என் மலர்
நீங்கள் தேடியது "கேரளா மீது தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு"
- கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை உட்பகுதிகளில் மழைபெய்து வருகிறது.
- இந்த தண்ணீரை தடுப்பணை கட்டி இடுக்கி அணைக்கு கேரள அரசு கொண்டு செல்கிறது.
கூடலூர்:
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட குறைவாக பெய்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. வடமாநிலங்களில் பெய்த அளவுக்கு தென்னிந்தியாவில் 50 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது. கடந்த 20 நாட்களில் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
பெரியாறில் 238 மி.மீ., தேக்கடியில் 104 மி.மீ. மழை பெய்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாத மழையை காட்டிலும் அதிகமாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் இம்மாத ெதாடக்கத்தில் நீர்வரத்து குறைவாகவே இருந்தது.
தற்போதுவரை அணைக்கு 11221 கன அடி நீர் வந்துள்ளது. இதில் தமிழக பகுதிக்கு 9274 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 118.10 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது 119.05 அடியாக அதாவது 0.95 அடி மட்டுமே உயர்ந்துள்ளது.
இந்த நீர்மட்டம் கடந்த ஆண்டை காட்டிலும் 15.90 அடி குறைவாகும். கடந்த ஆண்டு இதே நாளில் பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.95 அடியாக இருந்தது. அணைக்கு 510.04 கன அடி நீர் வந்தது. எனவே பெரியாறு அணைக்கு வரும் தண்ணீரை கேரளா அரசு இடுக்கி அணைக்கு மடைமா ற்றுவதாக பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறுகையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை உட்பகுதிகளில் மழைபெய்து வருகிறது. ஆனால் முல்லைப்பெரியாறு அணைக்கு இயல்பை விட குறைவாகவே தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்த தண்ணீரை தடுப்பணை கட்டி இடுக்கி அணைக்கு கேரள அரசு கொண்டு செல்கிறது. சராசரியா 20 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்தபோதும் அணைக்கு 510 கனஅடி நீைர தாண்டி தண்ணீர் வரவில்ைல.
எனவே கேரள அரசு பல ஆண்டுகளாக பெரியாறு அணை தண்ணீரை மடைமாற்றுகிறது என குற்றம் சாட்டி வருகிறோம். எனவே தமிழக அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கண்காணிப்பு குழுவின் முன்னிலையில் டிரோன் மூலம் அணை ப்பகுதியை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






