டிராக்டர் கவிழ்ந்து விவசாயி படுகாயம்

விவசாய வேலைக்காக சென்ற போது விபரீதம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
டிராக்டர் கவிழ்ந்து விவசாயி படுகாயம்
Published on

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் காளி வட்டத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 30). இவர் டிராக்டர் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று தன் வீட்டில் இருந்து விவசாய வேலைக்காக டிராக்டரை ஒட்டிக்கொண்டு பூங்குளம் நோக்கி சென்றார். அப்போது பூங்குளம் ரைஸ் மில் அருகே டிராக்டர் நிலை தடுமாறி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் டிராக்டரை ஓட்டி சென்ற நவீன்குமார் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அங்கு இருந்தவர்கள் நவீன் குமாரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com