என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்ட தரமற்ற ரேசன் பொருட்கள்.
வருசநாடு அருகே ரேசன் கடையில் தரமற்ற பொருட்கள் வினியோகம் பணியாளர்களுடன் மக்கள் வாக்குவாதம்
- ரேசன் கடையில் வழங்கப்பட்ட துவரம் பருப்பில் வண்டுகள் அதிகளவில் காணப்பட்டது.
- அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தரமான பொருட்கள் சரியான எடையுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருச நாடு அருகே சிங்கராஜபுரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.
இன்று இந்த கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்ய ப்பட்டது. பொருட்கள் வாங்குவதற்காக அதிகாலை முதலே பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
இந்த நிலையில் காலை 8 மணி அளவில் கடை திறக்க ப்பட்டு பொருட்கள் வினி யோகம் செய்யப்பட்டது. அப்போது கடையில் வழங்கப்பட்ட துவரம் பருப்பில் வண்டுகள் அதிகளவில் காணப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் ரேஷன் கடை பணியாளர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ரேஷன் கடை பணியாளர்கள் முறையான பதில் அளிக்கவில்லை. அதனால் கோபமடைந்த பொதுமக்கள் சிலர் துவரம் பருப்பை வாங்கி அதனை கடைகளுக்கு முன்பாக கொட்டி விட்டு சென்றனர். இதேபோல சிங்கராஜபுரம் ரேஷன் கடையில் கடந்த சில மாதங்களாக அரிசி உள்ளிட்ட பொருட்கள் எடை அளவு குறைவாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட அதிகாரிகள் சிங்கராஜபுரம் ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டு தரமான பொருட்கள் சரியான எடையுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






