என் மலர்
திருப்பத்தூர்
- குடிநீர் விநியோகம் செய்யும் பைப் லைன் உடைந்துள்ளது
- போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்
ஆம்பூர்:
ஆம்பூர் தாலுகா மின்னூர் ஊராட்சி பகுதியில் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கிருந்து கட்டுமான பணிக்காக லாரிகள் மூலம் கற்கள் மற்றும் சல்லிகள் எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்நிலையில் அதிகமான லாரிகள் அந்தப் பகுதி வழியாக செல்வதால் கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யும் பைப் லைன் உடைந்துள்ளது.
இதனையடுத்துஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- விபத்து நடந்த இடத்தில் காரின் நம்பர் பிளேட் இருந்தது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஈரோடு மாவட்டம், சாய்பாபா காலனியை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 40). டிரைவர். இவர் ஈரோட்டில் இருந்து வேலைக்காக ரெயில் மூலம் ஜோலார்பேட்டைக்கு வந்தார்.
பக்கிரி தக்கா சாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் நடந்து சென்று கொண்டிருந்த ஞானசேகரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஞானசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஞானசேகரன் உயிரிழந்த இடத்தில் விபத்து ஏற்படுத்திய காரின் நம்பர் பிளேட் இருந்துள்ளது.
இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கழிவு நீர் கால்வாயில் கலக்கிறது
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆலங்காயம்:
சேலம் மேட்டூரில் இருந்து விநியோகம் செய்யப்படும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் வழியாக அரக்கோணம் வரை விநியோகம் செய்யபட்டு வருகிறது.
வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் ஒகேனக்கல் கூட்டு நீர் வந்து செல்ல 12 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அங்கிருந்து வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யபட்டு வருகிறது.
தண்ணீர் செல்லும் பாதையில் அழுத்தம் அதிகரிக்கும் போது குழாய் வெடிக்காமல் இருக்க உபரி நீர் வெளியேறி ஏரியில் கலப்பதற்காக இஸ்லாமிய பெண்கள் கல்லூரி அருகே ராட்சத குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடிக்கடி அந்த ராட்சத குழாய் மூலம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வெளியேறி கழிவு நீர் கால்வாயில் கலந்து வீணாக செல்கிறது.
நேற்று இரவு சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சென்றது. மக்களுக்கு குடிநீராதாரமாக சென்றடைய வேண்டிய குடிநீர் வீணாக செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டது.
குடிநீர் வடிகால் வாரியம் இதன் மீது கூடுதல் கவனம் செலுத்தி மக்களின் தாகத்தை தீர்க்க வேண்டிய குடிநீரை வீணாக செல்வதை தடுக்க நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது50) கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு அரங்கல்துருகம் ஊராட்சி பகுதியில் உள்ள தனது அக்காள் புஷ்பா வீட்டிற்கு சென்றார்.
அவர் வீட்டில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது கட்டிலிருந்து திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவருக்கு திருமணமாகி உஷா என்ற மனைவியும் 2 பெண் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளது.
- படிகட்டில் இறங்க முயன்றபோது விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆலங்காயம்:
ஆலங்காயம் அடுத்த கோமட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46), தனியார் பஸ் டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி லட்சுமி என்ற மனைவியும், 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர்.
ரமேஷ் இன்று காலை பணி முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்ல, தான் வேலை செய்யும் அதே பஸ்சில் பயணம் செய்தார்.
வீட்டின் அருகே சென்றதும் அவர் ஓடும் பஸ்சில் இறங்க முயன்றார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் ரமேஷை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்காயம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மர்மமான முறையில் இறந்து கிடந்தார்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆலங்காயம் ஒன்றியம், துரிஞ்சிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சக்திவேல் (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணம் ஆகி உஷா என்கிற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் சக்திவேல் இன்று காலை நாயக்கனேரி ஊராட்சி காமனூர் தட்டு பகுதியில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு விரைந்த போலீசார் சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வனத்துறை அதிகாரி தகவல்
- விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே உள்ள சாமுண்டீஸ்வரி கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவர் நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவரது வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் திடீரென சத்தம் கேட்டது.
அப்போது முருகன் வெளியே ஓடி வந்து பார்த்தார். அவர் கரடி ஓடி சென்றதாக தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி வன சரகர் குமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கால் பதித்த தடயங்களை ஆய்வு செய்தனர்.
இந்த தகவல் சுற்றியுள்ள கிராமங்களில் காட்டு தீ போல் பரவியது .
பொதுமக்கள் அச்சத்தில் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியேறி வராமல் முடங்கினர்.
மேலும் அப்பகுதியில் கரடி நடமாட்டம் உள்ளதா என வனவர் வெங்கடேசன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் சம்பவம் இடத்திலேயே வீட்டின் பின்புறம் உள்ள ஓடை அருகே இரவு பகலாக கண்காணித்து வந்தனர்.
அப்போது கரடி நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை. மேலும் கரடி வந்ததற்கான தடயங்களும் இல்லை. எனவே கரடி கிராமத்திற்குள் வரவில்லை என வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
வனத்துறையினர் நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து வாணியம்பாடி வன சரகர் குமார் கூறியதாவது:-
விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டதை தொடர்ந்து கரடி நடமாட்டம் இல்லை என்று உறுதி செய்துள்ளோம்.
முருகன் வீட்டில் பதிந்த கால் தடயங்களையும் மற்றும் வீட்டில் கிடைத்த முடிகளையும் சேகரித்து ஆய்வு செய்தோம். கரடி வந்து சென்றதற்கான எந்த தடயங்கள் உறுதியாக இல்லை.
கரடியின் முடிகள் திடமாகவும், நீளமாகவும் இருக்கும். ஆனால் சேகரித்த முடிகள் மிகவும் மெல்லியதாக இருந்தது. மேலும் வீட்டிற்கு நுழைந்தது செந்நாய். இதனால் பொது மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விவசாய பணியில் ஈடுபட்டிருந்தபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த சின்ன பொன்னேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜ் (வயது 55), விவசாயி. மனைவி ராதா (50). தம்பதியினருக்கு 1 மகள், 1 மகன் உள்ளனர்.
வரதராஜ் நேற்று மாலை தன்னுடைய விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட வேர்க்கடலை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு வந்த கண்ணாடி விரியன் பாம்பு அவரை கடித்தது. அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து வரதராஜை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த வரதராஜ் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆத்திரம்
- போலீசார் சமரசம் செய்தனர்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனுர் ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சி 3- வது வார்டு பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் அப்பகுதி மக்கள் சாலை மறியல்.
போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் டிஎஸ்பி சரவணன், உமராபாத் இன்ஸ்பெக்டர் யுவராணி சம்பவ இடத்தில் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
நேற்று காந்தி ஜெயந்தி என்பதால் ஊரக உள்ளாட்சித் துறை அதிகாரிகள் கிராமப்புறங்களில் கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால் அவர்களுடன் பேசி தீர்வு காணுவதாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
- காதிகிராப்ட் விற்பனையை தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி காந்தியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து காதிகிராப்ட் விற்பனையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, சப்-கலெக்டர் பானு, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நண்பரை பார்க்க சென்றபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் விக்னேஷ் (வயது 22). ஐ.டி.ஐ. முடித்துவிட்டு கட்டிட வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் பள்ளிப்பட்டு கிராமத்தில் இருந்து நண்பரை பார்க்க சின்ன வேப்பம்பட்டு வழியாக வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டி ருந்தார். திருப்பத்தூர்- வாணியம்பாடி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி விக்னேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வடமாநிலத்தை சேர்ந்தவர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
ஒரிசா மாநிலம் பகுதியைச் சேர்ந்த பிஷாய் மாஜ்ஜி (வயது 50). இவருக்கு திருமணம் ஆகி 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
இவர் கேரளா மாநிலத்தில் கல் குவாரியில் வேலை செய்து வந்தார் இந்நிலையில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு ரெயில் மூலம் செல்ல திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து பயணம் செய்தார்.
அப்போது நேற்று அதிகாலை திருப்பத்தூர் ரெயில் நிலையம் அருகே அருகே ஓடும் ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்தவர் தவறி விழந்து அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






