கர்நாடகா மது கடத்திய டிரைவர் கைது

போலீசார் வாகனத் தணிக்கையில் சிக்கினார்ஜெயிலில் அடைத்தனர்
கர்நாடகா மது கடத்திய டிரைவர் கைது
Published on

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, மத்திய நுண்ணறிவு பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் திருப்பத்தூர் அடுத்த கந்திலி பகுதியை சேர்ந்த ஆனந்தன் ( வயது 25) என்பதும், இவர்

லோடு ஆட்டோவில் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து 15 அட்டை பெட்டிகளில் 1440 கர்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகளை கடத்தி வந்ததும் தெரிந்தது. மேலும் மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், ஆனந்தனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com