என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யாருக்கும் டெங்கு பாதிப்பு கிடையாது"

    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்
    • மாவட்டம் முழுவதும் யாருக்கும் டெங்கு பாதிப்பு கிடையாது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் வளையாம்பட்டு ஊராட்சி காமராஜர் நகர மற்றும் உதயேந்திரம், வாணியம்பாடி நகர பகுதியான திருமாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

    வீடு வீடாக சென்று டெங்கு கொசுவை ஒழிக்க கூடிய புகை மருந்து அடிக்கப்பட்டது.டெங்கு கொசு புழுக்கள் உருவாகும் பழைய டயர்,தேங்காய் ஒடு ஆகியவற்றை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

    சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்களையும், டெங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணிகளையும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடைபெற்று வரும் பாதுகாப்பு பணிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த 40 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

    முகாமில் காய்ச்சல், சளி, தொண்டைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ள வர்களை கண்டறியப்பட்டு அவர்களை கண்காணி க்கப்பட்டு வருகிறது.

    தற்போது மாவட்டம் முழுவதும் யாருக்கும் டெங்கு பாதிப்பு கிடையாது என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.

    ஆய்வின் போது வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, தாசில்தார் சாந்தி, மருத்துவ அலுவலர் அருள்பிரசாத், ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி, வார்டு உறுப்பினர்கள் சுகாதார பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×