என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assertion to the Collector"

    • கலெக்டரிடம் வலியுறுத்தல்
    • கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்

    திருப்பத்தூர்:

    தமிழ்நாடு கூட்டுறவு ரேசன் கடை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் வி. சுரேஷ், மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், பொருளாளர் அருள் தலைமையில் கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியனிடம் அளித்தனர்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத்தில் ரேசன் கடைகளுக்கு துவரம் பருப்பு, பாமாயில் கோதுமை, அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஒதுக்கீடு முழுமையாக பெற்று தர வேண்டும்.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் எடையிட்டு வழங்க வேண்டும், அந்தந்த மாதத்திற்குரிய பொருட்களின் மூட்டைகளுக்கு நூல் தையல் இட்டு வழங்க வேண்டும்.

    பெரும்பாலான கடைகளில் மகளிர் கடைகளில் மகளிர் விற்பனையாளர்கள் பணிபுரிவதால் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். மூட்டையில் 50-650 கிலோ கிராம், எடை அளவு சரியாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். உடன் மாவட்ட அமைப்பாளர் கர்ணன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

    ×