என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
    X

    மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

    • போலீஸ் நிலையம் முற்றுகை- பரபரப்பு
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி காலனியை சேர்ந்தவர் தமிழ் ராஜ் (வயது 26). மின் வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று சோமநாதபுரம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் பழுதானதால் அதனை சரி செய்ய சென்றார்.

    டிரான்ஸ்பார்மரில் ஏறி சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் தமிழ் ராஜை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்து வந்த உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் திருப்பத்தூர் தாலுக்கா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். தமிழ் ராஜ் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் எழுதிக் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×