பைக் மீது லாரி மோதி வாலிபர் தலை நசுங்கி பலி

நண்பரை பார்க்க சென்றபோது பரிதாபம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
பைக் மீது லாரி மோதி வாலிபர் தலை நசுங்கி பலி
Published on

ஆலங்காயம்:

வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் விக்னேஷ் (வயது 22). ஐ.டி.ஐ. முடித்துவிட்டு கட்டிட வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் பள்ளிப்பட்டு கிராமத்தில் இருந்து நண்பரை பார்க்க சின்ன வேப்பம்பட்டு வழியாக வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டி ருந்தார். திருப்பத்தூர்- வாணியம்பாடி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி விக்னேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com