என் மலர்
உள்ளூர் செய்திகள்

புத்தக திருவிழாவை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அருகில் கலெக்டர் ஷஜீவனா உள்பட பலர் உள்ளனர்.
தேனியில் முதல் புத்தக திருவிழா அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்தார்
- தேனியில் முதல் புத்தகத் திருவிழாவினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்தார்.
- இப்புத்தக திருவிழா 12ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
தேனி:
தேனி அருகே பழனி செட்டிபட்டி பேரூராட்சி க்குட்பட்ட மேனகா மில் மைதானத்தில் முதல் புத்தகத் திருவிழாவினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏ.க்கள் மகாராஜன் (ஆண்டிபட்டி), சரவண க்குமார் (பெரியகுளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர் தெரிவித்ததாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ-மாணவிகளை அறிவு சார்ந்த சமுதாயமாக உருவாக்கிடும் பொருட்டும், அவர்களது கல்வி தர த்தினை மேம்படுத்திடுகின்ற வகையில், பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களை தீட்டி வருகிறார்கள்.
உள்ளாட்சித்துறை மற்றும் துணை முதல்-அமைச்சராக இருந்த போது, தமிழ்நாட்டில் 12 ஆயிர யித்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகளிலும் நூலக ங்களை உருவாக்கி தந்தார். அந்த நூலகங்களுக்கு புத்த கங்களை வழங்கி வருவதன் மூலம் அனைத்து தரப்பு மாணவ- மாணவி கள் பயனடைந்து வரு கின்றனர்.
பெண் கல்வியை ஊக்க ப்படுத்திடும் பொருட்டு முன்னாள் முதல்-அமை ச்சர் கருணாநிதி திருமண உதவித்தொகை திட்ட த்தினை செயல்படுத்தினார். அதனைத்தொடர்ந்து மாணவிகளும் உயர் கல்வி பயில வேண்டும் என்பதனை உருவாக்கிடும் பொருட்டு புதுமைப் பெண் திட்ட த்தினை செயல்படுத்தி மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிேலயே தலைசிறந்த திட்டமாக திகழ்ந்து வருகிறது.
அதனடிப்படையில் "இல்லம் தேடிக்கல்வி திட்டம்" ஆரம்பப்பள்ளி பயிலுகின்ற மாணவ, மாணவிகளின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்திடும் வகையில் "எண்ணும் எழுத்தும்" திட்டம், நாளைய சமுதாயம் வெறும் ஏட்டுக் கல்வியாக மட்டும் அல்லாமல் பல்திறன் வளர்க்கும் கல்வியாக மேம்படுத்திட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு முதல்வரின் கனவுத்திட்டமான "நான் முதல்வன்" திட்டம், ஸ்மார்ட் கிளாஸ் போன்ற பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்கள் செயல்படுத்த ப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் முதல் புத்தகத் திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. இப்புத்தக திருவிழா 12ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
இப்புத்தகத் திருவிழாவில் கவிஞர் வைரமுத்து போன்ற பல்வேறு முக்கிய பிரமுகர்களின் பட்டிமன்ற ங்கள், சிறப்புரைகள், கலைநிகழ்ச்சிகள் தின ந்தோறும் நடைபெற வுள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், 10-க்கும் மேற்பட்ட அரசுத்துறை சார்ந்த அரங்குகள், பாரம்பரிய உணவக அரங்கு கள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்ச ங்கள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவி யர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற வுள்ளன.
மாணவ-மாணவி களுக்கு கல்வி பயிலுவது ஒன்றே சிறந்த செல்வமாகும். எனவே மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இப்புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு அறிவு சார்ந்த புத்தகங்களை அதிக அளவில் வாங்கி அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இதில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஸ் டோங்கரே, முன்னாள் எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






