என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி வழங்கினார். அருகில் நகர செயலாளர் டி.டி.குமார் உள்ளார்.
திருப்பத்தூரில் தண்ணீர் பந்தல்
- நகர அ.தி.மு.க சார்பில் திறப்பு
- முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டார்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் டவுன் போலீஸ் நிலையம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் டி.டி. குமார் தலைமை வகித்தார். அனைவரையும் மாவட்ட பிரதிநிதி டி.எம். ரவி வரவேற்றார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் டாக்டர் என்.திருப்பதி, ஒன்றிய செயலாளர் சி. செல்வம், முன்னிலை வகித்தனர்.
தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் கே சி. வீரமணி, திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசிணி, இளநீர், நீர்மோர், பாதாம், ரோஸ்மில்க், வழங்கி பேசியதாவது :-
கடுமையான கோடை வெப்பத்தை தணிக்க அனைத்து இடங்களிலும் தண்ணீர் பந்தல் திறக்க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார் அதனைத் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கின்ற கட்சி அ.தி.மு.க. வரும் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே. ஜி.ரமேஷ், முன்னாள் அரசு வழக்கறிஞர் ரமேஷ், மாவட்ட பாசறை செயலாளர் டிடிசி.சங்கர், அவைத் தலைவர் ரங்கநாதன், தம்பா கிருஷ்ணன், சோனா வாசு, சந்திரமோகன், தாஜ், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஜெ.தினகரன் நன்றி கூறினார்.






