என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொது மக்கள் மறியல்
    X

    குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொது மக்கள் மறியல்

    • கடந்த 1½ வருடங்களாக தண்ணீர் வரவில்லை என புகார்
    • ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடியில் இருந்து சேலம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் ஜோலார்பேட்டை சந்தைகோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் பொது மக்களுக்கு குடிநீர் அடிக்கடி தடைப்பட்டது.

    தேசிய நெடுஞ்சாலையில் பணிகள் முடிக்கப்பட்டு நிலையில் சந்தைகோடியூர் பகுதியில் உள்ள திருப்பத்தூர் மெயின் ரோடு, மற்றும் அப்பாசி கவுன் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த 1½ வருடங்களாக தண்ணீர் வரவில்லை.

    இதனால் அப்பகுதி பொது மக்கள் தண்ணீருக்காக மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

    இது குறித்து நகராட்சி அலுவலகத்திற்கு பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பஸ் நிறுத்தம் அருகே இரு மார்க்கத்தில் பெண்கள் காலி குடங்களுடன் நீண்ட வரிசையில் நின்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் பழனி நகர மன்ற உறுப்பினர் அன்பு மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர் .இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×