search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Experimental camp"

    • வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடந்தது
    • போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியில் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் சிறப்பு கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. முகாமுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மோட் டார் வாகன ஆய்வாளர் வெங்கட ராகவன் முன் னிலை வகித்தார்.

    சென்னை தனியார் மருத் துவமனை உடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த மருத்துவ முகாமில் 100 டிரைவர், கண் டக்டர்கள், பொதுமக்கள் பயன்பெற்றனர்.

    அதன் பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் அதிகாரிகள் விளக்கி பேசினர்.

    • காட்பாடியில் இன்று நடந்தது
    • உணவு மற்றும் போக்குவரத்து செலவு வழங்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் மாவட்ட வெல்லம் வியாபாரிகள் தர்ம ஸ்தாபனம், வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து 20-வது ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாமை நடத்துகின்றன. இந்த முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காட்பாடி காந்திநகரில் உள்ள ஆதிலட்சுமி தெய்வசிகாமணி திருமண மண்டபத்தில் நடக்

    கிறது. முகாமில் கண்பார்வை குறைபாடு, கண்புரை ஆகியவற் றுக்கு பரிசோதனை செய்யப்படும். கண்புரை நோயாளிகள் முகாம் நடைபெறும் அன்றே சென்னை பூந்தமல்லியில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படு வார்கள். அவர்களுக்கு விழிலென்ஸ், மருந்து, தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து செலவு அனைத்தும் இலவச மாக வழங்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் கே.கோவிந்த ராஜுநாயுடு, ஆர்.ஜி.தர்மராஜ், வி.நரசிம்மன், டி.ராஜேந்திரன், டி.பாலமுரளி, கே.ஆர்.விஜயன், சி.குமரவேல் ஆகியோர் செய்துள்ளனர்.

    • 205 பேருக்கு சிகிச்சை அளித்தனர்
    • இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் புதுப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்

    பன்னாட்டு அலையன்ஸ் சங்கம் சார்பில் அதன் உறுப்பினர் சோமு ஜூவல்லரி அதிபர் சோமசுந்தரம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை குழுவினர் கலந்து கொண்டு 205 பேருக்கு இலவச கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதில் 45 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 10 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

    மேலும் பாண்டிச்சேரி அழைத்து செல்லப்பட்டவர்களுக்கு இலவச உணவும் வழங்கப்பட்டது.

    • வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் புள்ளியில் துறை வாயிலாக பயிர் அறுவடை பரிசோதனை நடத்தப்படுகிறது.
    • விவசாயி இந்திராணி என்பவரது மக்காச்சோள வயலில், பயிர் அறுவடை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    வாழப்பாடி:

    ஒவ்வொரு பயிரின் மகசூலையும், ஒவ்வொரு பருவத்திலும் நிர்ணயிக்கும் நோக்கில் எதேச்சை முறையில் தேர்வு செய்யப்படும் வயல்களில், வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் புள்ளியில் துறை வாயிலாக பயிர் அறுவடை பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இதன்படி, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரம் உமையாள்புரம் கிராமத்தில், விவசாயி இந்திராணி என்பவரது மக்காச்சோள வயலில், பயிர் அறுவடை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    இந்த பரிசோதனை முகாமில், புள்ளியியல் துறை மண்டல துணை இயக்குனர் பாலசுப்ரமணியன், உதவி இயக்குநர் பெரியசாமி, ஆய்வாளர் குணசீலன், வேளாண்மை உதவி இயக்குநர் வேல்முருகன், வேளாண்மை அலுவலர் தாமரைச் செல்வன், உதவி வேளாண்மை அலுவலர் முத்துவேல், கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், நல்லவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல், ஏத்தாப்பூரில் முகாமிட்டு ஊரக திறன் பயிற்சி பெற்று வரும் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இளங்கலை மாணவர்கள் மற்றும் திருச்சி புனித ஜோசப் கல்லூரி புள்ளியியல் துறை மாணவர்களும் இந்த பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு களப்பயிற்சி பெற்றனர்.

    • பொது சுகாதாரத்துறை சார்பாக யானைக்கால் நோய் ரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • வட்டார சுகாதார அலுவலர் தாம்சன் தலைமை வகித்தார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு ஜெரினாகாடு பகுதியில் பொது சுகாதாரத்துறை சார்பாக யானைக்கால் நோய் ரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. வட்டார சுகாதார அலுவலர் தாம்சன் தலைமை வகித்தார். இரவு நேரங்களில் மட்டுமே இந்நோய்க்கான தாக்கம் ரத்தத்தில் தெரியும் என்பதால், இரவு நேரத்தில் இந்த முகாம் நடைபெற்றது.

    ஜெரினாகாடு பகுதியில் உள்ள அனைத்து கிரா மங்களுக்கும் சென்று சுகாதாரத்துறையினர் பரிசோ தனை மேற்கொண்டனர். இதில் அந்தந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் செல்வகுமார் இம்முகா மிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • வட்டார சுகாதார ஆய்வாளா்கள் ரகுபதி, மணி, மோகன்ராஜ், காா்த்தி, ராதாகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.
    • அப்பகுதியைச் சோ்ந்த 140 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

    காங்கயம்:

    யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான ரத்தப் பரிசோதனை முகாம் காங்கயத்தில் நடைபெற்றது.

    காங்கயம் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் முரளி, காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, காங்கயம் நகரின் 7வது வாா்டுக்கு உட்பட்ட காா்த்திகை நகா், எம்.பி.எம். நகா் ஆகிய பகுதிகளில் யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில், அப்பகுதியைச் சோ்ந்த 140 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

    இந்த மருத்துவ முகாமில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பழனிசாமி, நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், வட்டார சுகாதார ஆய்வாளா்கள் ரகுபதி, மணி, மோகன்ராஜ், காா்த்தி, ராதாகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

    ×