என் மலர்
உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி.
வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்
- டிரைவர் உள்பட 2 பேர் கைது
- வாணிப கழக கிடங்கில் மீட்கப்பட்ட அரிசி ஒப்படைப்பு
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே பச்சூர் வழியாகவெளி மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத் தப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசா ருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பே ரில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பச்சூர் பகுதிக்கு விரைந்து சென்று வாகன சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேசன் அரிசிவெளி மாநிலத்திற்கு கடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் வாணியம்பாடி அடுத்த ஆவரங்குப்பம் பகுதியைச் சேர்ந்த தாஸ் என்பவரது மகன் சந்தோஷ் (வயது 33), நாட்டறம்பள்ளி அருகே உள்ள முத்தனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சீனன் என்பவரது மகன் ஏழு மலை (36) என தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து டிரைவர் உள்பட 2 பேரையும் கைது செய்தனர்.
ஒரு டன் ரேசன் அரிசியை காருடன் பறிமுதல் செய்தனர்.
பறி முதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.






