என் மலர்
நீங்கள் தேடியது "திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி"
- பெரியகுளம், வடுகபட்டி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.
- காலையில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி தொடங்கி மாலை வரை திருவாசகப் பாடல்கள் பாடப்பட்டது.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே காந்தி மைதானம் வீதியில் அமைந்துள்ள பிள்ளை செல்வ முத்து மாரியம்மன் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆலமர விழுது குழு சார்பாக 231 நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பெரியகுளம், வடுகபட்டி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர். காலையில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி தொடங்கி மாலை வரை திருவாசகப் பாடல்கள் பாடப்பட்டது.
முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






