என் மலர்tooltip icon

    தேனி

    • தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் கேரளாவிற்கு ஏலக்காய், தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனர்.
    • ஆனால் போடிமெட்டு சோதனை சாவடியில் எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யாமல் வாகனங்கள் வழக்கம்போல் சென்றுவர அனுமதிக்கப்படுகிறது.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரளா மாநிலத்தில் தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக நிபா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் கோழிக்கோடு பகுதியில் இந்த வைரஸ் தாக்குதலால் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி தமிழகத்தில் கேரளாவை ஒட்டியுள்ள கோவை, கன்னியாகுமரி, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டு யாருக்கேனும் நோய்தொற்று அறிகுறி உள்ளதா என சோதனை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தில் இருந்து தினந்தோறும் காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் கேரளாவிற்கு ஏலக்காய், தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனர். இதனால் நோய் பரவலை தடுக்க மருத்துவ முகாம்கள், சோதனை சாவடியில் கண்காணிப்பு நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் போடிமெட்டு சோதனை சாவடியில் எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யாமல் வாகனங்கள் வழக்கம்போல் சென்றுவர அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் கம்பம்மெட்டு, குமுளி வழிப்பாதையிலும் வாகனங்கள் சோதனை செய்யப்படுவதில்லை என தெரிவித்துள்ளனர். எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆசிரியைக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.
    • இந்நிலையில் மது போதையில் வந்த கணவர் அவரது மனையின் பள்ளிக்குள் நுழைந்து அவரை சரமாரியாக பிளேடால் கிழித்துள்ளார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த பிரியங்கா என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பிரியங்காவுக்கும் அவரது கணவர் ரமேஷுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மது போதையில் வந்த ரமேஷ் மனைவி பிரியங்கா பணிபுரியும் தனியார் பள்ளிக்குள் நுழைந்து அவரை சரமாரியாக பிளேடால் கிழித்துள்ளார். அப்போது அங்கே இருந்த சக பெண் ஆசிரியர் தடுக்க முற்பட்டபோது அவரையும் பிளேடால் கிழித்துள்ளார். இதனைப் பார்த்த பள்ளி குழந்தைகள் அலறி அடித்து பள்ளி வகுப்பறைக்குள் அங்கு மிங்கும் ஓடி கூச்சலிட்டுள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் ரமேசை கைது செய்து பெரியகுளம் வடகரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    மேலும் காயமடைந்த பிரியங்கா மற்றும் சக ஆசிரியை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ப்பட்டுள்ளனர். ரமேஷ் மனை வியின் தாய் வீட்டிற்கு சென்று பிரியங்காவின் தாயை தாக்க முற்பட்டபோது தடுக்க வந்த நபரையும் தாக்கியதாக தென்கரை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறிச்சென்றவர் அங்கு செல்லவில்லை.
    • பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    மேலசொக்கநாதபுரம்:

    போடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகள் மகாலட்சுமி (16). அப்பகுதியில் உள்ள பெண்கள் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் அங்கு செல்லவில்லை.

    இதுகுறித்து பள்ளி நிர்வாகம் அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் போடி நகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மன உளைச்சல், கல்லூரி மாணவி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே பள்ளபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி பாக்கியம் (42). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனம் வெறுத்த பாக்கியம் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பழனி செட்டிபட்டி போலீசாா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள் புரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகள் மேகலா (20). இவர் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 3ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேகலா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே அய்யம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டி மனைவி ரத்தினம் (72). இவரது கணவர் கடந்த 2 வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். மேலும் இவரை நாய் கடித்து விட்டதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மனம் வெறுத்த ரத்தினம் உத்தமபாளையம் முல்லை பெரியாற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பல மாதங்கள் ஆகியும் இதுவரை எவ்வித பணியும் நடைபெறவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
    • பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால் இரவு நேரங்களில் பொதுமக்கள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி ஊராட்சி சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் பாலம் கட்டுவதற்கு நடு ரோட்டில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் இதுவரை எவ்வித பணியும் நடைபெறவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பாலம் கட்டுவதற்கு ரூ.7.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுவரை இந்த பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால் இரவு நேரங்களில் பொதுமக்கள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டுமென சென்னமநாயக்கன்பட்டி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மணலாறு பகுதியில் ஹைவேவிஸ் அணை, தேயிலை தோட்டத்தில் காட்டுயானைகள் உலாவந்து செல்கிறது.
    • இதனால் கூலித்தொழிலாளர்கள் அச்சமடைந்து வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, மணலாறு, மேல்மணலாறு, வெண்ணியாறு, இரவங்லாறு, மகாராஜாமெட்டு, ஹைவேவிஸ் ஆகிய 7 மலைகிராமங்கள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமங்களில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

    வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, புலி போன்ற பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக இவை அடிக்கடி தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியே வருவது வாடிக்கையாக உள்ளது.

    தற்போது மணலாறு பகுதியில் ஹைவேவிஸ் அணை, தேயிலை தோட்டத்தில் காட்டுயானைகள் உலாவந்து செல்கிறது. இதனால் கூலித்தொழிலாளர்கள் அச்சமடைந்து வீடுகளில் முடங்கி உள்ளனர். சின்னமனூர் வனச்சரகத்திற்குட்பட்ட வனத்துறையினர் இந்த யானைகளை வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபகுதியில் அரிசிகொம்பன் யானை நடமாடி பொதுமக்களை பீதியடைய வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மழைநீர் சேமிப்போம் விழிப்புணர்வு பேரணி முத்தாலம்மன் கோவிலில் முன்பு தொடங்கி அரசு சுகாதார நிலையம் வழியாகச் சென்று தேரடியில் நிறைவு பெற்றது.
    • பள்ளி சங்கமாணவர்கள் சாரணபடை மாணவர்கள் மற்றும் 6 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பை சேர்ந்த சுமார் 510 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூரில் உத்தமபாளையம் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மழைநீர் சேமிப்போம் விழிப்புணர்வு பேரணி முத்தாலம்மன் கோவிலில் முன்பு தொடங்கி அரசு சுகாதார நிலையம் வழியாகச் சென்று தேரடியில் நிறைவு பெற்றது.

    இதில் சின்னமனூர் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளி சேர்மன் என்ஜினியர் முகமது சுல்தான் தலைமையில், தாளாளர் முகமது அபுபக்கர் சித்திக் முன்னிலையில் பள்ளி முதல்வர் முகமது ஷாலி, பள்ளி சங்கமாணவர்கள் சாரணபடை மாணவர்கள் மற்றும் 6 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பை சேர்ந்த சுமார் 510 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • கடைக்கு சென்ற இளம்பெண் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி வடக்குதெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் மகள் பவித்ரா(25). இவருக்கு திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று தனது செல்போன் ரிப்பேர் ஆகிவிட்டதாகவும், அதனை சரிசெய்து வருவதாக கூறிச்சென்றவர் மாயமானார். இதுகுறித்து அவரது தாய் ஜோதி கொடுத்த புகாரின்பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப பிரச்சினையில் மாமியாரை மருமகன் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே உள்ள கள்ளிப்பட்டி மாணிக்க விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரும் தமிழ்செல்வி என்பவரது மகள் பிரியங்காவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு கருத்துவேறுபாடு ஏற்படவே அவர்கள் பிரிந்து விட்டனர். பிரியங்கா தனது தாயுடன் வசித்து வரும் நிலையில் குடும்பநல நீதிமன்றம் மூலம் தனது கணவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

    இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் தனது மனைவியை தேடி வந்தார். அங்கு அவர் இல்லாததால் மாமியார் தமிழ்செல்வியிடம் தகராறு செய்தார். மேலும் அவரை தரக்குறைவான வார்த்தை களால் திட்டி தாக்கினார்.

    இதை தடுக்க வந்த முரளி என்பவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த அவர்கள் 2 பேரும் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை ச்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து தென்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் அழகுராஜா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • பணத்தகராறில் விவசாயியை 2 பேர் கத்தியால் குத்தியதில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகே ஜீவாநகரை சேர்ந்தவர் நாராயணன் (வயது57). விவசாயி. இவர் பெரியகுளத்தில் உள்ள ராஜபாண்டி என்பவரிடம் வியாபாரம் தொடர்பாக பணம் வாங்கி இருந்தார்.

    இதனை திருப்பிதராததால் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று மேல்மங்கலம் மேலத்தெருவை சேர்ந்த புல்லட் நாகராஜ் (54) மற்றும் முருகன் ஆகிய 2பேரும் நாராயணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த தகராறில் நாராயணனுக்கு கத்திக்குத்து ஏற்பட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக உள்ளது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 47.11 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக உள்ளது. அணைக்கு 520 கன அடி நீர் வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2520 மி.கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 47.11 அடியாக உள்ளது. அணைக்கு 100 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி திறக்கப்படுகிறது.

    இருப்பு 1634 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.11அடியாக உள்ளது. வரத்து, திறப்பு இல்லை. இருப்பு 340.60 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 78.78 அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 37.88 மி.கன அடியாக உள்ள.

    பெரியாறு 7, தேக்கடி 3.2, கூடலூர் 1, சோத்துப்பாறை 1.2, உத்தமபாளையம் 1.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோவிலில் 7 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்க ப்பட்டது.
    • ரூ.60,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை கலெக்டர் ஷஜீவனா திருமண ஜோடிகளுக்கு வழங்கினார்.

    தேனி:

    தமிழக அரசு மாநிலம் முழுவதும் பொருளா தாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 4 கிராம் தாலி உட்பட ரூ.60,000 மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்திட உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோவிலில் 7 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்க ப்பட்டது. திருமணத்திற்கு தேவையான 4 கிராம் தாலி ரூ.30,000, மணமகன் ஆடை ரூ.1,000, மணமகள் ஆடை ரூ.2,000, திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு ரூ.2,000, மாலை-புஷ்பம் ரூ.1,000, பீரோ ரூ.7,800, கட்டில் ரூ.7,500, மெத்தை ரூ.2,200, இரண்டு தலையணை ரூ.190, ஒரு பாய் ரூ.180, இரண்டு கைக்கடிகாரம் ரூ.1,000, ஒரு மிக்சி ரூ.1,490, பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் ரூ.3,640 என மொத்தம் ரூ.60,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை கலெக்டர் ஷஜீவனா திருமண ஜோடிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா, துணை தலைவர் சாந்தகு மார், இந்து சமய அறநிலை யத்துறை உதவி ஆணையர் கலைவாணன், கவுமாரி யம்மன்கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து, குச்சனூர் கோவில் செயல் அலுவலர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×