என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • டிரைவர் உள்பட 2 பேர் கைது
    • வாணிப கழக கிடங்கில் மீட்கப்பட்ட அரிசி ஒப்படைப்பு

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே பச்சூர் வழியாகவெளி மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத் தப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசா ருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பே ரில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பச்சூர் பகுதிக்கு விரைந்து சென்று வாகன சோதனை செய்தனர்.

    அப்போது சந்தேகத்தின் பேரில் வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேசன் அரிசிவெளி மாநிலத்திற்கு கடத்தியது தெரியவந்தது.

    இதனையடுத்து காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் வாணியம்பாடி அடுத்த ஆவரங்குப்பம் பகுதியைச் சேர்ந்த தாஸ் என்பவரது மகன் சந்தோஷ் (வயது 33), நாட்டறம்பள்ளி அருகே உள்ள முத்தனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சீனன் என்பவரது மகன் ஏழு மலை (36) என தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து டிரைவர் உள்பட 2 பேரையும் கைது செய்தனர்.

    ஒரு டன் ரேசன் அரிசியை காருடன் பறிமுதல் செய்தனர்.

    பறி முதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    • அதிகாரிகள் வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் வாக்குவாதம்
    • நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி வாக்குறுதி

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்தவடகரை ஊராட்சி பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு அருகில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக தாசில்தார் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்தனர்.

    இந்த நிலையில் அங்கு பணியை தொடங்குவதற்காக பொக்லைன் எந்திரம் வந்துள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் இந்த இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டக்கூடாது என்று தெரிவித்தனர். பின்னர் பொக்லைன் எந்திரத்தை திரும்பி அனுப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் மற்றும் உமராபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராணி சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பர்ப்பரப்பு ஏற்பட்டது.

    பின்னர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது குறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

    • 300-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை
    • டாக்டர்கள், நர்சுகள் உடன் சென்றனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள கலைஞர் தெருவில் அமைந்துள்ள நாட்டறம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் தினம்தோறும் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட நோயாளிகள் கண் மருத்துவம், எலும்பு முறிவு, உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனால் தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை அளிக்க தயார் நிலையில் வைத்து இருக்க உத்தரவிட்டார்.

    அதன் பேரில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது இந்நிலையில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதார மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திடீரென்று நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார் .

    அப்போது டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் தங்களது ஒதுக்கப்பட்ட பணிகள் சரிவர செய்கின்றன என ஆய்வு மேற்கொண்டார்.

    அதனை தொடர்ந்து புறநோயாளிகளிடமும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் தங்கி உள்ள அனைத்து வார்டுகளில் நேரிடையாக சென்று டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் அரசு மருத்துவமனை முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தூய்மையாக வைத்து இருக்க வேண்டும் என இணை இயக்குநர் மாரிமுத்து டாக்டர்களிடம் கூறினார்.

    ஆய்வின் போது நாட்டறம்பள்ளி அரசு டாக்டர்கள் பாலகி ருஷ்ணன், கார்த்திகேயன், சுகாதார செவிலியர்கள் பணியாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • காங்கிரஸ் சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆம்பூர்:

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு மற்றும் பா.ஜ.க. அரசின் அடக்குமுறையை கண்டித்து வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில் தெரு முனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பேரணாம்பட்டு தெற்கு ஒன்றிய தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் வரவேற்றார். தெரு முனை பிரசார கூட்டத்தை வேலூர் மாவட்ட காங்கிரஸ்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி சிறப்புரை ஆற்றினர்.

    குடியாத்தம் நகர காங்கிரஸ் தலைவர் விஜயன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம், மாவட்ட நிர்வாகிகள் சரவணன். மகாலட்சுமி, ராகீப் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஜானகிராமன் நன்றி கூறினார்.

    • தனித்தேர்வர்கள் 22 பேர் வரவில்லை
    • வினாத்தாள்களில் குழப்பம் இருந்ததாக குற்றச்சாட்டு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந் தேதி தொடங்கியது. நேற்று ஆங்கில தேர்வு நடந்தது. திருப் பத்தூர் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி, தனியார் பள் ளிகள் என மொத்தம் 219 பள் ளிகளை சேர்ந்த 16,410, பேரும், தனித்தேர்வர்கள் 230 பேரும் தேர்வு எழுத இருந்தனர்.

    15755 பேர் தேர்வு எழுதினர். 655 பேர் தேர்வு எழுத வர வில்லை. இதேபோல் தனித் தேர்வர்களில் 230 பேரில் 22 பேர்தேர்வுஎழுதவரவில்லை. 4, 5, 6 ஆகிய வினாத்தாளில் ஆங்கில தேர்வு வினாத்தாள்களில் குழப்பம் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

    • குறைதீர்வு கூட்டத்தில் புகார்
    • விலைப்பட்டியல் வைக்க வலியுறுத்தல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத் தில் டாஸ்மாக் கடை களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் பணம் வசூல் செய்வ தாகவும், இதனை தடுக்க கடை முன்பு விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என்று குறை தீர்வுகூட் டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அளிக்கப்பட்டது.

    திருப்பத்தூர் கெலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக் கள் குறை தீர்வுக்கூட்டம் இ கலெக்டர் பாஸ்கரபாண்டி னர் யன் தலைமையில் நடந்தது. பத்து இதில் சாலை வசதி, குடிநீர் முன் வசதி, வீட்டுமனை பட்டா, னர் முதியோர் உதவித்தொகை, சா பொதுநலன் சார்ந்த பிரச்சி புப் னைகள் குறித்து 305 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

    கூட்டத்தில் திருப்பத்தூர் 5 மாவட்ட சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தினர் அளித்த மனுவில்; திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பணம் வசூலிக்கப்படுகிறது.

    இதன் மூலம் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் - வரை வருவாய் ஈட்டி வருகின்றனர் இதை தடுக்கஅனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது வாங்க வரும் மதுப் பிரியர்களுக்கு கட்டாயமாக பற்று சீட்டு வழங்க வேண்டும்.

    மதுபான வகைகளின் விலையை குறிப்பிட்டு கடை முன்பாக விலைப்பட்டியல் வைக்க வேண்டும். மேலும் கூடுதல் பணம் வசூல் செய் யும் கடை விற்பனையாளர் கள், மேற்பார்வையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப் பட்டு இருந்தது.

    • நகர அ.தி.மு.க சார்பில் திறப்பு
    • முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டார்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் டவுன் போலீஸ் நிலையம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் டி.டி. குமார் தலைமை வகித்தார். அனைவரையும் மாவட்ட பிரதிநிதி டி.எம். ரவி வரவேற்றார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் டாக்டர் என்.திருப்பதி, ஒன்றிய செயலாளர் சி. செல்வம், முன்னிலை வகித்தனர்.

    தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் கே சி. வீரமணி, திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசிணி, இளநீர், நீர்மோர், பாதாம், ரோஸ்மில்க், வழங்கி பேசியதாவது :-

    கடுமையான கோடை வெப்பத்தை தணிக்க அனைத்து இடங்களிலும் தண்ணீர் பந்தல் திறக்க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார் அதனைத் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.

    ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கின்ற கட்சி அ.தி.மு.க. வரும் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்றார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே. ஜி.ரமேஷ், முன்னாள் அரசு வழக்கறிஞர் ரமேஷ், மாவட்ட பாசறை செயலாளர் டிடிசி.சங்கர், அவைத் தலைவர் ரங்கநாதன், தம்பா கிருஷ்ணன், சோனா வாசு, சந்திரமோகன், தாஜ், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஜெ.தினகரன் நன்றி கூறினார்.

    • அடையாளம் தெரிந்தது
    • குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில்வே ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அருகே சாக்கடை கால்வாயில் விழுந்து இறந்த நபர் போலீசார் விசாரணையில் அரக்கோணத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி என அடையாளம் தெரிந்தது.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில்வே ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவு அங்குள்ள சாக்கடை கால்வாயில் இறந்து கிடந்த வாலிபர் உடலை ஜோலார்பேட்டை போலீசார் பிணமாக மீட்டனர்.

    மேலும் இறந்தவர் குறித்து ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் நேற்று அரக்கோணம் முதூர் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா என்பவர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்து தனது கணவர் ஜெய்சங்கர் (வயது 38) என்றும் இவர் கடந்த 8-ந் தேதி மாலை பெங்களூர் பகுதியில் கட்டிட வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் தனது கணவர் தன்னுடன் செல்போனில் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பகுதியில் இருப்பதாக பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

    அடையாளம் தெரிந்தது

    மேலும் அதன் பிறகு எந்த தகவலும் இல்லாததால் சந்தேகத்தின் பேரில் தன் கணவரை தேடி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    இதனையெடுத்து போலீசார் சாக்கடை கால்வாயில் இறந்து கிடந்தவரை நேரில் அழைத்துச் சென்று காண்பித்த போது இறந்தவர் இவரது கணவர் என்பது தெரியவந்தது.

    மேலும் இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மேலும் ஜெய்சங்கர் என்பவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் இவர் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வந்து, மது அருந்திவிட்டு மது போதையில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து இறந்ததும் தெரிய வந்துள்ளது. இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை பிரேத பரிசோதனை பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் ஊராட்சி மூசல் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 40). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் 2 மகள் ஒரு மகன் உள்ளனர்.

    நேற்று மாலை அம்மை யப்பன் நகர் பகுதியில் உள்ள ஏரியில் ரவி மீன் பிடிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உள்ளார். இதனை கண்ட அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த சிலர் தண்ணீரில் மூழ்கிய அவரை மீட்டனர்.

    அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே ரவி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் தேர்வு நடந்தது
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    திருப்பத்தூர்:

    தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் மாவட்ட கூட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் திருப்பத்தூர் அரசு பூங்கா உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் ஏ.ஜி.அயூப்கான் கலந்து கொண்டு தேர்தல் அலுவலராக தேர்தலை நடத்தினார் கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார், முருகன், மேலிட பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற தேர்தலில் குரும்பேரி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மாவட்ட தலைவராக தேசிங்குராஜன், அரசு மேல்நிலைப்பள்ளி கொடுமாம்பள்ளி ஆசிரியர் மாவட்டச் செயலாளராக வி.மூர்த்தி, அரசு மேல்நிலைப்பள்ளி மீட்டூர் ஆசிரியர் மாவட்ட பொருளாளராக ஆர்.துக்கன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் அரசு உயர்நிலைப்பள்ளி மீட்டூர் அருந்ததியர் காலனி ஆசிரியர் ஆர்.மதுரா, உட்பட தலைமை நிலைய செயலாளர், செய்தி தொடர்பாளர், மாவட்ட துணை தலைவர்கள், மாவட்ட இணைச்செயலாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது

    புதிய பஞ்சமி திட்டம் ரத்து செய்து பழைய பஞ்சமி திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும், 4 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இறுதியில் வட்டாரத் தலைவர் டி பிரகாசம் நன்றி கூறினார்.

    • தம்பதியிடையே அடிக்கடி குடும்ப தகராறு
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி காளியப்ப நகரைச் சேர்ந்தவர் சக்திவேல்(27). லாரி டிரைவர். இவரது மனைவி ஜெயசூர்யா (22). இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளார்.

    இந்நிலையில், தம்பதியிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால், விரக்தியடைந்த ஜெயசூர்யா தனது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். பணி முடிந்து வீடு திரும்பிய சக்திவேல், மனைவி மற்றும் மகன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீஸ் நிலையத்தில் நேற்று சக்திவேல் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • போலீசாரின் ரோந்து பணியில் சிக்கினார்
    • ஜெயிலில் அடைப்பு

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திர எல்லையில், ஜவ்வாது ராமசமுத்திரம் பகுதியில் திம்மாம்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஜெ.ஆர்.சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரது மகன் யுவராஜ் (வயது 28) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    அவரை நிறுத்தி சோதனை செய்த போது அவர் வனப்பகுதியை ஒட்டி உள்ள ஜவ்வாது ராமசமுத்திரம் ஏரி பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத்துப் பாக்கியுடன் சென்றது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து யுவராஜை கைது செய்து வாணியம்பாடி கோர்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×