என் மலர்
தேனி
- தோட்டத்துக்குள் வனப்பகுதியில் இருந்து வழி தவறிவந்த மான் புகுந்தது. இதனை அங்கிருந்த நாய்கள் விரட்டி கடித்தது.
- சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மானை தேக்கடி கால்நடை பராமரிப்பு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கூடலூர்:
குமுளி அருகே அணைக்கரைப்பகுதியை சேர்ந்தவர் பென்னி. இவரது தோட்டத்துக்குள் வனப்பகுதியில் இருந்து வழி தவறிவந்த மான் புகுந்தது. இதனை அங்கிருந்த நாய்கள் விரட்டி கடித்தது.
இதை பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் நாய்களை விரட்டி மானை காப்பாற்றினர். இது குறித்து தேக்கடி வனத்துறையின ருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மானை தேக்கடி கால்நடை பராமரிப்பு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து வனத்துறை யினர் கூறுகையில், வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த மானை நாய்கள் விரட்டி கடித்தது. பொதுமக்கள் நாய்களை விரட்டி மானை மீட்டனர். அந்த மானுக்கு கால்நடை பராமரிப்பு மையத்தில்தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 2 நாட்கள் மான் பராமரிக்கப்பட்டு உடல்நிலை சீரானதும் பெரியாறு புலிகள் சரணாலய வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றனர்.
தேனி:
தேனி அல்லிநகரம் வெங்கலாநகர் 3-வது தெருவைச் சேர்ந்த சொக்கலிங்கம் மனைவி மாரியம்மாள் (வயது 69). இவருக்கு கண் பார்வை சற்று பாதிக்கப்பட்டு இருந்தது.
சம்பவத்தன்று வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீ பிடித்து உடல் முழுவதும் பரவியது. இதில் பலத்த தீக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து அல்லி நகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- இன்றும் நீர் வரத்து சீராகாததால் 6-வது நாளாக தடை தொடரும் என அறிவிக்கப்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடி வாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானலில் பெய்யும் மழையால் அருவிக்கு நீர் வரத்து இருக்கும். தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அங்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இன்றும் நீர் வரத்து சீராகாததால் 6-வது நாளாக தடை தொ டரும் என அறிவிக்கப்பட்டது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதி களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தடை காரணமாக அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்த 15-ந் தேதி யானைகள் கூட்டமாக முகாமிட்டதால் தடை விதிக்கப்பட்டது. யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிய பின்னர் 18-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்தனர். இந்த நிலையில் வெண்ணியாறு பீட் பகுதியில் இருந்து மீண்டும் 3 யானைகள் சுருளி அருவியில் நடமாடிய தால் மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இது குறித்த அறிவிப்பு பலகை சோதனை சாவடியில் வைக்கப்பட்டுள்ளது.
காட்டு யானை நடமாட்ட த்தை தொடர்ந்து வனத்துறை யினர் கண்காணித்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றதை உறுதி செய்த பின்னரே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படு வார்கள் என வனத்துறை யினர் தெரிவித்தனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 119.40 அடியாக உள்ளது. 406 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர் மட்டம் 48.59 அடியாக உள்ளது. 194 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படு கிறது. மஞ்சளாறு அணை யின் நீர் மட்டம் 52.40 அடியாக உள்ளது. 44 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 87.57 அடியாக உள்ளது. 26 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாரில் மட்டும் 2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
- லோன் கொடுத்தவர்கள் அந்த பணத்தை கட்ட ச்சொல்லி அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளனர்.
- மேலும் பணத்தை லெட்சுமணனிடமும் கேட்டதால் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
மேலசொக்கநாதபுரம்:
போடி முந்தல் காலனியைச் சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 35). இவருக்கும் சிவகாமி (27) என்பவருக்கும் 13 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு வர்ஷன் (7), நேத்ரா (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். லெட்சுமணன் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
சிவகாமி மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்கி கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் லோன் கொடுத்தவர்கள் அந்த பணத்தை கட்ட ச்சொல்லி அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளனர்.
மேலும் பணத்தை லெட்சுமணனிடமும் கேட்டு ள்ளனர். இதனால் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. யாரைக் கேட்டு லோன் வாங்கினாய்? அந்த பணத்தை கட்ட முடியாதா? என கேட்டு சிவகாமியை கத்தியால் இடுப்பு, தொடை, முழங்கை ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தினார். பலத்த காயமடைந்த சிவகாமி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து போடி டவுன் போலீஸ் இன்ஸ்பெ க்டர் புவனேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- எஸ்.பி.ஐ. வங்கி மூலம் துணை மேலாளர் பணிக்கான அதிகார பூர்வமான அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
- இதில் 21 வயது முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த அனைத்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பட்டதாரி மாணவர்கள் வருகிற 27-ந் தேதிக்குள் இணையதள த்தின் வழியாக விண்ண ப்பிக்கலாம்.
தேனி:
தாட்கோ நிறுவனத்தின் மூலம் எஸ்.பி.ஐ. வங்கியில் துணை மேலாளர் பதவி க்கான தேர்வில் வெற்றி பெற பயிற்சி நிலையத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.
அதன்படி எஸ்.பி.ஐ. வங்கி மூலம் துணை மேலாளர் பணிக்கான அதிகார பூர்வமான அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி எஸ்.பி.ஐ. வங்கியில் துணை மேலாள ருக்கான 2000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 21 வயது முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த அனைத்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பட்டதாரி மாணவர்கள் வருகிற 27-ந் தேதிக்குள் இணையதள த்தின் வழியாக விண்ண ப்பிக்கலாம்.
இத்தேர்வுக்கு விண்ண ப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணை யதளம் வழியாக நடை பெறும். முதற்கட்டத்தேர்வு, முதன்மை, நேர்காணல் மற்றும் குழுப் பயிற்சிகள் என 3 நிலைகளில் தேர்வு நடைபெற உள்ளது. முதற்கட்டத் தேர்வு 2023 டிசம்பர் மற்றும் 2024 ஜனவரியிலும், நேர்காணல் மற்றும் குழு பயிற்சிகளு க்கான அழைப்பு 2024 ஜனவரி மற்றும் பிப்ரவரியி லும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை மேலாளர் பதவி க்கான தேர்வில் வெற்றி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்க ளுக்கு பயிற்சி நிலையத்தின் மூலம் இலவச பயிற்சியை வழங்க தாட்கோ நிறுவனம் முடிவு செய்து ள்ளது. இப்பயிற்சியினைப் பெற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ மூலமாக ஏற்க ப்படும் என தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
- இத்திட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினரால் நடத்தப்படும் பசுமை நிறுவனங்கள் மட்டுமே தேர்வு செய்யப்படும்.
- தேர்வு செய்யப்படும் தொழில், தொழில் முனை வோர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க த்தின் தொழில்முனைவோர் கண்காணிப்பு இணையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
தேனி:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை செயல்பாடு களை உருவாக்கி லாபத்து டன் கூடிய உற்பத்தி, விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தி, பொருளாதார ரீதியாக மேம்படுத்த பசுமை தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் 'பசுமை தொழில் முனைவு திட்டம்" உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினரால் நடத்தப்படும் பசுமை நிறுவனங்கள் மட்டுமே தேர்வு செய்யப்படும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை நிறுவனங்களை முன்னெ டுக்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் தொழில், தொழில் முனை வோர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க த்தின் தொழில்முனைவோர் கண்காணிப்பு இணையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பிக்கும் நிறுவனம் தொடங்கி ஓராண்டிற்கு மேல் தொடர் செயல்பாட்டில் இருக்க வேண்டும். நிறுவனம் கட்டாயம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் அங்கீகாரம் மற்றும் GST பதிவு பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நிறுவனமானது குறைந்த பட்சம் 3 வேலையாட்களை கொண்டு செயல்படக்கூடிய நிறுவனமாக இருக்க வேண்டும். தொழில் நிறுவ னம் இணையதளத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டி ருக்க வேண்டும்.
நிறுவனத்தின் ஆண்டு வருமானம் குறைந்தது ரூ.4 லட்சமாக இருக்க வேண்டும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைக்கு உட்படுத்தப்பட்ட வெள்ளை, பச்சை மற்றும் ஆரஞ்சு தொழில் நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும்.
விருப்பமுள்ளோர் வருகிற 30ஆம் தேதிக்குள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திட்ட இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை பெற்று விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நிறுவனங்க ளுக்கு தலா ரூ.4,00,000 மூன்று கட்டங்களாக தொழில் வளர்ச்சி நிதியாக வழங்கப்படும். மேலும், கண்காணிப்பு மற்றும் பசுமைத்தணிக்கை மூலம் தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு கூடுதல் ஊக்கத் தொகை வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்கள்.
- ஏலத் தொட்டத் தொழிலாளி அடிக்கடி கஞ்சா விற்பனையில் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
- இதனால் அக்கம் பக்கத்தில் தனக்குத் தலைகுனிவாக உள்ளது என கூறி குமுளி போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்.
கூடலூர்:
தமிழக கேரள எல்லையில் உள்ள குமுளி வெப்பக்க ண்டத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி சுரேஷ் (வயது 42). ஏலத் தொட்டத் தொழிலாளி. இவர் அடிக்கடி கஞ்சா விற்பனை யில் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டார். சம்பவத்தன்று குமுளி இன்ஸ்பெக்டர் சோபின் ஆண்டனி தலைமையில் போலீசார் கஞ்சா விற்பனை தொடர்பாக அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
ஆனால் கஞ்சா எதுவும் சிக்கவில்லை. இதனால் போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் முனியாண்டி சுரேஷ் எந்த காரணத்துக்காக போலீசார் தன் வீட்டில் சோதனை நடத்துகிறார்கள்? இதனால் அக்கம் பக்கத்தில் தனக்குத் தலைகுனிவாக உள்ளது என கூறி குமுளி போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்.
மேலும் போலீஸ் நிலைய வளாகத்திலேயே விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த போலீசார் அவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
முனியாண்டி சுரேஷ் மீது கஞ்சா விற்பனை, அடிதடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு யானை தந்தம் கடத்தல், மான் கொம்பு கடத்தல் மான் இறைச்சி விற்பனை ஆகிய வழக்குகளில் 10 பேரை கேரள வனத்துறையினர் கைது செய்தனர்.
- எனவே இதனை தடுக்கவும், வேட்டையாடுபவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கவும் கோட்டயம் மாவட்ட வன அலுவலர் ராஜேஷ் உத்தரவிட்டார்.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லை யில் சுமார் 925 ச.கீ. பரப்பளவில் கேரள மாநிலத்தின் இடுக்கி, பத்த னம்திட்டா மாவட்டங்களில் பெரியாறு புலிகள் சரணா லயம் அமைந்துள்ளது.
இதையொட்டியுள்ள வனப்பகுதிகளில் அதிக அளவில் வன விலங்குகள் வேட்டை நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு யானை தந்தம் கடத்தல், மான் கொம்பு கடத்தல் மான் இறைச்சி விற்பனை ஆகிய வழக்குகளில் 10 பேரை கேரள வனத்துறையினர் கைது செய்தனர்.
சரணாலயத்ைத ஒட்டி யுள்ள விளை நிலங்களில் அதிக அளவில் வன விலங்குகள் வேட்டை நடைபெற்று வருகிறது. எனவே இதனை தடுக்கவும், வேட்டையாடுபவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கவும் கோட்டயம் மாவட்ட வன அலுவலர் ராஜேஷ் உத்தரவிட்டார். மேலும் மாவட்ட வன அலுவலர் சந்தீப் மேற்பார்வையில் பறக்கும் படை வனத்துறை குழு அமைக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக குமுளி ரேஞ்சர் அணில்குமார் தலைமையில் வனத்துறை யினர் குழு வேட்டையாடுதல் தடுப்பு குழு, வன விலங்கு பாதுகாப்புக்குழு ஆகியோர் சரணாலய பகுதியை யொட்டி உள்ள தங்கமலை, தொண்டியாறு, மூலக்கயம், மாட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை யில் ஈடுபட்டனர். வன விலங்குகள் வேட்டையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வேட்டையில் ஈடுபடு பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
- கடந்த மாதம் வரை நல்ல விலைக்கு விற்பனையான ஆடுகள் தற்போது கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
- தற்போது புரட்டாசி மாதம் என்பதால் விலை மந்தமாக உள்ளது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வாரந்தோறும் திங்கள்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு முத்தனம்பட்டி, ரெங்கநாதபுரம், அய்யர்தோட்டம், புள்ளிமான் கோம்பை, பாலக்கோம்பை, ஏத்தக்கோவில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
குறிப்பாக மலைப்பகுதியான ஏத்தக்கோவில் கிராமத்தில் ஆடுகள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. இவை வாரச்சந்தையில் கொண்டு வரப்பட்டு வியாபாரிகள் மூலம் வாங்கிச் செல்லப்படுகிறது. கடந்த மாதம் வரை நல்ல விலைக்கு விற்பனையான ஆடுகள் தற்போது கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
புரட்டாசி மாதம் என்பதால் விலை மந்தமாக உள்ளது என அவர்கள் தெரிவித்தனர். கடந்த மாதம் விற்பனையான விலையில் பெரும்பகுதி தங்களுக்கு கிடைக்காததால் விற்பனைக்கு கொண்டு வந்த ஆடுகளை மீண்டும் விவசாயிகள் எடுத்துச் சென்றனர். இன்னும் சில வாரங்களுக்கு இதேநிலைதான் தொடரும் என்பதால் வாரச்சந்தையில் விற்பனை சுமாராக இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
விற்பனை இல்லாததால் ஆண்டிபட்டி ஆட்டுச்சந்தை களையிழந்து காணப்பட்டது.
- கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்த 15-ந் தேதி யானைகள் கூட்டமாக முகாமிட்டதால் தடை விதிக்கப்பட்டது.
- காட்டு யானை நடமாட்டத்தை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானலில் பெய்யும் மழையால் அருவிக்கு நீர் வரத்து இருக்கும். தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அங்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இன்றும் நீர்வரத்து சீராகாததால் 6-வது நாளாக தடை தொடரும் என அறிவிக்கப்பட்டது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தடை காரணமாக அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்த 15-ந் தேதி யானைகள் கூட்டமாக முகாமிட்டதால் தடை விதிக்கப்பட்டது. யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிய பின்னர் 18-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்தனர். இந்த நிலையில் வெண்ணியாறு பீட் பகுதியில் இருந்து மீண்டும் 3 யானைகள் சுருளி அருவியில் நடமாடியதால் மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பு பலகை சோதனை சாவடியில் வைக்கப்பட்டுள்ளது.
காட்டு யானை நடமாட்டத்தை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றதை உறுதி செய்த பின்னரே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 119.40 அடியாக உள்ளது. 406 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 48.59 அடியாக உள்ளது. 194 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 52.40 அடியாக உள்ளது. 44 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 87.57 அடியாக உள்ளது. 26 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாரில் மட்டும் 2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
- புதிய கட்டிடத்திற்கு தேவையான ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள கம்பிகளை வைத்து சென்றார்.
- திரும்பி வந்து பார்த்த போது அந்த கம்பிகள் திருடு போயிருந்தது.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் கனவாபீர் (64). இவர் ரகமத் நகரில் உள்ள உறவினர் வீட்டின் புதிய கட்டிடத்திற்கு தேவையான ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள கம்பிகளை வைத்து சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது அந்த கம்பிகள் திருடு போயிருந்தது. இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இதுதொடர்பாக குணபாலன் (36) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.
- வெளியே சென்ற நர்சிங் மாணவி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
- புகாரின்பேரில் போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி ஜே.கே.பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் மகள் உமா(17). இவர் பி.தருமத்துப்பட்டியில் உள்ள டிரஸ்டு மூலம் நர்சிங் முதலாமாண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று டிரஸ்டுக்கு செல்வதாக கூறிச்சென்றார்.
ஆனால் அவர் அங்கு செல்லவில்லை என நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்திலும் தேடிபார்த்தும் கிடைக்காததால் போடி நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.






