என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • விவசாய வேலைக்காக சென்ற போது விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் காளி வட்டத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 30). இவர் டிராக்டர் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று தன் வீட்டில் இருந்து விவசாய வேலைக்காக டிராக்டரை ஒட்டிக்கொண்டு பூங்குளம் நோக்கி சென்றார். அப்போது பூங்குளம் ரைஸ் மில் அருகே டிராக்டர் நிலை தடுமாறி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் டிராக்டரை ஓட்டி சென்ற நவீன்குமார் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அங்கு இருந்தவர்கள் நவீன் குமாரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளிர்ச்சியான சூழல் நிலவியது
    • விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஜனதாபுறம், செட்டியப்பனூர், நியூடவுன், கச்சேரி சாலை, கொடையாஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென கனமழை பெய்தது.

    இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அதன்படி திருப்பத்தூர் சுகர் மில் பகுதியில் அதிகபட்சமாக 70 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதே போல் நாட்டறம்பள்ளியில் 62 மில்லி மீட்டர், திருப்பத்தூரில் 57.60 மில்லி மீட்டர், ஆலங்காயத்தில் 49 மில்லி மீட்டர், ஆம்பூரில் 43 மில்லி மீட்டர், ஆம்பூர் சுகர் மில் பகுதியில் 35.80 மில்லி மீட்டர், வாணியம்பாடியில் 32 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    • தூங்கிக் கொண்டு இருந்தவர்கள் திடீரென காணவில்லை
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் திருமால் நகரை சேர்ந்த 16 வயது சிறுவன் திருப் பத்தூரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் நேற்று முன்தி னம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த சிறுவன் திடீரென காணவில்லை. சிறு வனை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுவனின் பெற்றோர் திருப்பத்தூர் டவுன்போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதேபோல் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் திருப்பத்தூர் அருகே சின்னபசலைகுட்டை கிரா மத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தவன் காலையில் வீட்டில் இருந்து மாயமாகி உள்ளான்.

    இதுகுறித்து சிறுவர்களின் பெற்றோர் திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    • மணல் கடத்தல் குறித்து தகவல் தெரிவித்ததால் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் வெங்கடேசன் (வயது 37), கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஆற்றில் இருந்து பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் மணல் கடத் தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெங்கடேசன் ஜோலார் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படு கிறது.

    இதனால் மணல் கடத்தலில் ஈடுபட்டவர் மற்றும் வாணி யம்பாடி அருகே உள்ள தெக்குப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கள் 3 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் இரவு வெங் கடேசனின் வீட்டிற்கு சென்று நீதான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தாயா? என கேட்டு அவரது வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் கதவுகள் மற்றும் மினிவேன் முன்பக்க கண்ணாடி ஆகியவற்றை உடைத்து தாக்கி உள்ளனர்.

    இதுகுறித்து வெங்கடேசன் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணல் கடத்துவதாக தகவல் தெரிவித்ததால் நள்ளிரவில் வீட்டை சூறையாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பொது மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது
    • கலெக்டரிடம் புகார்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் சகாய அன்னை ஆலய பங்குத்தந்தை கிளமென்ட் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகளை சகாய அன்னை ஆலய சுற்றுசுவர் மற்றும் அக்சீலியம் தொழிற் கல்வி சுற்றுசுவர் அருகில் கொட்டப்பட்டு தீயிட்டு கொளுத்துகின்றனர்.

    தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் குப்பைகள் கொளுத்தும் போது புகை மண்டலம் சூழ்ந்து பொது மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    மாசு கலந்து காற்றை சுவாசிப்பதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை அள்ளி வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

    மேலும் குப்பைகளை தீயிட்டு எரிக்கக்கூடாது. இவ்வாறு இதில் கூறப்பட்டிருந்தது.

    • 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்
    • போலீசார் கணவனுடன் அனுப்பி வைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரி பகுதியைச் சேர்ந்தவர் கிருபதாஸ். இவரது மகள் கீர்த்தனா (வயது 19). இவருக்கும் நாட்டறம்பள்ளி மகாத்மா காந்தி தெருவைச் சேர்ந்தவர் மகி என்பவரின் மகன் வெற்றிவேல் (வயது 22) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 14-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பச்சூர் அருகேசாமுண்டீஸ்வரி கோவிலில் திருமணம் செய்து கொண்டு கோவைக்கு சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் கீர்த்தனாவுடைய தந்தை கிருபதாஸ் தன் னுடைய மகளை காணவில்லை என நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து நாட் டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த கீர்த்தனா நேற்று நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் காதல் கணவனுடன் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.

    பின்னர் போலீசார் பெற்றோர்களை போலீஸ் நிலையத் துக்கு வரவழைத்து அறிவுரை வழங்கினர். அப்போது இருவரும் மேஜர் என்பதால் காதல் திருமணம் செய்து கொண்டனர். எனகூறி காதல் கணவனுடன் கீர்த்தனாவை அனுப்பி வைத்தனர்.

    • போலீசார் வாகனத் தணிக்கையில் சிக்கினார்
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, மத்திய நுண்ணறிவு பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் திருப்பத்தூர் அடுத்த கந்திலி பகுதியை சேர்ந்த ஆனந்தன் ( வயது 25) என்பதும், இவர்

    லோடு ஆட்டோவில் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து 15 அட்டை பெட்டிகளில் 1440 கர்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகளை கடத்தி வந்ததும் தெரிந்தது. மேலும் மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், ஆனந்தனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • தண்டவாளத்தில் இறந்து கிடந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பச்சூர்- மல்லானூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதனைகண்டவர்கள் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் ேபரில் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
    • சராசரி 43.65 மி. மீ. மழை பதிவாகி உள்ளது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஜனதாபுறம், செட்டியப்பனூர், நியூடவுன், கச்சேரி சாலை, கொடையாஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். திடீரென பெய்த கன மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ராணிப்பேட்டை

    இதேபோல ராணிப்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று மாலை மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    பின்னர் இரவு சுமார் 7 மணியிலிருந்து திடீரென பலத்த மழை பெய்தது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழை விபரம்: ராணிப்பேட்டையில் 64.6.மி.மீ, பாலாறு அணைக்கட்டு 34.2 மி.மீ, வாலாஜாவில் 72 மி.மீ, அம்மூரில் 42.மி.மீ,ஆற்காட்டில் 74.2.மி.மீ, அரக்கோணத்தில் 62.4.மி.மீ, மின்னலில் 8.2.மி.மீ, காவேரிப்பாக்கத்தில் 34 மி.மீ, பனப்பாக்கத்தில் 24.8 மி.மீ, சோளிங்கரில் 21 மி.மீ, கலவையில் 42.8மி. மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 480.2மி.மீ., , மாவட்ட சராசரி 43.65 மி. மீ. மழை பதிவாகி உள்ளது.

    • அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    புதுப்பாளையம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் பேரூராட்சியில் சிறப்பு வார்டு குழு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.

    அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த வார்டு குழு பகுதி சபா சிறப்பு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுப்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வபாரதி மனோஜ்குமார் தலைமை தாங்கினார்.

    செயல் அலுவலர் முகமது ரிஸ்வான் (பொறுப்பு) முன்னிலை வகித்தார். இந்த சிறப்பு வார்டு சபா கூட்டத்தில் ஒவ்வொரு வார்டிற்கும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் பேரூராட்சி தலைமை எழுத்தர் ரமேஷ் நன்றி கூறினார்.

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது
    • ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    சமூக நீதி நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமை தாங்கினார்.

    இதில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஏராளமான போலீசார் கலந்து கொண்டு உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் உள்ள யார்டு பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று தண்டவாளத்தை கடக்க முயன்று உள்ளார். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு பலியானார்.

    ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×