ஹைவேவிஸ் நீர்தேக்கத்தில் யானைகள் நடமாட்டம்

மணலாறு பகுதியில் ஹைவேவிஸ் அணை, தேயிலை தோட்டத்தில் காட்டுயானைகள் உலாவந்து செல்கிறது. இதனால் கூலித்தொழிலாளர்கள் அச்சமடைந்து வீடுகளில் முடங்கி உள்ளனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

சின்னமனூர்:

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, மணலாறு, மேல்மணலாறு, வெண்ணியாறு, இரவங்லாறு, மகாராஜாமெட்டு, ஹைவேவிஸ் ஆகிய 7 மலைகிராமங்கள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமங்களில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, புலி போன்ற பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக இவை அடிக்கடி தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியே வருவது வாடிக்கையாக உள்ளது.

தற்போது மணலாறு பகுதியில் ஹைவேவிஸ் அணை, தேயிலை தோட்டத்தில் காட்டுயானைகள் உலாவந்து செல்கிறது. இதனால் கூலித்தொழிலாளர்கள் அச்சமடைந்து வீடுகளில் முடங்கி உள்ளனர். சின்னமனூர் வனச்சரகத்திற்குட்பட்ட வனத்துறையினர் இந்த யானைகளை வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபகுதியில் அரிசிகொம்பன் யானை நடமாடி பொதுமக்களை பீதியடைய வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com