என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாக்கடை கால்வாயில் பிணமாக கிடந்தவர் அரக்கோணம் தொழிலாளி
    X

    சாக்கடை கால்வாயில் பிணமாக கிடந்தவர் அரக்கோணம் தொழிலாளி

    • அடையாளம் தெரிந்தது
    • குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில்வே ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அருகே சாக்கடை கால்வாயில் விழுந்து இறந்த நபர் போலீசார் விசாரணையில் அரக்கோணத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி என அடையாளம் தெரிந்தது.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில்வே ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவு அங்குள்ள சாக்கடை கால்வாயில் இறந்து கிடந்த வாலிபர் உடலை ஜோலார்பேட்டை போலீசார் பிணமாக மீட்டனர்.

    மேலும் இறந்தவர் குறித்து ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் நேற்று அரக்கோணம் முதூர் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா என்பவர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்து தனது கணவர் ஜெய்சங்கர் (வயது 38) என்றும் இவர் கடந்த 8-ந் தேதி மாலை பெங்களூர் பகுதியில் கட்டிட வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் தனது கணவர் தன்னுடன் செல்போனில் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பகுதியில் இருப்பதாக பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

    அடையாளம் தெரிந்தது

    மேலும் அதன் பிறகு எந்த தகவலும் இல்லாததால் சந்தேகத்தின் பேரில் தன் கணவரை தேடி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    இதனையெடுத்து போலீசார் சாக்கடை கால்வாயில் இறந்து கிடந்தவரை நேரில் அழைத்துச் சென்று காண்பித்த போது இறந்தவர் இவரது கணவர் என்பது தெரியவந்தது.

    மேலும் இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மேலும் ஜெய்சங்கர் என்பவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் இவர் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வந்து, மது அருந்திவிட்டு மது போதையில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து இறந்ததும் தெரிய வந்துள்ளது. இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை பிரேத பரிசோதனை பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×