போடியில் பள்ளி மாணவி மாயம்

சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறிச்சென்றவர் அங்கு செல்லவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

மேலசொக்கநாதபுரம்:

போடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகள் மகாலட்சுமி (16). அப்பகுதியில் உள்ள பெண்கள் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் அங்கு செல்லவில்லை.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் போடி நகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com