என் மலர்
திருப்பத்தூர்
- கலெக்டரிடம் வலியுறுத்தல்
- கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்
திருப்பத்தூர்:
தமிழ்நாடு கூட்டுறவு ரேசன் கடை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் வி. சுரேஷ், மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், பொருளாளர் அருள் தலைமையில் கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியனிடம் அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரேசன் கடைகளுக்கு துவரம் பருப்பு, பாமாயில் கோதுமை, அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஒதுக்கீடு முழுமையாக பெற்று தர வேண்டும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் எடையிட்டு வழங்க வேண்டும், அந்தந்த மாதத்திற்குரிய பொருட்களின் மூட்டைகளுக்கு நூல் தையல் இட்டு வழங்க வேண்டும்.
பெரும்பாலான கடைகளில் மகளிர் கடைகளில் மகளிர் விற்பனையாளர்கள் பணிபுரிவதால் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். மூட்டையில் 50-650 கிலோ கிராம், எடை அளவு சரியாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். உடன் மாவட்ட அமைப்பாளர் கர்ணன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.
- குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் கட்ட தேவையான இடம் உள்ளதா என கேட்டறிந்தார்
- அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த பனந்தோப்பு பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் புதியதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக கட்டிடம் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் கட்ட தேவையான இடம் உள்ளதா என நில அளவையரிடம் கேட்டறிந்தார்.
நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், மண்டல துணை வட்டாட்சியர் ராஜேஷ், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, தலைமை நில அளவர், குறு வட்ட நில அளவர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் உள்பட பலர் பங்கேற்றனர்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
- பக்தர்கள் ஓம் சக்தி மாரியம்மன் என கூறி பரவசம்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள உடையாமுத்தூர் சரஸ்வதி நகர் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
அப்போது பக்தர்கள் ஓம் சக்தி மாரியம்மன் என கூறி சாமி வந்து ஆடினார்கள். நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் ஒன்றிய கவுன்சிலர் சி.லட்சுமி சந்திரசேகர் வரவேற்று பேசினார்.
நல்ல தம்பி எம்.எல்.ஏ., முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜமாணிக்கம் ஒன்றிய குழு தலைவர் திருமதி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், மோகன்ராஜ், குணசேகரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முத்துமாரியம்மன் ஆலய நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- ரூ.18 லட்சம் கடன் பெற்று வீடு கட்டியுள்ளார்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி பசுமை நகர் பகுதியை சேர்ந்தவர் சென்னன் என்பவரின் மகன் இன்பராஜ் (வயது 33). இவர் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கியில் வீடு கட்டுவதற்காக ரூ.18 லட்சம் கடன் பெற்று வீடு கட்டியுள்ளார். மேலும் அந்த வங்கிக் கடனை செலுத்தி வந்துள்ளார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி தனியார் வங்கியில் இருந்து திருப்பத்தூர் பகுதியில் உள்ள தேசிய மையமாக்கப்பட்ட வங்கிக்கு வீட்டு பத்திரத்தை மாற்றம் செய்து தனியார் வங்கி கடனை அடைத்துவிட்டு கூடுதலாக 6 லட்சம் வங்கி கடன் பெற்றுள்ளார்.
மேலும் இந்த வங்கி கடனை மாதம் தவணை முறையில் செலுத்தி வந்துள்ளார்.
இதனால் கடன் சுமை அதிகமாகி விட்டது என வீட்டில் அடிக்கடி கூறி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து விட்டு மாலை வீட்டிற்கு வந்தவர் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
பின்னர் நேற்று மாலை வீட்டிலிருந்த அறையில் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் இன்பராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவருக்கு திருமணமாகி கலை என்ற மனைவியும் விஷ்வா (வயது 8), பவின் (6) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இதுகுறித்து தந்தை சென்னன் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கி கடன் பெற்று கடன் சுமை அதிகமானதால் மன உளைச்சலில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூரில் போராட்டத்தால் நடவடிக்கை
- 2 நாட்களில் பொது மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள திருப்பத்தூர் மெயின் ரோடு மற்றும் அப்பாசி கவுண்டர் தெரு பகுதியில் கடந்த 1 ஆண்டுக்கு மேலாக தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
அதில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
அப்பகுதியில் உள்ள பொது மக்கள் குடிநீருக்காக மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள் நேற்று திருப்பத்தூர் வாணியம்பாடி நோக்கி செல்லும் இரு புறமும் சாலை மறியல் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் பழனி நகர மன்ற உறுப்பினர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
சாலை மறியல் காரணமாக பைப் லைன் அமைக்கும் பணி துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர் இதனால் அப்பகுதி பொது மக்களுக்கு 2 நாட்களில் பொது மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என நகராட்சி ஆணையர் பழனி தெரிவித்தார்.
- கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் சிக்கினார்
- ெஜயிலில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 41). இவர், நேற்று முன்தினம் மண்டலவாடி ஊராட்சிக்கு உட் பட்டவெள்ளைய கவுண்டனூர் பகுதியில் நடந்த எருதுவிடும்.
திருவிழாவை பார்க்க தனது மோட்டார்சைக்கிளில் புறப்பட் டார். பூசாரிவட்டம் பகுதியில் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு விழாவை பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்ப மோட்டார்சைக்கிளை எடுக்க வந்தார். ஆனால், அங்கு நிறுத்தியிருந்த மோட்டார்சைக்கிளை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவர் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். மேலும் வெள்ளையகவுண்டனூர் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசீலனை செய்தபோது, மோட்டார் சைக்கிளை திருடியவர் அடையாளம் தெரிந்தது.
அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத் தியபோது, திருப்பத்தூர் அடுத்த ஏரிக்கரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் சுதாகர் (வயது 27) எனத் தெரிய வந்தது.
அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கனகராஜின் மோட்டார்சைக்கிளை போலீசார் பறி முதல் செய்தனர்.
அவர் மீது வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.
- கடந்த 1½ வருடங்களாக தண்ணீர் வரவில்லை என புகார்
- ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ஜோலார்பேட்டை:
வாணியம்பாடியில் இருந்து சேலம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் ஜோலார்பேட்டை சந்தைகோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் பொது மக்களுக்கு குடிநீர் அடிக்கடி தடைப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலையில் பணிகள் முடிக்கப்பட்டு நிலையில் சந்தைகோடியூர் பகுதியில் உள்ள திருப்பத்தூர் மெயின் ரோடு, மற்றும் அப்பாசி கவுன் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த 1½ வருடங்களாக தண்ணீர் வரவில்லை.
இதனால் அப்பகுதி பொது மக்கள் தண்ணீருக்காக மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இது குறித்து நகராட்சி அலுவலகத்திற்கு பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பஸ் நிறுத்தம் அருகே இரு மார்க்கத்தில் பெண்கள் காலி குடங்களுடன் நீண்ட வரிசையில் நின்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் பழனி நகர மன்ற உறுப்பினர் அன்பு மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர் .இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- கணவர் கைது
- வேலூர் ஜெயிலில் அடைத்தனர்
ஆம்பூர்:
ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் நூர் அகமது (வயது 38). இவரது மனைவி பாபிதா பேகம் (35). கணவன், மனைவி இருவரும் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.
கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
கடந்த 22 -ந் தேதி கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாபிதா பேகம் வீட்டில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.
இதனைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக பாபிதா பேகம் இறந்தார்.
பாபிதா பேகம் சாவுக்கு, நூர் அகமதுதான் காரணம். அவரை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் புகார் அளித்தனர். உடலை வாங்க மறுத்தனர்.
இது சம்பந்தமாக ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து நூர் அகமதுவை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
- கலெக்டர் ஆய்வு
- தரமானதாக கட்டிடங்கள் கட்டவேண்டும் என தெரிவித்தார்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் நாட்டறம்பள்ளி அருகே மல்லபள்ளி ஊராட்சி ஏரியூர் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமையலறை கட்டுமான பணியை கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பணிகள் விரைந்து கட்டவும் தரமானதாக கட்டிடங்கள் கட்டவேண்டும் என தெரிவித்தார்.
ஆய்வின் போது உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஜயகுமாரி, ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யாசதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதிஷ் குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அலுவலர்கள் உடன் சென்றனர்
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 22 வது வார்டு மாங்கா தோப்பு பகுதியில் உள்ள பாட்ஷா நகரில் 4 தெருக்களுக்கு ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை ஆம்பூர் வில்வநாதன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு ெசய்தார். ஆம்பூர் நகர மன்ற தலைவர் பத்தேகான் ஏஜாஸ் அகமது நகராட்சி ஆணையாளர் சகிலா மற்றும் பொறியாளர் ராஜேந்திரன் ஆம்பூர் நகர மன்ற தலைவர் ஆம்பூர் நகர மன்ற துணைத் தலைவரும் நகர செயலாளருமான ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.
இதில் 22 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் லட்சுமி யுவராஜ் கிளை செயலாளர் விமலநாதன். தொழிலதிபர் அபிப் பாய் அண்ணாமலை சபீர் சுந்தர் மௌலா உள்ளிட்ட பகுதியை சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- தென்னை மரத்திலிருந்து ஓலை தேன்கூட்டில் விழுந்தது
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி தாலுக்கா பச்சூர் பழைய பேட்டை பொதிகை வட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் காலையில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது தென்னை மரத்திலிருந்து ஓலை வேப்ப மரத்தின் மீது விழுந்தது. வேப்ப மரத்தில் கூடு கட்டி இருந்த மலைத்தேனீக்களின் கூடு கலைந்ததால் பணியில் ஈடுபட்டிருந்த 10-க்கும் மேற்பட்டவர்களை தேனீக்கள் பூச்சிகள் கொட்டியது.
இதில் படுகாயம் அடைந்த பழைய பேட்டை பகுதியைச் சார்ந்த புண்ணியம்மாள் (வயது 60), சாலி (45), அருள்மொழி (45), வள்ளியம்மாள் (51) திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீதம் உள்ள 6 பேர் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- கலெக்டர் தகவல்
- பயிற்சியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருப் பத்தூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவில் 2023-ம் ஆண்டிற் கான 16 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள், மற் றும் மாணவர்கள் அல்லாதோருக்கு மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் ஜோலார்பேட்டை விளையாட்டரங்கில் வருகிற 4-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது.
பயிற்சி முகாமில் தடகளம் கையுந்துபந்து, கால்பந்து, கூடைப்பந்து மற்றும் கபடி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. காலை, மாலை இருவேளைகளி லும் சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப் படும். பயிற்சி பெறுபவர்களில் திறமையானவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு, மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு, அளவில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படு வார்கள்.
பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






