என் மலர்
திருப்பத்தூர்
- உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
- எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது
ஆம்பூர்:
ஆம்பூரில் சாலையோர கடைகள் மற்றும் சில ஓட்டல்களில் உணவுகள் தரமற்றதாக இருப்பதாக உணவு துறை அதிகாரிக ளுக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் மற்றும் ஆம்பூர் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி ஆகியோர் ஆம்பூர் நகராட்சி பகுதியில் உள்ள உமர் ரோட்டில் பானிபூரி கடை, போண்டா கடை மற்றும் தள்ளுவண்டிசிக்கன், மட்டன் சூப் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் 3 தள்ளு வண்டி கடைகளுக்கு உணவு பாதுகாப்பு பதிவு சான்று இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதனால் அந்த கடைகளுக்கு உணவு பாதுகாப்பு பதிவு சான்று பெற எச்சரித்து நோட்டீஸ் வழங் கப்பட்டது.
மேலும் 2 கடைகளில் தமிழக அரசு தடை செய் யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து தலா ரூ.2000 வீதம் ரூ.4,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு தள்ளு வண்டி கடையில் ஒருமுறை பயன்படுத்திய எண் ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சுமார் 3 லிட்டர் எண்ணெய்யை பறிமுதல் செய்து கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் அந்த கடைக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளித்து ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
தள்ளுவண்டி கடைக்காரர்கள் உணவுப் பொருளில் வண் ணம் சேர்க்காமல், வாழை இலையை பயன்படுத்துவது, சில் வர் பிளேட்டில் உணவு தருவது, பஜ்ஜி போன்றவற்றை கண் ணாடி பெட்டியில் வைத்து விற்பனை செய்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பேட்டி
- ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நடக்கிறது
திருப்பத்துார்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது தொடுக்கப்படும் அடக்குமுறை மூலமாக ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுவதைக் கண்டித்தும், பாஜ அரசின் சர்வாதிகார, பாசிச நடவடிக்கைகளை கண்டித்தும், அதை முறியடிக்கவும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வழிகாட்டுதல்படி, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தலைமையில், தீவிர பரப்புரை மேற்கொண்டு, மக்கள் ஆதரவைத் திரட்ட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூர் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் பிரபு தலைமை வகித்தார். நகரத் தலைவர் பாரத் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் லட்சுமி ராமச்சந்திரன் கலந்து கொண்டார். தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில், வரும் 15-ந்தேதி மாவட்டத் தலைநகரங்களில் ெரயில் மறியல் போராட்டம் செய்தல் வகையில், ஆம்பூரில் ெரயில் மறியல் போராட்டம் நடத்துவது, 20-ந்தேதி திருப்பத்துாரில் இயங்கி வரும் தலைமை தபால் நிலைய கட்டடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, திருப்பத்தூர் மாவட்ட மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் மோடிக்கு அவர் செய்து வரும் தவறுகள் குறித்து கடிதம் அனுப்புவது ஒரு சட்டசபை தொகுதியில் 100 இடம் என 400 இடங்களில் தெருமுனை பிரசாரம் நடத்துவது என்பன பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து செய்தித் தொடர்பாளர் லட்சுமி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், 'இந்தியாவில் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறது. எப்போதெல்லாம் நீதிக்கு பங்கம் வருகிறதோ, அப்போது எல்லாம் காங்கிரஸ் நீதியின் பக்கம்தான் நிற்கும்.
ராகுல்காந்தி, மோடியை பார்த்து கேள்வி கேட்டார் என்ற ஒரே காரணத்துக்காக பழிவாங்கப்படுவது நியாயமில்லை. கர்நாடகாவில் ராகுல் பேசியது திரித்துக்கூறப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருக்கும். அல்லது பிரதான எதிர்கட்சியாக இருக்கும். விரைவில் தமிழகத்தில் அது நடக்கும். அண்ணாமலை அவரின் வாட்ச்பில்லை 1-ந்தேதி காட்டுவேன் என்றார்.
பின்னர் 14-ந்தேதி என்கிறார். அவரின் நேர்மை அவ்வளவுதான். ஒரே நாடு, ஒரே தேர்தல் நடக்காத ஒன்று. அப்படி இருந்தால், இப்போது கர்நாடகாவில் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டிருக்க மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி தன் ஆசையை கூறித் திரிகிறார்.
மத்திய அரசின் பல திட்டங்கள் காணாமல் போய் விட்டது. இதற்கு எடுத்துக்காட்டு உஜ்வாலா திட்டம். தமிழக காங்கிரஸ் தலைவர் 4 பேருடன் சேர்ந்து ெரயில் மறியலில் ஈடுபட்டார் என தவறான தகவல்களை பரப்புகின்றனர்.
அன்றைய தினம், ெரயில் ஏறுவதற்காக சென்ற போது, அவருக்கு ராகுல்காந்தி குறித்த தகவல் கிடைத்தது. அதனால், உடன் இருந்தவர்களுடன் சேர்ந்து ெரயில் மறியலில் ஈடுபட்டார்.
அதுதான் காங்கிரஸ். ஒன்றை ஆளாக இருந்தாலும் தவறை தட்டிக் கேட்போம். அதைத்தான் எங்கள் தலைவரும் செய்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- யார்? என அடையாளம் தெரியவில்லை
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அருகே எதிரேயுள்ள சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
இது சம்பந்தமாக அப்பகுதி பொது மக்கள் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஜோலா ர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்காக வரும் போது சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து இறந்திருக்க லாம் என போலீசார் சந்தேகி க்கின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று மாலை பீர் பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு திடீரென சாலையில் அமர்ந்து கொண்டார்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சாலையில் அமர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியவரை பிடித்து சென்றனர்.
இது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலூரை சேர்ந்தவர்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் எஸ்பி அலுவலகத்திற்கு நேற்று இரவு தொலைபேசி மூலம் மாதனூர் பஸ் நிலையத்தில் வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக புகார் வந்தது.
இதனையடுத்து ஆம்பூர் தாலுக்கா போலீசார் மாதனூர் பஸ் நிலையத்திற்கு சென்றனர். அப்போது வாலிபர் ஒருவர் பொதுமக்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
பின்னர் அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை சேர்ந்த விஜயகுமார் என்பது தெரிந்தது.
பின்னர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.
- 5 பவுன் நகை அபேஸ்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே மல்லபள்ளி கனிகார்ச்சி வட்டம் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி ஜெய்ஸ்ரீ (வயது 28) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.
பள்ளி விடுமுறை என்பதால் ஜெயஸ்ரீ தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீடான கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே வெங்கட்டாபுரம் பகுதிக்கு நேற்று முன்தினம் சென்றிருந்தார்.
வீட்டில் மாமியார் தனியாக இருந்தார். வீட்டில் இருந்து மாமியார் அருகில் உள்ள கொட்டாவூர் பகுதியில் நடைபெறும் திருவிழாவில் தெருக்கூத்து நாடகம் பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு நேற்று முன்தினம் இரவு சென்றார்.
பின்னர் நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந் தார்.
இதுகுறித்து அவர் ஜெயஸ்ரீக்கு போனில் கூறினார். அவர் வந்து பார்த்த போது பீரோவில் வைத்து இருந்த 5 பவுன் நகை, 750 கிராம் வெள்ளி நகைகள், ரூ.4 ஆயிரம் மற்றும் எல்.இ.டி. டி.வி. திருட்டு போனது தெரியவந்தது. பின்னர் இது சம்பந்தமாக ஜெயஸ்ரீ நாட்டறம்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் வழங்கினார்
- ரமலான் நோன்பு திறப்பு விழா நடந்தது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் காயிதேமில்லத் கல்வி அறக்கட்டளை சார்பில் காயிதேமில்லத் 51 வது நினைவு நாளை முன்னிட்டு 8 பள்ளிகளுக்கு பீரோக்கள் வழங்கும் நிகழ்ச்சி, சமய நல்லிணக்க ரமலான் நோன்பு திறப்பு விழா கோட்டை தெரு திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஜூபேர் அஹமத் தலைமை தாங்கினார். முஹம்மத் கலீம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டார்.
பள்ளிகளுக்கு பீரோக்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில். திருப்பத்தூர் நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், நகர மன்ற துணைத்தலைவர் ஏ.ஆர். சபியுல்லா, ரோட்டரி சங்க தலைவர் அருணகிரி, லயன்ஸ் சங்க தலைவர்.கிறிஸ்டி ஆனந்தன், வட்டார தலைவர் மணி பொது மக்கள், தலைமை ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.
முடிவில் கவுன்சிலர் முன்னா நன்றி கூறினார்.
- 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப் படும் இருசக்கர வாகனங்கள் கடந்த சில வாரங்களாக அடிக்கடி திருட்டு போவதாக வந்த புகாரின் பேரில் திருப் பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இருசக்கர வாகன திருடர்களை பிடிக்க தனிப் படை அமைக்க உத்தரவிட்டார்.
இந்தநிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த ஒருவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், அவர் நாட்ட றம்பள்ளி தாலுகா பச்சூர் அரசம்பட்டிகிராமத்தைசேர்ந்த சிவராஜ் மகன் பெருமாள் (வயது 30) என்பதும், திருப்பத் தூர் அரசு மருத்துவமனை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
மேலும் இவர் திருடும் இருசக்கர வாகனத்தை புத்துக் கோயில் பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வரும் வாணி யம்பாடி வேப்பமர சாலையை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் சரவணன் (26) என்பவரிடம் குறைந்த விலைக்கு விற்று விடுவதும், அவர் அந்த வாகனங்களை தனித்தனியாக பிரித்து விற்று வந்ததும் தெரியவந்தது
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 மோட் டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசாரின் ரோந்து பணியில் சிக்கினார்
- ஜெயிலில் அடைப்பு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள புது ஓட்டல் தெரு பகுதியில் வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
திருப்பத்தூர் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- வந்தே பாரத் ரெயில் சேவையால் நடவடிக்கை
- ரெயில்வே கோட்ட அதிகாரி தகவல்
ஜோலார்பேட்டை:
சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை எதிரொலியாக, கோவை இன்டர்சிட்டி, பெங்களூரு, திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில்களின் இயக்க நேரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
கோவை-பெங்களூரு இடையேயான டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில் புதன்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் இயக்கப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி (வண்டி எண்-22666) கோவையில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு திருப்பூருக்கு 6.18 மணிக்கு வரும். பின்னர் அங்கிருந்து 6.20 மணிக்கு புறப்பட்டு ஈரோடு ரெயில் நிலையத்திற்கு 7.05 மணிக்கு வரும். பின்னர் அங்கிருந்து 7.10 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு 8.02 மணிக்கு வந்து, 8.05 மணிக்கு பெங்களூரு புறப்பட்டு செல்கிறது.
மறு மார்க்கத்தில் (வண்டி எண்-22655) சேலத்திற்கு 5.52 மணிக்கும், ஈரோட்டுக்கு 6.50 மணிக்கும், திருப்பூருக்கு 7.38 மணிக்கும், கோவைக்கு 9 மணிக்கு சென்றடையும்.
கோவை- திருப்பதி ரெயில் கோவையில் இருந்து (வாரத்திற்கு 4 நாட்கள்) 6.10 மணிக்கு புறப்பட்டு, 6.48 மணிக்கு திருப்பூர், 7.30 மணிக்கு ஈரோடு, 8.27 மணிக்கு சேலம், 10.03 மணிக்கு ஜோலார்பேட்டை சென்றடையும். கோவை-சென்னை இன்டர்சிட்டி ரெயில் கோவையில் இருந்து 6.20 மணிக்கு புறப்படும்.
பின்னர் திருப்பூருக்கு 7 மணி, ஈரோடு-7.45, சேலம்-8.42, பொம்மிடி-9.14, மொரப்பூர்-9.33, சாமல்பட்டி-9.54, ஜோலார்பேட்டை-10.33, காட்பாடி-11.33, அரக்கோணம்-12.23, பெரம்பூர்-1.08, சென்னை சென்டிரலுக்கு 1.50 மணிக்கு சென்றடையும்.
சென்னை-கோவை இடையேயான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை சென்டிரலில் இருந்து பகல் 2.35 மணிக்கு புறப்பட்டு, ஜோலார்பேட்டைக்கு 5.33 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயில் இயக்க நேர மாற்றம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போலீசாரின் ரோந்து பணியில் சிக்கினார்
- ஜெயிலில் அடைப்பு
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சான்றோர் குப்பம் கண்ணதாசன் தெரு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கர்நாடகா மாநிலம் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.
- மீன் பிடிக்க சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை சந்தை மேட்டில் வசித்து வருபவர் அருண். இவரது மகன் பார்த்திபன் (வயது 12). இவர் தனது வீட்டு அருகே உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று புனித வெள்ளி என்பதால் பள்ளி விடுமுறை விடப்பட்டது. இதனால் பார்த்தீபன் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள குட்டையில் மீன் பிடிக்கச் சென்றார். அப்போது கால் தவறி சேற்றில் மாட்டிக் கொண்டார்.
இதனால் குட்டையில் மூழ்கி இதனால் சக நண்பர்கள் கூச்சல் போடவே அங்கிருந்தவர்கள் பள்ளி மாணவனை மீட்டு அருகில் உள்ள புதுப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மேல்சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவன் சிறுது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தந்தை அருண் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின்பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்திபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.






