினர்.

    இந்த விழிப்புணர்வு முகாமில், தோட்டக்கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தின் பூச்சியியல்துறை உதவி பேராசிரியர் திலகம், வேளாண் உதவி தரக்கட்டுபாடு அப்துல்ரகுமான், கந்திலி வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராகினி உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்
    • குறைகளை கேட்டறிந்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. போலீஸ் சூப்பி ரண்டு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். அவரிடம் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புகார் மனுவை அளித்த னர். அதனை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு சம் பந்தப்பட்ட போலீசாரிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    மேலும் கருத்து கேட்பு குழு பிரிவிலிருந்து பெறப்பட்ட திருப்தி அடையாத 10 மனுதாரர்களை நேரில் அழைத்து. அவர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

    இதில் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர், எம்.எல்.ஏ. ஆய்வு
    • 15 ஆண்டு காலமாக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டப்படவில்லை.

    ஆம்பூர்:

    ஆம்பூரில் கடந்த 15 ஆண்டு காலமாக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டப்படவில்லை.

    இதனால் இதற்கான இடத்தை பல்வேறு இடங்களில் தேர்வு செய்து எம்.எல்.ஏ. அலுவலகம் கட்டுவதற்கான இடத்தினை திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கரபாண்டியன், ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது வாணியம்பாடி உதவி கலெக்டர் பிரேமலதா, ஆம்பூர் நகர மன்ற தலைவர் ஏஜாஸ்அகமது, மதனூர் ஒன்றிய சேர்மன் சுரேஷ்குமார், ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் ஷகிலா, ஆம்பூர் தாசில்தார் மகாலட்சுமி, நகராட்சி பொறியாளர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    • வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சின்ன பள்ளி குப்பம் ஊராட்சி காட்டு வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 50).

    இவர் வாணியம்பாடி யில் உள்ள தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    மகள்கள் இருவரும் வாணியம்பாடியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகின்றனர். நேற்று காலை கணவன், மனைவி இருவரும் வேலைக்கும், மகள்கள் கல்லூரிக்கும் சென்றதால் வீட்டை பூட்டிக் கொண்டு நாராயணன் சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    வீடு திரும்பிய நாராயணன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்தார். அதிலிருந்த 28 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    விவசாயி

    இது சம்பந்தமாக அவர் உமராபாத் போலீசில் இன்று காலை புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    • திருப்பத்தூர் கோர்ட்டு தீர்ப்பு
    • வேலூர் ஜெயிலில் அடைத்தனர்

    திருப்பத்தூர்:

    திருவள்ளூர் மாவட் டம், திருத்தணி அடுத்த மத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 40). இவர் சென்னை ஆவடி யில் உள்ள தனியார் கம் பெனியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான வர லட்சுமி (30) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்குமுன்பு திருமணம் நடந்தது.

    இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக் கடி தகராறு ஏற்பட்டு வந்தது. வரலட்சுமியின் தந்தை தீனதயாளன் இறந்து விட்டதால் ஆம்பூர் ஆடுத்த பாங்கிராபாத் புதுமனை பகுதியில் உள்ள அவரது சித்தப்பா பார்த்திபன் (50) வீட்டில் தங்கி இருந்தார்.

    கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி காளிதாஸ் ஆம்பூருக்கு சென்று பார்த்திபனிடம் என் மனைவிக்கு ஏன் அடைக்கலம் கொடுக்கி றாய் எனக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த காளிதாஸ், பார்த்திபனை சரமாரியாக தாக்கி அருகில் இருந்த கருங்கல்லை எடுத்து பார்த்திபன் தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.

    இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் வழக்கு நடை பெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜா வாதாடினார்.

    இந்நிலையில், காளிதாசுக்கு ஆயுள் தண்ட னையும், ரூ.76, ஆயிரம் அபராதமும் மற்றும் அத்து மீறி பார்த்திபன் வீட்டிற்குள் சென்று தகராறில் ஈடுபட்டதற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பளித்தார்.

    உமராபாத் போலீசார் காளிதாசை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
    • வனத்துறை அதிகாரிகள் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள பூங்குளம் அடுத்த ஏரி வட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அனுமதியில்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில், வனச்சரக அலுவலர் சோமசுந்தரம் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியை சேர்ந்த, அண்ணாமலை (வயது 54) விவசாயி என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    அண்ணாமலை அனுமதி இல்லாமல் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்ததும், நாட்டுத் துப்பாக்கியின் பயன்பாட்டிற்காக மருந்து பொருட்களை வைத்திருந்த தும் கண்டறி யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர். பின்னர் வனத்துறையினர் அவர் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மலேரியா காய்ச்சல் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்
    • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி:

    ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட நிம்மியம்பட்டு ஊராட்சி மேல்நிம்மியம்பட்டு கிராமத்தில் உலக மலேரியா தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். ச. பசுபதி தலைமை தாங்கினார். முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களிடம், திருப்பத்தூர் மாவட்ட பூச்சியியல் வல்லுநர் ராமலிங்கம், மலேரியா காய்ச்சல் பரவும் விதம், கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

    இதில் ஒன்றிய குழு உறுப்பினர் பிரித்தா பழனி, நிம்மிய ம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் எழிலரசி வெங்க டேசன், வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் குரு.சரவண குமார், வட்டார மருத்துவ மேற்பார்வை யாளர் இ.அப்பாஸ், கிராம நிர்வாக அலுவலர் சற்கு ணகுமார், தொடக்க ப்பள்ளி தலைமை ஆசிரியர் சுசீலா, சுகாதார பணியா ளர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியில் பாலதண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது.

    கோவில் புதுப்பிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆம்பூர் சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவை அப்பகுதி மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • ஆராய்ச்சி நடப்பதாக அமைச்சர் எ.வ.வேலு தகவல்
    • நல உதவி திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது

    ஜோலார்பேட்டை:

    க்ஷஏலகிரி மலையில் உள்ள கோடை விழா அரங்கத்தில் ஏலகிரி மலை மலைவாழ் மக்களிடம் கோரிக்கை மனுக்கள் மற்றும் நல உதவி திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்ட மன்ற உறுப்பினர்கள் க.தேவராஜி அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் வரவேற்றார்.

    அமைச்சர் எ.வ.வேலு நல உதவி திட்டங்கள் வழங்கினார் அவர் பேசியதாவது:-

    ஏலகிரி மலையானது 1000 ஆண்டுகள் பழைமையானது. இப்பகுதியில் வாழ்ந்த ஐந்நூற்றவர் வணிகக்குழுவினர் தமிழ்நாடு முழுவதும் வணிகம் செய்து வந்தனர். கி.பி.10 நூற்றாண்டில், ஐந்நூற்றவன் மலையில் எள் உள்ளிட்ட எண்ணெய் தரக்கூடிய வித்துக்கள் எண்ணெய் எடுப்பதற்கான "கல்செக்கு" பயன்படுத்தியதற்கான சான்றுகள் கல்வெட்டில் உள்ளது.

    முனைவர் க.மோகன்காந்தி தலைமையிலான ஆய்வுக்குழு, வரலாற்று தடையங்களான கற்கோடாரிகள், கல்வெட்டுகள், நடுகற்கள் போன்ற தடயங்களை சேகரித்து ஆராய்ந்து வருகின்றனர்.

    "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற ஒரு துறையை உருவாக்கி அத்துறை மூலம் அனைத்து கோரிக்கைகளின் மீதும் தனி கவனம் செலுத்தி தீர்க்கப்படக் கூடிய கோரிக்கைகளை 100 நாட்களில் நிறைவேற்றி தந்துள்ளார்.

    ×