என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "He was engaged in harvesting peanuts"

    • விவசாய பணியில் ஈடுபட்டிருந்தபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த சின்ன பொன்னேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜ் (வயது 55), விவசாயி. மனைவி ராதா (50). தம்பதியினருக்கு 1 மகள், 1 மகன் உள்ளனர்.

    வரதராஜ் நேற்று மாலை தன்னுடைய விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட வேர்க்கடலை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அங்கு வந்த கண்ணாடி விரியன் பாம்பு அவரை கடித்தது. அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து வரதராஜை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த வரதராஜ் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×