என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    அந்த பகுதியில் உள்ள அஜித்குமார் (வயது 24) என்ற வாலிபருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு பழகி வந்துள்ளார்.

    அந்த சிறுமியிடம் அஜித்குமார் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர். இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்
    • மாவட்டம் முழுவதும் யாருக்கும் டெங்கு பாதிப்பு கிடையாது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் வளையாம்பட்டு ஊராட்சி காமராஜர் நகர மற்றும் உதயேந்திரம், வாணியம்பாடி நகர பகுதியான திருமாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

    வீடு வீடாக சென்று டெங்கு கொசுவை ஒழிக்க கூடிய புகை மருந்து அடிக்கப்பட்டது.டெங்கு கொசு புழுக்கள் உருவாகும் பழைய டயர்,தேங்காய் ஒடு ஆகியவற்றை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

    சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்களையும், டெங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணிகளையும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடைபெற்று வரும் பாதுகாப்பு பணிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த 40 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

    முகாமில் காய்ச்சல், சளி, தொண்டைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ள வர்களை கண்டறியப்பட்டு அவர்களை கண்காணி க்கப்பட்டு வருகிறது.

    தற்போது மாவட்டம் முழுவதும் யாருக்கும் டெங்கு பாதிப்பு கிடையாது என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.

    ஆய்வின் போது வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, தாசில்தார் சாந்தி, மருத்துவ அலுவலர் அருள்பிரசாத், ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி, வார்டு உறுப்பினர்கள் சுகாதார பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • போலீசார் விசாரணை
    • 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 26). இவர் பெங்களூரில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    நேற்று இரவு திடீரென கொக்கு மருந்து குடித்து இறந்து கிடந்தார். இதனைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து ஆம்பூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சதீஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடியிருப்பு அருகே நிறுத்திவிட்டு பணிக்குச் சென்றார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன்(வயது30).

    இவர் திருப்பத்தூரில் ஆயுதப்படையில் போலீசாராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு ஜோலார்பேட்டை அருகே உள்ள பாச்சல் ஆயுதப்படை குடியிருப்பு அருகே தனது பைக்கை நிறுத்தினார். பின்னர் பணிக்குச் சென்றார்.

    மீண்டும் இன்று காலை அங்கு வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ பைக்கை திருடி சென்றுள்ளனர்.

    இதையடுத்து குமரேசன் அளித்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருகிற 7-ந் தேதி நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதன் முதல் முகாம் கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்றது.

    இந்த நிலையில் 2-வது முகாம் வருகிற 7-ந் தேதி திருப்பத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையமும் செய்து வருகிறது.

    இதில், 300-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கு பெருகிறது. எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் 8-ம் வகுப்பு முதல் பட்டயபடிப்பு, பொறியியல், மருத்துவம் சார்ந்த படிப்புகள், ஐ.டி.ஐ. முடித்த ஆண்கள், பெண்கள் பங்கேற்று பயன் பெறலாம் என திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • பொதுமக்கள் பீதி
    • வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட் டம், நாட்டறம்பள்ளி பேரூ ராட்சி 4-வது வார்டு சாமுண்டீஸ்வரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் முருகன். பேரூராட்சி ஊழியர். இவரது வீட்டில் நள்ளிரவு சுமார் 1 மணி யளவில் திடீரென கரடி வந்துள்ளது.

    அப்போது அந்த கரடி 4 அடி உயர காம்ப வுண்ட் சுவரை தாண்டி வீட்டுக்குள் குதித்தது. தொடர்ந்து வீட்டின் பக்கத்தில் உள்ள பூச்செ டிகள், வாகனங்களை உரசியபடி வீட்டின் பின்புறமுள்ள விவசாய நிலத்திற்கு சென்றது.

    அப் போது, வழியில் நிறுத்தியிருந்த பைக் மீது கரடி உர சியுள்ளது. சத்தம் கேட்டு வெளியே எழுந்து வந்த பக்கத்து வீட்டுக்காரர், கரடி செல்வது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அவர் வீட் டின் உரிமையாளரான பேரூராட்சி ஊழியர் முரு கனுக்கு தகவல் தெரிவித்துள் ளார். மேலும் வெளியே வரவேண்டாம் எனவும் எச்சரித்தார்.

    இன்று காலை முருகன் எழுந்து பார்த்தபோது,

    அவரது வீட்டின் காம்ப வுண்ட் சுவர், தரைப்பகுதி யில் கரடியின் கால் தடம் பதிந்திருந்தது. பூச்செடிகள் சேதமாகியிருந்தது. கரடி யின் முடிகள் உதிர்ந்து கிடந்தது.

    நாட்டறம்பள்ளி அருகே உள்ள நாயனசெருவு பகுதி யையொட்டி வனப்பகுதி உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி, நேற்று முன்தினம் இரவு நாயனசெருவு பகு தியில் சுற்றித்திரிந்துள் ளதை அப்பகுதி மக்கள் கண்டனர். இந்நிலையில் நள்ளிரவு நாட்டறம்பள்ளி யில் குடியிருப்புக்கு வந்தது தெரியவந்தது. இதைய றிந்த பொதுமக்கள் கடும் அச்சத்திற்குள்ளாகியுள்ள னர்.

    தற்போது கரடி விவ சாய நிலத்தில் எங்கேனும் பதுங்கியிருக்கலாம் என வும், இரவு நேரங்களில் மீண்டும் குடியிருப்புகளுக்குள் புகும் வாய்ப்பு இருப்ப தால், அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து அதனை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண் டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • குடும்ப தகராரில் விபரீதம்
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி கல் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் தேங்காய் உரிக்கும் தொழிலாளி மகி (40) மனைவி கவிதா(35) இவர் தனியார் தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

    இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனஉலைச்சலுக்கு ஆலான கவிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி டவுன் போலீசார் கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடந்தது
    • போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியில் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் சிறப்பு கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. முகாமுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மோட் டார் வாகன ஆய்வாளர் வெங்கட ராகவன் முன் னிலை வகித்தார்.

    சென்னை தனியார் மருத் துவமனை உடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த மருத்துவ முகாமில் 100 டிரைவர், கண் டக்டர்கள், பொதுமக்கள் பயன்பெற்றனர்.

    அதன் பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் அதிகாரிகள் விளக்கி பேசினர்.

    • முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார்
    • ஏரளமானோர் கலந்துகொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார வள மையம் சார்பில் பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் 21 பேருக்கு தேசிய மாற்றுத்திறனாளிகள் நல அடை யாள அட்டைகள், 25 பேருக்கு பஸ் மற்றும் ரெயில் சலுகை பாஸ் உள்பட 88 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசுப்புராயன் வழங்கினார்.

    இதில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன், மாவட்ட மாற்றுத்திறன் நல முட நீக்கு வல்லுனர் இனியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா, பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழரசி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • குழந்தை வளர்ச்சி துறை சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இயங்கி வரும் மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் ஊட்டச்சத்து துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கல்லூரி செயலர் சிலிக்மிசந்த் ஜெயின் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ம.இன்பவள்ளி வரவேற்புரை வழங்கினார்.

    சிறப்பு அழைப்பா ளர்களாக மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமார், சித்த மருத்துவர் விக்ரம்குமார், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி ஆகியோர் கலந்து கொண்டு ஊட்டச்சத்து கண்காட்சியை பார்வை யிட்டனர்.

    இதில் துணை முதல்வர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் சக்திமாலா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • நகர மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
    • ரூ.14.60 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களுக்கும் துப்புரவு பணியாளர்கள் வீடு, வீடாக வானங்களில் சென்று குப்பைகளை சேகரிக்கின்றனர்.

    இந்த நிலையில் துப்புர பணியாளர்கள் குப்பைகளை விரைந்து சேகரிக்க, 15-வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.14.60 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக 2 வாகனங்கள் வாங்கப்பட்டது. இந்த வாகனங்களை நகர மன்ற தலைவர் எம். காவியாவிக்டர் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    அப்போது நகராட்சி ஆணையர் ஜி. பழனி, நகர செயலாளர் ம. அன்பழகன், நகராட்சி பொறியாளர் சங்கர் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • முக்கிய வீதிகளின் வழியாக சென்றனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் வணிகர் சங்கம் பேரமைப்பு மாநில துணைத் தலைவரும், வாணியம்பாடி தொழில் வணிக சங்கங்களின் பேரமைப்பு தலைவர் சி.ஸ்ரீதரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்தார்.

    அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இன்று மதியம் 1 மணி வரை முழு கடையடைப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் கே.பி.எஸ் மாதேஸ்வரன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடந்தது.

    இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். 200-க்கும் மேற்பட்ட வணிகர்கள் கருப்பு பேட்ச் அணிந்தபடி வாணியம்பாடி முக்கிய வீதிகளின் வழியாக சென்றனர்.

    வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேலூர் மண்டல தலைவர் ஆம்பூர் சி. கிருஷ்ணன், வாணி யம்பாடி எம்.எல்.ஏ. செந்தில்குமார், வாணியம்பாடி தி.மு.க. நகர செயலாளர் சாரதிகுமார், தொழில் அதிபர் ஆர்.ஆர்.வாசு உட்பட வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×