என் மலர்
நீங்கள் தேடியது "அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு"
- 300-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை
- டாக்டர்கள், நர்சுகள் உடன் சென்றனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள கலைஞர் தெருவில் அமைந்துள்ள நாட்டறம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் தினம்தோறும் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட நோயாளிகள் கண் மருத்துவம், எலும்பு முறிவு, உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனால் தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை அளிக்க தயார் நிலையில் வைத்து இருக்க உத்தரவிட்டார்.
அதன் பேரில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது இந்நிலையில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதார மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திடீரென்று நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார் .
அப்போது டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் தங்களது ஒதுக்கப்பட்ட பணிகள் சரிவர செய்கின்றன என ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து புறநோயாளிகளிடமும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் தங்கி உள்ள அனைத்து வார்டுகளில் நேரிடையாக சென்று டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
மேலும் அரசு மருத்துவமனை முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தூய்மையாக வைத்து இருக்க வேண்டும் என இணை இயக்குநர் மாரிமுத்து டாக்டர்களிடம் கூறினார்.
ஆய்வின் போது நாட்டறம்பள்ளி அரசு டாக்டர்கள் பாலகி ருஷ்ணன், கார்த்திகேயன், சுகாதார செவிலியர்கள் பணியாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.






