என் மலர்tooltip icon

    தேனி

    • 53 அடியை எட்டியதும் 2 வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 55 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்படும்.
    • கும்பக்கரை அருவியில் 3-வது நாளாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் தடைதொடரும் என அறிவித்துள்ளனர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் உயரம் 57 அடியாகும். இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் 5259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் பாதுகாப்பு கருதி 55 அடி வரை தண்ணீர் தேக்கப்படு கிறது.

    கொடைக்கானல் பகுதியில் பெய்யும் மழை யால் அணைக்கு நீர்வரத்து உள்ளது. அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக அக்டோபர் 15-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர தொடங்கி யுள்ளது.

    இன்று காலை நிலவர ப்படி 51.20 அடி நீர்மட்டம் உள்ளது. இதனைதொடர்ந்து தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, குன்னுவாரான்கோட்டை மற்றும் அதன்சுற்றுவட்டார கிராமங்களுக்கு முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 53 அடியை எட்டியதும் 2 வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 55 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்படும்.

    தற்போது அணைக்கு 86 கனஅடிநீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

    நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 300 கனஅடியில் இருந்து 928 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்மட்டமும் 118.80 அடியிலிருந்து 119.05 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 48.13 அடியாக உள்ளது. 333 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.61 அடியாக உள்ளது. 19 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழை யால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கும்பக்கரை அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. எனவே சுற்றுலா பயணி களின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இன்றும் 3-வது நாளாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் தடைதொடரும் என அறிவித்துள்ளனர். நீர்வரத்து சீரான பின்னர் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.

    பெரியாறு 13.2, தேக்கடி 2.4, சண்முகாநதி 1.8, போடி 3, மஞ்சளாறு 7, சோத்து ப்பாறை 3, வீரபாண்டி 4.2, அரண்மனைப்புதூர் 13 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • 10-ம் வகுப்பு வரை தன்னுடன் படித்த சக மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
    • தற்போது 2 பேருமே தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கொத்தப்பட்டியைச் சேர்ந்த 16 வயது மாணவி பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் நேற்று மதியம் உணவு இடைவேளையின்போது பள்ளியில் 3-வது மாடிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கீழே குதித்தார். அப்போது மரக்கிளையில் சிக்கி கீழே விழுந்ததில் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது.

    உடனே அருகில் இருந்த மாணவிகள் இதுகுறித்து ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மாணவி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், மாணவி 10-ம் வகுப்பு வரை வேறொரு பள்ளியில் படித்துவிட்டு தற்போது மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.

    10-ம் வகுப்பு வரை தன்னுடன் படித்த சக மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். தற்போது அவரும் வேறொரு பள்ளியில் படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்தில் காயமடைந்த அந்த மாணவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனால் மனமுடைந்த மாணவி தான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து 3-வது மாடியில் இருந்து குதித்துள்ளார். தற்போது 2 பேருமே தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றனர்.

    காதலனுக்காக மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அப்பிபட்டியில் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி குறிப்பிட்ட சமூகத்தினர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
    • ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சின்னமனூர்-அப்பிபட்டி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகே அழகாபுரி என்ற அப்பிபட்டியில் பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை யொட்டி குறிப்பிட்ட சமூகத்தினர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரி வித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த விநாயகர் சிலை ஊர்வல த்தினர் சின்னமனூர் - அப்பிபட்டி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் கடந்த 40 ஆண்டுகளாக விநாயகர் சிலையை முக்கிய தெருக்கள் வழியாக கொண்டு சென்று வருகி றோம்.

    ஆனால் கடந்த ஆண்டு ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஊர்வலத்து க்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ஆண்டும் மீண்டும் பிரச்சினை ஏற்படுத்து கின்றனர். ஆனால் நாங்கள் வழக்கமாக செல்லும் தெருக்கள் வழியாகவே செல்வோம் என்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே இரு தரப்பின ரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    • வைகை அணை பஸ் நிலையம் பல ஆண்டுகளாக பராமரிப்பி ன்றி காணப்படுகிறது.
    • தேனி மார்க்கமாக செல்லும் ரவுண்டானா பகுதிகளில் மின் விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே வைகை அணை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கு கிறது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணி கள் வருகின்றனர். வைகை அணை பஸ் நிலையம் பல ஆண்டுகளாக பராமரிப்பி ன்றி காணப்படு கிறது.

    இதனால் புதர் மண்டி விஷ ஜந்துக்களின் கூடாரமாக உள்ளது. பயணிகள் பெரும்பாலும் ரவுண்டானா பகுதியிலேயே பஸ்சுக்காக காத்திருக்கி ன்றனர். மேலும் இதன் அருகேயே போலீஸ் நிலையம் உள்ளது. இந்த சாலை மற்றும் வருசநாடு, தேனி மார்க்கமாக செல்லும் ரவுண்டானா பகுதிகளில் மின் விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படு கிறது.

    ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை நாட்க ளில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இருள் சூழ்ந்து காணப்படும் வைகை அணைப்பகுதியில் காத்திருக்க அவர்கள் அச்சமடைந்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி வழிப்பறி கொள்ளையர்கள் கைவரிசை காட்டும் வாய்ப்பும் உள்ளது.

    எனவே மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழை குறைந்ததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 415 கன அடியில் இருந்து 300 கன அடியாக சரிந்து உள்ளது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 47.97 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது.

    இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் முல்லைப்பெ ரியாறு அணைக்கு நீர்வரத்து 415 கன அடியில் இருந்து 300 கன அடியாக சரிந்து உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 400 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 118.80 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.97 அடியாக உள்ளது. அணைக்கு 286 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.80 அடியாக உள்ளது. 64 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. ேசாத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 80.19 அடியாக உள்ளது. 21 கனஅடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 1.4, மஞ்சளாறு 11, சோத்து ப்பாறை 2, பெரியகுளம் 2.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • குடும்ப பிரச்சினையில் ஆத்திரமடைந்த மனைவி அரிவாளால் கணவனை சரமாரியாக வெட்டினார்.
    • படுகாயமடைந்த கணவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் கோம்பை துரைசாமிபுரம் 2-வது வார்டை சேர்ந்தவர் ஈஸ்வரன்(36). கூலித்தொழிலாளி. இவருக்கும் ஈஸ்வரி (29) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று ஈஸ்வரனின் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு சாப்பாடு தயார் செய்து கொடுக்குமாறு தனது மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் சாப்பாடு தயாரிக்காமல் இருந்து ள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரி தனது கணவன் என்றும் பாராமல் அவரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடு த்தார். படுகாயமடைந்த ஈஸ்வரன் அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோம்பை சப்-இன்ஸ்பெ க்டர் முத்துச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தேர்வு எழுத சென்ற மாணவி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    பெரியகுளம் :

    பெரியகுளம் அருகே வடுகபட்டியைச் சேர்ந்த பரமசிவம் மகள் ஹரினி (வயது 17). இவர் வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று காலாண்டுத்தேர்வு எழுத பள்ளிக்கு செல்வதாக கூறிச் சென்றார்.

    ஆனால் அவர் அங்கு வரவில்லை என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே அதிர்ச்சியடைந்த பரமசிவம் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி ப்பார்த்தும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நலக்குறைவு மற்றும் குடும்ப பிரச்சினைகாரணமாக 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே பொம்மைய கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி வேணி (வயது 25). இவர்களது மகள் பூஜா (5). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நாகராஜிடம் கோபித்துக் கொண்டு பூஜா தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் வேணிதிடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அல்லிநகரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூரைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 36). இவருக்கு துர்கா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் வயிற்று வலி ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த நாகேந்திரன் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை வெள்ளத்தை ஊருக்குள் வரவிடாமல் தடுப்பதற்காகவும், போடியை சுற்றியுள்ள கண்மாய்களின் முக்கிய நீர்பிடிப்பு ஆதாரமாகவும் உருவாக்கப்பட்டது அணை பிள்ளையார் நீர்வீழ்ச்சி. சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நீர்வீழ்ச்சி போடியின் திற்பரப்பு என்று அழைக்கப்பட்டு வருகிறது.

    மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு குரங்கணி, கொம்பு தூக்கி, கொட்டகுடி, பிச்சங்கரை ஆகிய பகுதிகளில் பெய்த பரவலான மழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் போடி அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த ஓரிரு மாதங்களாக மழையின்மை காரணமாக முற்றிலும் வறண்டு காணப்பட்டது. தற்போது பரவலாக மழை பெய்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் போடியை சுற்றியுள்ள மீனாட்சி அம்மன் கண்மாய், பங்காரு சாமி குளம் போன்ற குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 

    • தேனி நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில், இந்திய உணவுக் கழகத்திலிருந்து வரப்பெற்ற அரிசி மற்றும் கோதுமையின் தரம் குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • அங்கன்வாடி மையத்தில் பராமரிக்கப்படும் 11 வகையான பதிவேடுகள் ஆகியன குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி:

    தேனி நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில், இந்திய உணவுக் கழகத்திலிருந்து வரப்பெற்ற அரிசி மற்றும் கோதுமையின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், ரேசன் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பொருட்கள் முறையாக நகர்வு செய்யப்படுகிறதா, சரியான எடை அளவில் கொண்டு செல்லப்படுகிறதா என்று கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார்.

    மேலும், அத்தியாவசிய பொருட்கள் இருப்பு பதிவேடு, காலி சாக்குகள் பதிவேடு, உள்வரும் வாகனங்கள் மற்றும் வெளி செல்லும் வாகனங்களை கண்காணிப்பதற்கான பதிவேடு, தரக்கட்டுப்பாட்டு பதிவேடு, எடை அளவு பதி வேடு, விற்பனை பதிவேடு, அரிசி மற்றும் கோதுமை நகர்வு பதிவேடு, பட்டியல் அட்டைகள் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.

    பின்னர், பழனி செட்டி பட்டி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பணி யாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, உள்நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு, மருந்து மாத்திரை களில் அச்சிடப்பட்டுள்ள காலாவதியாவதற்கான காலம், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத்தொடர்ந்து, பழனிசெட்டிபட்டி பேரூ ராட்சி பகுதியில் ரேசன் கடைகளின் விற்பனை முனைய இயந்திரங்களில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் எடை அளவிடும் இயந்திர த்தில் முத்திரை பதிக்கப்பட்டு ள்ள காலம், இயந்திரத்தின் செயல்பாடு கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் முறைசாரா முன்பருவ கல்வி, எடை மற்றும் உயரம் அளவீடு செய்யப்பட்டு முறையாக பதிவேற்றம் செய்யப்படு கிறதா, ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா எனவும், அங்கன்வாடி மையத்திற்கு வழங்க ப்பட்டு ள்ள முன்பருவ கல்வி உபகரண கருவி நல்ல முறை யில் உள்ளதா, குழந்தை களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் மற்றும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களின் தரம் ஆகியவை மற்றும் அங்கன்வாடி மையத்தில் பராமரிக்கப்படும் 11 வகையான பதிவேடுகள் ஆகியன குறித்தும் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது, நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஆறு முகம் உள்ளிட்ட அலுவ லர்கள் பலர் உடன் இருந்த னர்.

    • சம்பவத்தன்று கடைக்கு பொருட்கள் வாங்க சென்றவர் வீடு திரும்ப வில்லை.
    • இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் உறவினர்கள் வீடுகள் மற்றும் கடைகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகே நல்லகருப்பன்பட்டியை சேர்ந்தவர் வினோத்குமார் மனைவி வெண்ணிலா (வயது20). சம்பவத்தன்று கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அதன்பி ன்னர் அவர் வீடு திரும்ப வில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் உறவினர்கள் வீடுகள் மற்றும் கடைகளில் தேடியும் கிடைக்காததால் தேவதான ப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெண்ணிலாவை தேடி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மகள் தர்ஷினி (17). பிளஸ்-2 முடித்து விட்டு தையல் பயிற்சிக்கு சென்று வரு கிறார். சம்பவத்தன்று தையல் வகுப்புக்கு சென்ற அவர் திடீரென மாயமா னார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பே ரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து இளம்பெ ண்ணை தேடி வருகின்றனர்.

    • தமிழகத்தின் சுவையான நீர் என பெயர் பெற்ற இந்த கொட்டக்குடி நீரானது மீனாட்சிபுரம் கண்மாய்க்கு செல்லும்போது போடி பகுதியில் உள்ள கழிவு நீர் அனைத்தும் கலந்து செல்வதால் மாசடைந்து செல்கிறது.
    • இந்த மீனாட்சிபுரம் கண்மாய்க்கு பல ஆயிரம் மைல்கள் கடந்து வெளிநாட்டு பறவைகள் இரை தேடி வருவது வழக்கம்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய கண்மாய் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை கொட்டக்குடி ஆறு, அணை பிள்ளையார் அணைக்கட்டு ராஜ வாய்க்கால் மூலம் இந்த கண்மாய்க்கு நீர்வரத்து வருகிறது. இந்த கண்மாயை நம்பி 6000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.

    தற்போது தென்மேற்கு பருவமழை காலத்தில் குறைந்த அளவிலான மழை பெய்ததால் கொட்டக்குடி ஆற்றில் நீர் வரத்து குறைந்து கண்மாய் வறண்டு போகும் நிலையில் உள்ளது.

    தமிழகத்தின் சுவையான நீர் என பெயர் பெற்ற இந்த கொட்டக்குடி நீரானது மீனாட்சிபுரம் கண்மாய்க்கு செல்லும்போது போடி பகுதியில் உள்ள கழிவு நீர் அனைத்தும் கலந்து செல்வதால் மாசடைந்து செல்கிறது. இதன் காரணமாக கண்மாயில் மீன்கள் அனைத்தும் டன் கணக்கில் செத்து கரை ஒதுங்கி உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நீர் அனைத்தும் மாசடைந்து காணப்படுகிறது.

    இந்த மீனாட்சிபுரம் கண்மாய்க்கு பல ஆயிரம் மைல்கள் கடந்து வெளிநாட்டு பறவைகள் இரை தேடி வருவது வழக்கம். தற்போது மீன்கள் அனைத்தும் செத்து கரை ஒதுங்கியதால் ஏமாற்ற த்துடன் திரும்பிச் செல்கி ன்றது.

    இதே நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் இந்த கண்மாயில் மீன்களே கிடைக்காத நிலை உருவாகும். மாவட்ட நிர்வாகம் கழிவுநீர் ராஜ வாய்க்காலில் கலக்காதபடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.

    ×