என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா வனச்சரகம் அமைப்பு"

    • சுருளி அருவி, மகாராஜா மெட்டு, சின்னசுருளி ஆகிய 3 பகுதிகளையும் இணைத்து சுழல் சுற்றுலா தொழில்நுட்ப வனச்சரகம் அமைக்கப்பட்டுள்ளது.
    • சின்ன சுருளி அருவியில் தண்ணீர் அதிக அளவு வருவதால் விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டத்தில் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக சுருளி அருவி உள்ளது. இங்கு வருடத்தில் பெரும்பாலான நாட்கள் தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலை செல்லும் பக்தர்கள் அருவியில் நீராடி செல்வது வழக்கம்.

    இதேபோல் மேகமலை, மகாராஜாமெட்டு முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. மேலும் மேகமலை அடிவாரத்தில் உள்ள சின்ன சுருளியில் மழைக்கால ங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    தற்போது சுருளி அருவி, மகாராஜா மெட்டு, சின்னசுருளி ஆகிய 3 பகுதிகளையும் இணைத்து சுழல் சுற்றுலா தொழில்நுட்ப வனச்சரகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ரேஞ்சராக அஜய் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் வனக்காவலர்கள் இங்கு தொடர்ந்து பணியில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் நுழைவு கட்டணம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    சுருளி அருவி இதுவரை கம்பம் வனச்சரக அலுவலகத்தின் கட்டுப்பா ட்டில் இயங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சின்ன சுருளி அருவியில் தண்ணீர் அதிக அளவு வருவதால் விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    ×