என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
பெரியகுளத்தில் மாமியாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு
- குடும்ப பிரச்சினையில் மாமியாரை மருமகன் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
- புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள கள்ளிப்பட்டி மாணிக்க விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரும் தமிழ்செல்வி என்பவரது மகள் பிரியங்காவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு கருத்துவேறுபாடு ஏற்படவே அவர்கள் பிரிந்து விட்டனர். பிரியங்கா தனது தாயுடன் வசித்து வரும் நிலையில் குடும்பநல நீதிமன்றம் மூலம் தனது கணவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் தனது மனைவியை தேடி வந்தார். அங்கு அவர் இல்லாததால் மாமியார் தமிழ்செல்வியிடம் தகராறு செய்தார். மேலும் அவரை தரக்குறைவான வார்த்தை களால் திட்டி தாக்கினார்.
இதை தடுக்க வந்த முரளி என்பவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த அவர்கள் 2 பேரும் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை ச்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து தென்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் அழகுராஜா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.






