தேவதானப்பட்டியில் இளம்பெண் மாயம்

கடைக்கு சென்ற இளம்பெண் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி வடக்குதெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் மகள் பவித்ரா(25). இவருக்கு திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று தனது செல்போன் ரிப்பேர் ஆகிவிட்டதாகவும், அதனை சரிசெய்து வருவதாக கூறிச்சென்றவர் மாயமானார். இதுகுறித்து அவரது தாய் ஜோதி கொடுத்த புகாரின்பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com