என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Construction of drinking water pipe"

    • ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூரில் போராட்டத்தால் நடவடிக்கை
    • 2 நாட்களில் பொது மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள திருப்பத்தூர் மெயின் ரோடு மற்றும் அப்பாசி கவுண்டர் தெரு பகுதியில் கடந்த 1 ஆண்டுக்கு மேலாக தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    அப்பகுதியில் உள்ள பொது மக்கள் குடிநீருக்காக மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள் நேற்று திருப்பத்தூர் வாணியம்பாடி நோக்கி செல்லும் இரு புறமும் சாலை மறியல் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் பழனி நகர மன்ற உறுப்பினர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சாலை மறியல் காரணமாக பைப் லைன் அமைக்கும் பணி துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர் இதனால் அப்பகுதி பொது மக்களுக்கு 2 நாட்களில் பொது மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என நகராட்சி ஆணையர் பழனி தெரிவித்தார்.

    ×