என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே கல்லூரி மாணவி உள்பட 3 பெண்கள் தற்கொலை
    X

    கோப்பு படம்.

    தேனி அருகே கல்லூரி மாணவி உள்பட 3 பெண்கள் தற்கொலை

    • மன உளைச்சல், கல்லூரி மாணவி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே பள்ளபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி பாக்கியம் (42). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனம் வெறுத்த பாக்கியம் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பழனி செட்டிபட்டி போலீசாா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள் புரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகள் மேகலா (20). இவர் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 3ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேகலா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே அய்யம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டி மனைவி ரத்தினம் (72). இவரது கணவர் கடந்த 2 வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். மேலும் இவரை நாய் கடித்து விட்டதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மனம் வெறுத்த ரத்தினம் உத்தமபாளையம் முல்லை பெரியாற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×