என் மலர்
உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் லட்சுமி ராமச்சந்திரன் பேட்டி அளித்த காட்சி. மாவட்ட தலைவர் பிரபு நகரத்தலைவர் பாரத் உள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 400 இடங்களில் தெருமுனை பிரசாரம்
- காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பேட்டி
- ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நடக்கிறது
திருப்பத்துார்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது தொடுக்கப்படும் அடக்குமுறை மூலமாக ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுவதைக் கண்டித்தும், பாஜ அரசின் சர்வாதிகார, பாசிச நடவடிக்கைகளை கண்டித்தும், அதை முறியடிக்கவும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வழிகாட்டுதல்படி, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தலைமையில், தீவிர பரப்புரை மேற்கொண்டு, மக்கள் ஆதரவைத் திரட்ட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூர் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் பிரபு தலைமை வகித்தார். நகரத் தலைவர் பாரத் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் லட்சுமி ராமச்சந்திரன் கலந்து கொண்டார். தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில், வரும் 15-ந்தேதி மாவட்டத் தலைநகரங்களில் ெரயில் மறியல் போராட்டம் செய்தல் வகையில், ஆம்பூரில் ெரயில் மறியல் போராட்டம் நடத்துவது, 20-ந்தேதி திருப்பத்துாரில் இயங்கி வரும் தலைமை தபால் நிலைய கட்டடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, திருப்பத்தூர் மாவட்ட மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் மோடிக்கு அவர் செய்து வரும் தவறுகள் குறித்து கடிதம் அனுப்புவது ஒரு சட்டசபை தொகுதியில் 100 இடம் என 400 இடங்களில் தெருமுனை பிரசாரம் நடத்துவது என்பன பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து செய்தித் தொடர்பாளர் லட்சுமி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், 'இந்தியாவில் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறது. எப்போதெல்லாம் நீதிக்கு பங்கம் வருகிறதோ, அப்போது எல்லாம் காங்கிரஸ் நீதியின் பக்கம்தான் நிற்கும்.
ராகுல்காந்தி, மோடியை பார்த்து கேள்வி கேட்டார் என்ற ஒரே காரணத்துக்காக பழிவாங்கப்படுவது நியாயமில்லை. கர்நாடகாவில் ராகுல் பேசியது திரித்துக்கூறப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருக்கும். அல்லது பிரதான எதிர்கட்சியாக இருக்கும். விரைவில் தமிழகத்தில் அது நடக்கும். அண்ணாமலை அவரின் வாட்ச்பில்லை 1-ந்தேதி காட்டுவேன் என்றார்.
பின்னர் 14-ந்தேதி என்கிறார். அவரின் நேர்மை அவ்வளவுதான். ஒரே நாடு, ஒரே தேர்தல் நடக்காத ஒன்று. அப்படி இருந்தால், இப்போது கர்நாடகாவில் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டிருக்க மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி தன் ஆசையை கூறித் திரிகிறார்.
மத்திய அரசின் பல திட்டங்கள் காணாமல் போய் விட்டது. இதற்கு எடுத்துக்காட்டு உஜ்வாலா திட்டம். தமிழக காங்கிரஸ் தலைவர் 4 பேருடன் சேர்ந்து ெரயில் மறியலில் ஈடுபட்டார் என தவறான தகவல்களை பரப்புகின்றனர்.
அன்றைய தினம், ெரயில் ஏறுவதற்காக சென்ற போது, அவருக்கு ராகுல்காந்தி குறித்த தகவல் கிடைத்தது. அதனால், உடன் இருந்தவர்களுடன் சேர்ந்து ெரயில் மறியலில் ஈடுபட்டார்.
அதுதான் காங்கிரஸ். ஒன்றை ஆளாக இருந்தாலும் தவறை தட்டிக் கேட்போம். அதைத்தான் எங்கள் தலைவரும் செய்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.






