என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water levels down"

    • பருவமழையின்போது நிரம்பியிருந்த அணை கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், மழைப்பொழிவு இல்லாததாலும் வேகமாக சரிந்து வருகிறது.
    • இதனால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியுமா என அச்சம் எழுந்துள்ளது.

    கூடலூர்:

    கேரளமாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதரமாக உள்ளது.

    பருவமழையின்போது நிரம்பியிருந்த அணை கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், மழைப்பொழிவு இல்லாததாலும் வேகமாக சரிந்து வருகிறது. மழையை எதிர்பார்த்த பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சாரல்மழை பெய்தது. அதனைதொடர்ந்து வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியுமா என அச்சம் எழுந்துள்ளது.

    அணையின் நீர்மட்டம் 119.25 அடியாக உள்ளது. 50 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 467 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 54.79 அடியாக உள்ளது. அணைக்கு 222 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.25 அடியாக உள்ளது. 26 கனஅடிநீர் வருகிறது. 65 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 39.36 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    ×