என் மலர்tooltip icon

    தேனி

    • தேனி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • புல்வெட்டிக்குளம் தூர்வாரப்படாமல் இருந்ததை பார்வையிட்டு உடனே தூர்வார அமைச்சர் உத்தர விட்டார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் கூட்டு குடிநீர் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா, பேரூராட்சித்துறை இயக்குநர் கிரண்குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, தமிழ்நாடு கூட்டுகுடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் தக்ஷணாமூர்த்தி மற்றும் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி மாவட்டம் தென்கரை பேரூராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.13.31 கோடி மதிப்பீட்டில் வட்டக்கரடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, போடிநாயக்கனூர் நகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பரமசிவன் கோவில் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ.76.15 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முடிவுற்று சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இத்திட்டப்பணிகளை ஆய்வு செய்து பின்னர் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

    தேவாரம் பேரூராட்சி பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்(2021-2022) கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பஸ் நிலையம் மேம்பாடு செய்தல் கட்டுமான பணி, கம்பம் நகராட்சி பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நகராட்சி பங்களிப்புடன் ரூ.7 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 262 திறந்த வெளி கடைகள் மற்றும் 23 முன்புற கடைகள் ஏ.டி.எம். எந்திரம், கேண்டீன் மற்றும் கழிப்பறை வசதிகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    லோயார்கேம்ப் பகுதியில் மதுரை மக்களின் குடிநீர் தேவைக்காக அம்ருத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1295 கோடி தலைமை நீரேற்றும் நிலையம் அமைத்தல் மற்றும் தலைமை நீரேற்று நிலையம் முதல் பண்ணைப்பட்டி நீர் சுத்திகரிப்பு நிலையம் வரை பிரதான குடிநீர் குழாய் அமைத்தல் பணிக்காக கீழ் ரூ.357.53 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    வைகை அணையிலிருந்து கடமலைக்குண்டு மயிலாடும்பாறை பகுதியில் உள்ள 250 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.141.13 கோடியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 21.3 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.162.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஆண்டிபட்டி அருகில் உள்ள குருவியம்மாள்புரத்தில் ரூ.162.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூட்டுக்குடிநீர் திட்டத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொ ண்டனர்.

    இதில் மாவட்ட எஸ்.பி. பிர வீன்உ மேஷ்டோ ங்கரே, எம்.எல்.ஏ.க்கள் ராமகிரு ஷ்ணன், மகாராஜன், சரவணக்கு மார், முன்னாள் எம்.எல்.ஏ. தங்க தமிழ்செ ல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆண்டி பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் அமைச்சர் இ.பெரியசாமி திடீர் ஆய்வு மேற்கொ ண்டார். வளர்ச்சி திட்டங்கள், பயனாளி களுக்கு செல்ல வேண்டிய திட்டங்கள் குறித்து அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் கொத்த ப்பட்டி புல்வெ ட்டி க்குளம் தூ ர்வார ப்படா மல் இருந்ததை பார்வையிட்டு உடனே தூ ர்வார உத்தர விட்டார்.

    • பருவமழையின்போது நிரம்பியிருந்த அணை கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், மழைப்பொழிவு இல்லாததாலும் வேகமாக சரிந்து வருகிறது.
    • இதனால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியுமா என அச்சம் எழுந்துள்ளது.

    கூடலூர்:

    கேரளமாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதரமாக உள்ளது.

    பருவமழையின்போது நிரம்பியிருந்த அணை கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், மழைப்பொழிவு இல்லாததாலும் வேகமாக சரிந்து வருகிறது. மழையை எதிர்பார்த்த பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சாரல்மழை பெய்தது. அதனைதொடர்ந்து வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியுமா என அச்சம் எழுந்துள்ளது.

    அணையின் நீர்மட்டம் 119.25 அடியாக உள்ளது. 50 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 467 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 54.79 அடியாக உள்ளது. அணைக்கு 222 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.25 அடியாக உள்ளது. 26 கனஅடிநீர் வருகிறது. 65 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 39.36 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    • மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.7 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • தேனி போலீசார் 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார்(18). இவருக்கு பாரஸ்ட் ரோடு பகுதிைய சேர்ந்த கணேசன் என்பவர் பழக்கமானார்.

    மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக தினேஷ்குமாரிடம் கூறியுள்ளார். மேலும் இதற்கு ரூ.7 லட்சம் செலவாகும் எனக்கூறி அவரிடம் இருந்து பணத்தை பெற்றார். ஆனால் வேலை வாங்கிதராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

    பின்னர் போலி ஆவணத்தை தயார் செய்து வேலை உறுதி கடிதம் என கொடுத்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் பணத்தை திருப்பி தருமாறு தினேஷ்குமார் கேட்டார். அதற்கு கணேசன் வங்கி காசோலையை ெகாடுத்துள்ளார். ஆனால் வங்கி கணக்கில் பணம் இல்லை என காசோலை திரும்பி வந்துவிட்டது.

    இதுகுறித்து தேனி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோர்ட்டு உத்தரவுப்படி தேனி போலீசார் கணேசன், சஞ்சய், கீதா ஆகிய 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அமுதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.
    • ஜெயகுமாருக்கும், அமுதாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கம்பம் போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்த கம்பம் மெட்டு காலனி பகுதியை சேர்ந்த அமுதாவுடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் 2 பேரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர். அமுதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் உள்ளார். ஜெயகுமாருக்கும், அமுதாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதில் அவர் அமுதாவை தாக்கியதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    பின்னர் அமுதா வழக்கை திரும்ப பெற்றதால் ஜெயக்குமார் மீண்டும் பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் அமுதாவுடன் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர் அமுதாவை அடித்து, உதைத்து கழுத்தை நெரித்து கொன்றார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் ஜெயக்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை சஸ்பெண்டு செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார்.

    • தேனியில் முதல் புத்தகத் திருவிழாவினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்தார்.
    • இப்புத்தக திருவிழா 12ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

    தேனி:

    தேனி அருகே பழனி செட்டிபட்டி பேரூராட்சி க்குட்பட்ட மேனகா மில் மைதானத்தில் முதல் புத்தகத் திருவிழாவினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏ.க்கள் மகாராஜன் (ஆண்டிபட்டி), சரவண க்குமார் (பெரியகுளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் தெரிவித்ததாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ-மாணவிகளை அறிவு சார்ந்த சமுதாயமாக உருவாக்கிடும் பொருட்டும், அவர்களது கல்வி தர த்தினை மேம்படுத்திடுகின்ற வகையில், பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களை தீட்டி வருகிறார்கள்.

    உள்ளாட்சித்துறை மற்றும் துணை முதல்-அமைச்சராக இருந்த போது, தமிழ்நாட்டில் 12 ஆயிர யித்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகளிலும் நூலக ங்களை உருவாக்கி தந்தார். அந்த நூலகங்களுக்கு புத்த கங்களை வழங்கி வருவதன் மூலம் அனைத்து தரப்பு மாணவ- மாணவி கள் பயனடைந்து வரு கின்றனர்.

    பெண் கல்வியை ஊக்க ப்படுத்திடும் பொருட்டு முன்னாள் முதல்-அமை ச்சர் கருணாநிதி திருமண உதவித்தொகை திட்ட த்தினை செயல்படுத்தினார். அதனைத்தொடர்ந்து மாணவிகளும் உயர் கல்வி பயில வேண்டும் என்பதனை உருவாக்கிடும் பொருட்டு புதுமைப் பெண் திட்ட த்தினை செயல்படுத்தி மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிேலயே தலைசிறந்த திட்டமாக திகழ்ந்து வருகிறது.

    அதனடிப்படையில் "இல்லம் தேடிக்கல்வி திட்டம்" ஆரம்பப்பள்ளி பயிலுகின்ற மாணவ, மாணவிகளின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்திடும் வகையில் "எண்ணும் எழுத்தும்" திட்டம், நாளைய சமுதாயம் வெறும் ஏட்டுக் கல்வியாக மட்டும் அல்லாமல் பல்திறன் வளர்க்கும் கல்வியாக மேம்படுத்திட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு முதல்வரின் கனவுத்திட்டமான "நான் முதல்வன்" திட்டம், ஸ்மார்ட் கிளாஸ் போன்ற பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்கள் செயல்படுத்த ப்பட்டு வருகிறது.

    தேனி மாவட்டத்தில் முதல் புத்தகத் திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. இப்புத்தக திருவிழா 12ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

    இப்புத்தகத் திருவிழாவில் கவிஞர் வைரமுத்து போன்ற பல்வேறு முக்கிய பிரமுகர்களின் பட்டிமன்ற ங்கள், சிறப்புரைகள், கலைநிகழ்ச்சிகள் தின ந்தோறும் நடைபெற வுள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், 10-க்கும் மேற்பட்ட அரசுத்துறை சார்ந்த அரங்குகள், பாரம்பரிய உணவக அரங்கு கள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்ச ங்கள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவி யர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற வுள்ளன.

    மாணவ-மாணவி களுக்கு கல்வி பயிலுவது ஒன்றே சிறந்த செல்வமாகும். எனவே மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இப்புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு அறிவு சார்ந்த புத்தகங்களை அதிக அளவில் வாங்கி அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    இதில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஸ் டோங்கரே, முன்னாள் எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரேசன் கடையில் வழங்கப்பட்ட துவரம் பருப்பில் வண்டுகள் அதிகளவில் காணப்பட்டது.
    • அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தரமான பொருட்கள் சரியான எடையுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருச நாடு அருகே சிங்கராஜபுரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.

    இன்று இந்த கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்ய ப்பட்டது. பொருட்கள் வாங்குவதற்காக அதிகாலை முதலே பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

    இந்த நிலையில் காலை 8 மணி அளவில் கடை திறக்க ப்பட்டு பொருட்கள் வினி யோகம் செய்யப்பட்டது. அப்போது கடையில் வழங்கப்பட்ட துவரம் பருப்பில் வண்டுகள் அதிகளவில் காணப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் ரேஷன் கடை பணியாளர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது ரேஷன் கடை பணியாளர்கள் முறையான பதில் அளிக்கவில்லை. அதனால் கோபமடைந்த பொதுமக்கள் சிலர் துவரம் பருப்பை வாங்கி அதனை கடைகளுக்கு முன்பாக கொட்டி விட்டு சென்றனர். இதேபோல சிங்கராஜபுரம் ரேஷன் கடையில் கடந்த சில மாதங்களாக அரிசி உள்ளிட்ட பொருட்கள் எடை அளவு குறைவாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    மாவட்ட அதிகாரிகள் சிங்கராஜபுரம் ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டு தரமான பொருட்கள் சரியான எடையுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அங்கன்வாடி மையம், ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் ரேசன் கடை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • வளர்ச்சித்திட்டப்பணிகள், முடிவுற்ற பணிகள் அதற்காக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் செயல் பாடுகள் குறித்தும் கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்தி ற்குட்பட்ட குன்னூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் ரேசன் கடை ஆகியவற்றின் செயல்பாடு கள் குறித்து கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, வருகை பதிவேடுகள், கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்தும், கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வகுப்பறை களுக்கு நேரடியாக சென்று மாணவ, மாணவிகளிடம் கல்வி பயிலும் முறை குறித்து கலந்துரையாடினார்.

    அதனைத்தொடர்ந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, உள் நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளின் எண்ணிக்கை, எடை அளவிடும் கருவி, அங்குள்ள விளையாட்டு பொருட்கள், குழந்தைகளுக்கு வழங்க ப்படும் உணவு வகைகள் அதன் தரம் ஆகியன குறித்தும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள், முடிவுற்ற பணிகள் அதற்காக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    • முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால் தேனி மாவட்ட குடிநீருக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
    • மழை கைகொடுக்கும்பட்சத்தில் மட்டுமே கோடைகாலத்தில் குடிநீர்தட்டுப்பாடை சமாளிக்கமுடியும்.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதரமாக உள்ளது. 152அடி உயரம் உள்ள அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.

    கடந்த ஜனவரி மாதத்தில் அணையின் நீர்மட்டம் 142 அடிவரை உயர்ந்தது. அதனைதொடர்ந்து பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக குறைந்து வருகிறது. கடந்த 2 மாதத்தில் 22 அடி வரை நீர்மட்டம் குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.75 அடியாக உள்ளது.

    அணைக்கு 48 கனஅடிநீர் வருகிறது. 467 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால் தேனி மாவட்ட குடிநீருக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாத நிலையில் நேற்று சாரல் மழை பெய்தது. இருந்தபோதும் நீர்வரத்து குறைவாகவே உள்ளது. எனவே மழை கைகொடுக்கும்பட்சத்தில் மட்டுமே கோடைகாலத்தில் குடிநீர்தட்டுப்பாடை சமாளிக்கமுடியும்.

    வைகை அணையின்நீர்மட்டம் 54.59 அடியாக உள்ளது. 292 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. 25 கனஅடிநீர் வருகிறது. 65 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 43.62 அடியாக உள்ளது. 16 கனஅடிநீர் வருகிறது. 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    • தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது.
    • செய்முறை தேர்வில் தான் பங்கேற்க விரும்புவதாக மாணவி தனது தாயாரிடம் தெரிவித்தார்.

    தேனி :

    தேனி பங்களாமேடுவை சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது 47). டீக்கடை தொழிலாளி. இவருடைய மகள் கங்கா. இவர் தேனி நாடார் சரசுவதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் பவுன்ராஜ் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

    இந்தநிலையில், தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. தந்தை இறந்த துக்கம் தாங்காமல், கதறி அழுத மாணவிக்கு செய்முறை தேர்வை எழுத வேண்டும் என்ற தவிப்பும் இருந்தது. செய்முறை தேர்வில் தான் பங்கேற்க விரும்புவதாக மாணவி தனது தாயாரிடம் தெரிவித்தார்.

    தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க உறவினர்கள் வீட்டுக்கு வந்திருந்த நிலையில், மாணவி கங்கா பள்ளிக்கு புறப்பட்டுச் சென்று செய்முறை தேர்வில் பங்கேற்றார். தேர்வு முடிந்து வந்து தனது தந்தையின் இறுதிச்சடங்கில் மாணவி பங்கேற்றார்.

    தந்தையின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியபோதிலும், அந்த சூழலில் தேர்வில் மாணவி பங்கேற்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • வைகை அணையில் மீன் பிடிக்கும் குத்தகையை தனியாருக்கு விட அரசு முடிவு செய்துள்ளது.
    • அரசின் முடிவை கைவிட வலியுறுத்தியும் மீனவர்கள் வைகை அணை மீன்வள த்துறை அலுவலகம் முன் போராட்டம் செய்தனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே வைகை அணை நீர் தேக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் மீன்வளத்துறை மூலம் மீன் குஞ்சுகள் லட்ச க்கணக்கில் விடப்படுகிறது.

    மீன் குஞ்சுகள் வளர்ந்த பின் பதிவு பெற்ற மீனவ சங்க உறுப்பினர்கள் மீன்கள் பிடிக்கின்றனர். அைவ மீன்வளத்துறை மூலம் விற்பனை செய்யப்படுகிறது. பதிவு பெற்ற 115 பரிசல்கள் மூலம் 230 மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். இதன்மூலம் மட்டுமே அவர்கள் வருவாய் ஈட்டி வந்தனர்.

    இந்நிலையில் வைகை அணையில் மீன் பிடிக்கும் குத்தகையை தனியா ருக்கு விட அரசு முடிவு செய்துள்ளது.

    மீன்பிடி குத்தகையை தனியாருக்கு விடுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும். மேலும் மீன் பிடி குத்தகையை தனியாருக்கு விடும் பட்சத்தில் வைகை அணை நீர் தேக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அரசின் முடிவை கைவிட வலியுறுத்தியும் மீனவர்கள் வைகை அணை மீன்வள த்துறை அலுவலகம் முன் போராட்டம் செய்தனர். பின்னர் மீன்வளத்துறை சார்பு ஆய்வாளர் கலையரசி யிடம் மீனவர்கள் மனு கொடுத்தனர்.

    • இளம்பெண் உடலில் தீ வைத்து கொண்டதால் படுகாயமடைந்தார்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி அருகே சின்னமனூர் ஓடைப்பட்டி பி.கே.எஸ்.நகரை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ் மனைவி மீனா(20). இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி திருமணம் நடந்தது. கணவன்-மனைவி தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் வேலைநிமித்தமாக சென்னைக்கு சென்றார். இதனால் மீனா தனது தாய்வீட்டில் தங்கியிருந்தார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று திடீரென தனது உடலில் தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த தாய் செல்வி, மீனாவை மீட்டு முதலுதவி செய்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சிகிச்சையில் இருந்தபோது தனக்கு வாழ பிடிக்கவில்லை என தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டமும் வேகமாக சரிந்து வந்தது.
    • கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் பனிப்பொழிவை தொடர்ந்து கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவியது. மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டமும் வேகமாக சரிந்து வந்தது. இதனால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

    எனவே மழை பெய்ய வேண்டும் என எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் இன்று காலை மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. கம்பம், உத்தமபாளையம், போடி, பெரியகுளம் உள்படபல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வைகை அணையின் நீர்மட்டம் 54.49 அடியாக உள்ளது. அணைக்கு 258 கனஅடிநீர் வருகிறது. நேற்று வரை 769 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலை பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 119.95 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 467 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42.25 அடியாக உள்ளது. 25 கனஅடிநீர் வருகிறது. 65 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 44.93 அடியாக உள்ளது. 16 கனஅடிநீர் வருகிறது. 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    ×