என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puratasi first Saturday"

    • அதிகாலையில் பெருமாளுக்கு திருமஞ்சனம், பால், பன்னீர், தேன் உள்பட 16 அபிஷேகங்கள் நடைபெற்றது.
    • பின்பு பெருமாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, 12அடி உயரமுள்ள ஏலக்காய் மாலை, தாமரை மாலை ஆகியவை சாத்தப்பட்டது

    போடி:

    போடி சீனிவாச பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதிகாலையில் பெருமாளுக்கு திருமஞ்சனம், பால், பன்னீர், தேன் உள்பட 16 அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்பு பெருமாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, 12அடி உயரமுள்ள ஏலக்காய் மாலை, தாமரை மாலை ஆகியவை சாத்தப்பட்டது. பின்பு பல்வேறு தீபாராதனைகள் நடைபெற்றது.

    அது சமயம் பக்தர்கள் கோவிந்தா, நாராயணா என்று கோஷமிட்டனர். பக்தர்களால் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி பெயரில் பாடல் பாடப்பட்டது. திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து சுவாமிகளை தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு இனிப்பு பொங்கல், புளியோதரை, எலுமிச்ச சாதம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர், பட்டாச்சாரியார் கார்த்திக், குமரேசன், பெருமாள் பக்தர்கள் ஆகியோர் செய்தனர்.

    ×