என் மலர்
உள்ளூர் செய்திகள்

4 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தல்
- பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் தேர்வு நடந்தது
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
திருப்பத்தூர்:
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் மாவட்ட கூட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் திருப்பத்தூர் அரசு பூங்கா உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் ஏ.ஜி.அயூப்கான் கலந்து கொண்டு தேர்தல் அலுவலராக தேர்தலை நடத்தினார் கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார், முருகன், மேலிட பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற தேர்தலில் குரும்பேரி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மாவட்ட தலைவராக தேசிங்குராஜன், அரசு மேல்நிலைப்பள்ளி கொடுமாம்பள்ளி ஆசிரியர் மாவட்டச் செயலாளராக வி.மூர்த்தி, அரசு மேல்நிலைப்பள்ளி மீட்டூர் ஆசிரியர் மாவட்ட பொருளாளராக ஆர்.துக்கன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் அரசு உயர்நிலைப்பள்ளி மீட்டூர் அருந்ததியர் காலனி ஆசிரியர் ஆர்.மதுரா, உட்பட தலைமை நிலைய செயலாளர், செய்தி தொடர்பாளர், மாவட்ட துணை தலைவர்கள், மாவட்ட இணைச்செயலாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
புதிய பஞ்சமி திட்டம் ரத்து செய்து பழைய பஞ்சமி திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும், 4 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இறுதியில் வட்டாரத் தலைவர் டி பிரகாசம் நன்றி கூறினார்.






